Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீனா எடுத்த முடிவு. ரோகினிக்கு காத்திருக்கும் ஷாக். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

sirakadikka aasai serial episode update 22-11-23

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா முத்துவை இப்படி போங்க அப்படி போங்க என்று சொல்லி ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்ல முத்து தொடர்ந்து எங்க போறோம் என கேட்டுக்கொண்டே வர மீனா பதில் சொல்லாமல் வழியை மட்டும் சொல்லிக் கொண்டு வருகிறார்.

கடைசியாக மீனா முத்துவை மலைக்கோவில் ஒன்றிற்கு அழைத்து வருகிறார். அங்கு எல்லோரும் மனைவியை கீழிருந்து தூக்கிக்கொண்டு மேலே கோவிலுக்கு செல்வதை பார்த்து முத்து என்ன இது ஏன் இப்படி பண்ணிட்டு இருக்காங்க என கேள்வி கேட்க மீனா இது ஒரு வேண்டுதல் என்று கூறுகிறார்.

மேலும் உங்கள் கார் எப்பொழுதும் உங்ககிட்டயே இருக்கணும் என்பதற்காக நானும் வேண்டிகிட்டேன் நீங்க ரெடியா என்று கேட்க என்னது ரெடியா என முத்து திருப்பி கேட்க என்னை தூக்க தான் என்று சொல்லி ஷாக் கொடுக்கிறார். முத்து அதெல்லாம் என்னால முடியாது என்று சொல்ல அங்கிருந்த ஒருவர் இவர் பார்த்தா பலசாலி மாதிரி தெரியலையே இப்படியே ஓடி விடுவார்களோ என கிண்டல் அடிக்க முத்து அவரை திட்டிவிட்டு மீனாவை தூக்கிக் கொண்டு நடக்க தொடங்குகிறார்.

மீனாவை தூக்கிக்கொண்டு புலம்பி கொண்டே நடக்கிறார் வீட்டோட மளிகை சாமான் பிள்ளை ஏறிக்கிட்டே போறதுக்கு காரணம் என்னன்னு இப்பதான் தெரியுது. நீ வந்ததுக்கப்புறம் 10 கிலோ அரிசி கூட செலவாகுது போல என மீனாவை கிண்டல் அடிக்கிறார். முத்து மோதி ஒரு வழியாக மீனாவை மேலே தூக்கி வந்துவிட பிறகு கார் சாவியை சாமியின் பாதத்தில் வைத்து பூஜை செய்து கொண்டு இங்கு இருந்து கிளம்பி வருகின்றனர்.

வீட்டில் மனோஜ் விஜயாவிடம் வந்து செலவுக்கு பணம் கேட்க அவர் மனோஜை பணத்தை எடுத்துக் கொடுக்கிறார். அதன் பிறகு மனோஜ் ரூமில் இருக்கும்போது ரோகிணியின் வசீகரன் போன் செய்கிறார்.

இந்த நேரத்தில் ரோகிணி இல்லாததால் மனோஜ் போனை எடுத்துப் பேச வசீகரன் பேசாமல் போனை கட் செய்து விடுகிறார். அதன் பிறகு மனோஜ் தனது வேலை குறித்து பில்டப் கொடுத்துவிட்டு கிளம்பிச் செல்ல ரோகிணிக்கு மீண்டும் போன் பண்ணும் வசீகரன் பணத்தைக் கேட்டு மிரட்டுகிறார்.

ரோகினி என்கிட்ட பணம் இல்லை என்று சொல்ல இல்ல நேரா உன் வீட்டுக்கு போக இல்ல மனோஜ் ஆபீஸ்க்கு போய் எல்லாம் உண்மையையும் சொல்லிடுவேன் என அதிர்ச்சி கொடுக்க வேறு வழியில்லாமல் பணத்தை கொடுக்க ஒப்புக்கொள்கிறார். அதைத் தொடர்ந்து வசீகரன் பார்க் ஒன்றுக்கு வர சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

மனோஜ் உட்கார்ந்து இருக்கும் பார்க்கிற்கு ரோகினி செல்ல இருப்பதால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நாளைய எபிசோட்டில் பார்க்கலாம்.

sirakadikka aasai serial episode update 22-11-23
sirakadikka aasai serial episode update 22-11-23