sirakadikka-aasai-serial-episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இது சீரியலில் இன்றைய எபிசோட்டில் கல்யாண ஏற்பாடுகள் எல்லாத்தையும் செய்திருக்க தாலியை எடுத்து வந்து கொடுக்க முத்துவுடன் மீனா தாலி எடுத்து கட்டுங்க என்று சொல்ல என்னது நான் கட்டிக்கணுமா? அதெல்லாம் இந்த ஊர்ல பழக்கம் கிடையாது என்று சொல்கிறார்.
என் கழுத்துல கட்டுங்க என்று முத்து அதான் ஏற்கனவே கட்டிடேனே என்று கூறுகிறார். ஒரு அவசரத்துல தாலி கழட்டி கொடுத்தேன் திரும்பவும் உங்க கையால கட்டிக்கணும்னு ஆசையா இருந்தது என்று சொல்ல மீனாவின் அம்மாவும் முதல் தடவை கல்யாணம் நடக்கும்போது விருப்பமில்லாம தான் நடந்தது அதனால முழு மனசோட திரும்பவும் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்ட அதனால்தான் ஏற்பாடு செய்தோம் என்று கூறுகிறார்.
பிறகு முத்து நானும் அப்படித்தான் அப்பா சொன்னாங்கன்னு தாலி கட்டிட்டேன் உன் முகத்தை கூட முழுசா பார்க்கல என்று கூறுகிறார். பிறகு முத்து இப்போ உன்னை என் பொண்டாட்டியா முழு மனசோட ஏத்துக்கிட்டு தாலி கட்டுறேன் என்று மீனா கழுத்தில் தாலி கட்ட சந்தோஷப்படுகிறார். பிறகு மீனாவின் அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்கி போட்டோக்களை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வருகின்றனர்.
மாலையை எதுக்கு இன்னும் வெச்சிட்டு இருக்க என்று முத்து கேட்க அதுக்குள்ள தூக்கி போடவா முடியும் கொஞ்ச நாள் வீட்ல இருக்கட்டும் என்று சொல்ல நான் தூக்கி போட சொல்லியே கழுத்துல போடு என்று மீனா கழுத்தில் மாலையை போட்டு இப்படியே போனா அப்பா ரொம்ப சந்தோஷப்படுவார் என்று வந்து நிற்க இதை பார்த்து அண்ணாமலை என்ன மாலையும் கழுத்துமாக வந்து நிற்கிறீர்கள் என்று கேட்க கல்யாணம் பண்ணிக்கிட்ட விஷயத்தை கூறுகின்றனர்.
அண்ணாமலை ரொம்ப சந்தோஷப்பட இவங்களுக்கு தான் ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு திரும்ப எதுக்கு? கல்யாணம் ஒரு முறை தான் பண்ணிப்பாங்க இவங்க என்ன திரும்பத் திரும்ப பண்ணிக்கிறாங்க, அப்போது முதல்ல நடந்தது என்ன பொம்ம கல்யாணமா? என்று கேட்க முத்து ஆமா முதல்ல நடந்தது பொம்மை கல்யாணம்தான் அப்பா சொன்னார்னு நான் தாலி கட்டிட்டேன் என்று கூறுகிறார். அதேபோல் மீனா நானும் அப்படித்தான் அம்மா சொன்னாங்கன்னு மனமேடையில் உட்கார்ந்து விட்டேன் இந்த வாழ்க்கை நிலைக்கும்னு நினைச்சு தாலி கட்டிக்கல என சொல்கிறார்.
ஆனா இப்போ ரெண்டு பேரும் முழு மனசோட முழு காதலோட கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என்று முத்து கூறுகிறார். மீனாவும் இப்ப எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என சொல்கிறார். இதைக் கேட்டு அண்ணாமலை சந்தோஷப்படுகிறார். மனோஜ் இவங்களுக்கு தான் ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு எத்தன முறை கல்யாணம் பண்ணுவாங்க என்று கேட்க எத்தனை முறை வேணாலும் கல்யாணம் பண்ணலாம் ஆனா கல்யாணத்திலிருந்து ஓடிப் போகாம இருக்கணும் என்று மனோஜ்க்கு பதிலடி கொடுக்கிறார் முத்து .
பிறகு அண்ணாமலை விஜயாவை விட்டு ஆரத்தி எடுக்க வைக்க முத்து மீனாவை விளக்கேற்ற கூட்டிச் செல்ல மீனா விளக்கேற்ற இருவரும் சாமி கும்பிட்டு வெளியே வந்து அண்ணாமலை மற்றும் விஜயாவிடம் ஆசிர்வாதம் வாங்குகின்றனர்.
பிறகு முத்து ஐயருக்கு போன் பண்ணி வீட்டுக்கு வர சொல்ல அண்ணாமலை அதான் கல்யாணம் முடிந்துவிட்டதே அப்புறம் எதுக்கு என்று கேட்க சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடு பண்ணனும்ல என்று சொல்ல மனோஜ் அப்ப என்ன இவ்வளவு நாளா லிவிங் டுகெதர்லயா இருந்தீங்க என்று கேட்க நீ ஒரு பொண்ணு கூட சுத்திட்டு இருந்தியே அந்த மாதிரி நினைச்சியா உன்னை மாதிரி கிடையாது நான் என்று முத்து ஆப்பு வைக்கிறார். மீனா வெக்கப்பட்டு ஏங்க வாங்க உள்ள என்று ரூமுக்கு அழைத்து சென்று விடுகிறார்.
பிறகு ரோகிணி விஜயாவிடம் என்ன ஆண்ட்டி இதெல்லாம் ரொம்ப ஓவரா பண்றாங்க என்று கேட்க ஆமாமா நீ உங்க அப்பா கிட்ட சொல்லி சீக்கிரம் வர சொல்லு அவர் வந்து உனக்கு பெருசா ஏதாவது செய்யணும் அப்புறம் எதுக்கு இந்த மீனாவுக்கு என்று சொல்லிவிட்டு போக ரோகினி இவங்க எதுக்கெடுத்தாலும் என் கிட்டயே வராங்க என்று புலம்புகிறார்.
அடுத்து மீனா கிச்சனில் சமைத்துக் கொண்டு இருக்க அங்கு வந்த விஜயா என்ன வெறுப்பேத்துறதுக்கு தானே முத்துவை கூட்டிட்டு போயிட்டு தாலி கட்டிட்டு வந்த என்று வம்பிழுக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…
72வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து எழுந்த அரசியல்…
நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்த ‘OKUU’ என்ற பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ்…
இயக்குநர் ராம் இயக்கத்தில், நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் வெளியீட்டு…
The India Story Official Trailer - Tamil| Kajal A Kitchlu | Shreyas Talpade |Chettan DK…