தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் மீனா சமைத்துக் கொண்டு இருக்க அங்கு வரும் விஜயா நீ என்னை வெறுப்பேத்தறதுக்கு தானே போய் தாலி கட்டிக்கிட்டு வந்த? ரொம்ப ஓவரா தான் பண்ணிக்கிட்டு இருக்க இன்று கோபப்பட நான் எதுக்கு அத்தை உங்கள வெறுப்பு ஏத்தணும் அவர் கையால தாலி கட்டிக் கொண்டு ஆசையா இருந்தது கட்டிக்கிட்டேன் அவ்வளவுதான் என்று பதில் அளிக்கிறார்.
இதனை தொடர்ந்து முத்து கல்யாண போட்டோவை அண்ணாமலையிடம் காட்ட அதை பார்த்து அண்ணாமலை நல்லா இருக்கு என்று கூறுகிறார். ரவியின் ஃபோட்டோ சூப்பரா இருக்கு என்று சொல்ல ஸ்ருதி இந்த போட்டோல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மீனா என்று கூறுகிறார். விஜயாவிடம் காட்ட ஆமா பெரிய போட்டோ என அலுத்துக் கொள்கிறார். மனோஜ் போட்டோவை பார்த்து என்னடா கிளாரிட்டியே இல்ல என்று கேட்க முத்து திட்டுகிறார்.
அதன் பிறகு போட்டோவை ஃப்ரேம் போட்டு ஆள மாட்ட போறதா சொல்ல எதுக்கு ஹால்ல மாட்டணும்? ரூம்ல மாட்டிக்க என்று விஜயா கூறுகிறார். ஹால்ல மாட்டுனா என்ன தப்பு என்று அண்ணாமலை கேட்க விஜயா அங்க எங்க இடம் இருக்கு என்று சொல்ல ஏன் இந்த ஓடுகாளி போட்டோ எல்லாம் மாட்டி வைத்திருக்கும் போது எங்க போட்டோ என்ன என்று பதிலடி கொடுக்கிறார். இப்ப வரைக்கும் சின்னதா பிரேம் போட்டு மாட்டலாம் என்று தான் இருந்தேன் ஆனா இப்போ பெருசா பிரேம் போட்டு மாட்ட போறேன் என்று விஜயாவுக்கு ஷாக் கொடுக்கிறார் முத்து.
அடுத்து முத்துவும் மீனாவும் ரூமுக்குள் ரொமான்ஸ் செய்து சந்தோஷமாக சிரிக்க இன்னொரு பக்கம் சுருதி ரவி கேம் விளையாடி கொண்டிருக்க ரவி ஸ்ருதியிடம் தோற்றுப் போக இருவரும் ஒருவரை ஒருவர் கலாய்த்து சிரித்து சந்தோஷப்படுகின்றனர்.
அடுத்து மனோஜ் தூங்கிக் கொண்டிருக்கும் போது வெயிட்டர் போல என்னென்ன இருக்கு என்று ஹோட்டலில் அப்படியே ஒப்பிக்க ரோகினி அதை கேட்டு அதிர்ச்சி அடைந்து அவரை எழுப்ப சாயங்காலம் பஜார்ல நடந்து போயிட்டு இருந்தது அப்போ ஒரு கடையில வடை போடுவது பார்த்தேன். சாப்பிடணும்னு ஆசையா இருந்துச்சு உன்ன விட்டு சாப்பிட மனசு இல்ல. அந்த கடையில மெனு கார்ட் படிச்சேன் எனக்கு ஒரு விஷயத்தை படிச்சா அது அப்படியே மனசுல பதிஞ்சிடும் அதான் தூக்கத்துல உளறி இருக்கேன் என்று சொல்ல ரோகினி முறைக்க மனோஜ் மாட்டிகிட்டேன் போலயே என்று தவிக்க கடைசியாக ரோகிணி சிரித்து மனோஜ்க்கு கிச்சு கிச்சு மூட்டி சந்தோஷப்பட மாறி மாறி எல்லாரும் சிரிப்பு சத்தம் வருவதைக் கேட்டு விஜயா அண்ணாமலையை எழுப்பி புலம்புகிறார்.
மறுநாள் மீனா பூ கடையில் இருக்க ரோகிணி வெளியில் சென்று ஏதோ பார்சல் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும்போது எனக்கும் மனோஜ்க்கும் எதுவும் சமைக்க வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். பிறகு பார்சலை டேபிளில் வைத்து ரூமுக்குள் சென்று மனோஜ் கூட்டி வருவதற்குள் முத்து மீனா வாங்கி வைத்திருப்பதாக நினைத்து பார்சலை பிரித்து சாப்பிட ரோகினி அதிர்ச்சி அடைகிறார்.
மனோஜ் ஏண்டா யார் வாங்கிட்டு வந்தது என்று கேட்டு சாப்பிட மாட்டியா என்று சண்டை போட டேபிள் மேல இருந்துச்சு சாப்பிட்டேன் என்று கூறுகிறார். அது எங்களுடையதுன்னு சொல்லிக்கிட்டே இருக்கோம் நீ சாப்பிட்டுகிட்டே இருக்க என்று சொல்ல, சாப்பிட ஆரம்பிச்சிட்டா முடிக்காமல் விடக்கூடாது அதான் என்று முத்து தொடர்ந்து சாப்பிட மீனா அண்ணாமலையிடம் அவர் நான் வாங்கி வைத்ததுனு தெரியாம சாப்பிட்டாரு என்று சொல்ல விஜய்யா இவன் வம்பு இழுக்கறதுக்கு இப்படி பண்றான் என கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
