Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீனா மீது கோபத்தில் முத்து. ரவிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

sirakadikka aasai serial episode update 26-10-23

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் மீனா கோவிலுக்கு வந்து நான் என்னதான் பண்றது, நீதான் வழி காட்டணும் என சாமி இடம் வேண்டி விட்டு செல்ல அப்போது மீனாவுக்கு தெரிந்த ஒரு பெண்மணி சீதா நடந்த விஷயம் எல்லாத்தையும் சொன்னா பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்னு சொல்வாங்க, அது போல உன் நிலைமை ஆயிடுச்சு. நீ முத்து கிட்ட உன் பக்கம் நியாயத்தை எடுத்து சொல்லு, அது கண்டிப்பா புரிஞ்சிக்கும் என்று சொல்ல மீனா முத்துவை பார்க்க கிளம்புகிறார்.

மறுபக்கம் ரவி ஸ்ருதிக்காக சமைத்துக் கொண்டு இருக்க அங்கு வந்த ஸ்ருதி ஜாலியாக பேசி பிறகு வெளியே போகலாம் என்று கூப்பிட ரவி எனக்கு வெளியே வரவே விருப்பமில்லை என்று சொல்ல எப்ப பார்த்தாலும் உன்னுடைய பேரன்ஸ் பத்தியே நெனச்சிட்டு இருக்க என்று கோபப்பட பிறகு இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி ஸ்ருதி ஸ்டுடியோவுக்கு கிளம்பி விடுகிறார். ரவி ரெஸ்டாரன்ட்க்கு கிளம்பி விட வழியில் பிஜு இவர்களை பார்த்து நீங்க எப்படி சந்தோஷமா இருக்கீங்கன்னு பாக்கலாம் என்று பிளான் போடுகிறார்.

அதைத் தொடர்ந்து மீனா முத்துவின் கால் செட்டுக்கு வர முத்து கார் எடுத்துக்கொண்டு கிளம்ப மீனா கார் எதிரே வந்து நின்றுவிட முத்து இங்க எதுக்கு வந்த என சத்தம் போட மீனா தன் பக்க நியாயத்தை எடுத்து சொல்ல முயற்சி செய்ய முத்து அதைக் கேட்காமல் உதாசீனம் செய்கிறார். இதனால் மீனா நீங்க தேடி வரும்போது நான் இருக்க மாட்டேன் அப்போ உங்களுக்கு என் வலி புரியும் என சொல்லி அங்கிருந்து கிளம்பி செல்கிறார்.

அடுத்து ரவி ரெஸ்டாரண்ட் வர செக்யூரிட்டி முத்துக்கு தகவல் கொடுக்க முத்து தன்னுடைய நண்பனை கூட்டிக்கொண்டு ரவியை அடிக்க ரெஸ்டாரண்ட் வருகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka aasai serial episode update 26-10-23
sirakadikka aasai serial episode update 26-10-23