விஜயா போட்ட பிளான். முத்து செய்த வேலை. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பார்வதி வீட்டுக்கு வந்த விஜயா ஸ்ருதியோடு அம்மா 50 சவரன் நகை எடுத்து வந்து கொடுத்தாலும் அந்த மீனா இதுலயும் ஒரு ஏழரை கூட்டிட்டா என்று நடந்த விஷயத்தை சொல்கிறார்.

அவங்க அம்மாகிட்ட மீனா ஒன்னும் இல்லாம தான் இந்த வீட்டுக்கு வந்தாங்கன்னு சொன்னேன் அவ அழுது புலம்பி ஒரு டிராமா போட்டு நகையெல்லாம் கழட்டி கொடுத்துட்டா. அந்த முத்துவுமே நான் உயிர் இருக்கிற வரைக்கும் வீட்ல சந்தோஷமாகவே இருக்க முடியாது எங்க ஸ்ருதி வீட்டை விட்டு கிளம்பிட்டு வாழனும்னு பயமா இருக்கு அதுக்கு தான் ஒரு முடிவு பண்ணி இருக்கேன் என்று கூறுகிறார்.

பார்வதி என்ன முடிவு என்று கேட்க அந்த முத்துவையும் மீனாவையும் மொத்தமாக வீட்டை விட்டு வெளியே அனுப்பனும். அதுக்கான வேலையை இன்றையிலிருந்து தொடங்க போறேன் என்று சொல்கிறார்.

மறுநாள் காலையில் மீனா சமைத்துக் கொண்டு இருக்க கிச்சனுக்கு வரும் விஜயா ஸ்ருதிக்கு குளிக்க தண்ணி வேண்டும் கரண்ட் இல்ல சுடுதண்ணி போடு என்று கூறுகிறார். மீனாவும் தண்ணி போட பிறகு அதை எடுத்து போய் ரூமில் வைத்து விடு என்று சொல்லி வேலை வாங்குகிறார்.

பிறகு ரோகிணிக்கு சுடுதண்ணி போட வேண்டும் மனோஜ்க்கு சுடுதண்ணி போட வேண்டும் என அடுக்கிக் கொண்டே போக முத்து மீனாவை விடாமல் வாங்கிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று சத்தம் போடுகிறார். ஒரு கட்டத்தில் மனோஜ் எனக்கு பச்சைத்தண்ணீர் போதும் எனக்காக யாரும் வேலை செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டு எக்சர்சைஸ் செய்ய மாடிக்கு சென்று விட முத்து யாருக்கும் தெரியாமல் கொதிக்கும் தண்ணீரை எடுத்து போய் பக்கெட்டில் ஊற்றி வைத்து வந்து விடுகிறார்.

இது தெரியாமல் தண்ணீர் சூடாக எடுத்து ஊற்றிக் கொள்ளும் மனோஜ் வெளியில் வந்து கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய முத்து தான் இந்த வேலை செய்தது என தெரிய வர விஜயா மற்றும் ரோகினி இருவரும் வாக்குவாதம் செய்கின்றனர். சும்மா சும்மா மீனா வேலை வாங்கிட்டு இருந்தா இப்படித்தான் செய்வேன் என வார்னிங் கொடுத்துவிட்டு உள்ளே செல்கிறார் முத்து.

அதனைத் தொடர்ந்து அண்ணாமலை வீட்டுக்கு வர விஜயா நடந்த விஷயத்தை சொல்ல முத்து இந்த வீட்ல மீனா மட்டும்தான் மருமகளா இருக்காளா எல்லாரும் மாத்தி மாத்தி அவளை வேலை வாங்கிட்டே இருக்காங்க என்று முத்து விளக்கம் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறார்.

பிறகு விஜயா இந்த முத்து மற்றும் மீனாவால் தினமும் இந்த வீட்டில் பிரச்சனை தான் வீடு குப்பை மேடா ஆயிடுச்சு, அதனால நான் யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுத்து இருக்கேன் என்று சொல்ல முதலில் நீ முடிவு சொல்லு அதுக்கப்புறம் அது நல்ல முடிவா இல்லையா என்பதை நான் சொல்றேன் என அண்ணாமலை கூறுகிறார். இல்ல நானும் மூணு மருமகள்களோட சந்தோஷமா இருக்கணும் தானே நினைச்சேன் ஆனா அது நடக்காது போல. அதனால முத்துவையும் மீனாவையும் தனி கொடுக்கணும் வச்சிடலாம் அவங்க அப்பப்ப இங்க வந்துட்டு போகட்டும், என்று சொல்ல அண்ணாமலை அதிர்ச்சி அடைகிறார்.

இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் நீ உன்னுடைய முடிவு சொல்லிட்ட நான் என்னுடைய முடிவு சொல்ல கொஞ்சம் நாட்கள் வேண்டும் என்று சொல்ல விஜயா இங்க கோபப்படுவீங்கன்னு நினைச்சேன் ஆனா இப்படி சொல்லி இருக்கிறது எனக்கு சந்தோஷம்தான் யோசித்து நல்ல முடிவா சொல்லுங்க என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka aasai serial episode update 22-12-23
jothika lakshu

Recent Posts

தலைமைத்துவமான பண்பு அஜித்திடம் உள்ளது.. நடிகர் சரத்குமார் ஓபன் டாக்..!

கூட்டத்தை கட்டுப்படுத்த அஜித்திடம் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

4 hours ago

ஜனநாயகன் குறித்த கேள்வி சசிகுமார் கொடுத்த பதில்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

ஜனநாயகன் படம் குறித்த கேள்விக்கு சசிகுமார் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…

4 hours ago

அருண் எடுத்த முடிவு, அண்ணாமலை கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண்…

4 hours ago

சுந்தரவல்லி குடும்பத்தை பழிவாங்க நினைக்கும் பரமு, சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

21 hours ago

சிறுத்தை சிவா அஜித் கூட்டணியில் புதிய படம் உருவாகுமா? வெளியான சூப்பர் தகவல்.!!

அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…

21 hours ago

சென்சார் பிரச்சனையில் சிக்கியுள்ள ஜனநாயகன்.. தொடர்ந்து ரிலீசில் வரும் சிக்கல், வெளியான லேட்டஸ்ட் தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…

1 day ago