தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகிணி கண் கலங்கி உட்கார்ந்து கொண்டிருக்க வித்யா நான் போய் காபி போட்டு வரேன் காபி குடிச்சிட்டு அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம் என்று கிட்சனுக்கு செல்கிறார்.
திடீரென அழுது கொண்டிருந்த ரோகினி கண்ணைத் துடைத்துக் கொண்டு எழுந்து கிளம்ப வித்யா ரோகினியை காணாமல் மனோஜ்க்கு போன் போட்டு விசாரிக்க மனோஜ் ரோகிணி வெளியே போயிருக்கா என்று கூறுகிறார். இங்கதான் வந்தா அழுதா இப்போ எங்க போனான்னு தெரியல போன் வேற சுவிட்ச் ஆப்னு வருது என்று சொல்ல மனோஜ் பதற்றம் அடைகிறார்.
பிறகு விஜயா மந்திரி விஷயத்தை சொல்ல என்னடா வயித்துல புலியை கரைக்கிற என் மருமக எங்க போனா என்று பதற எல்லாத்துக்கும் இவன் தான் காரணம் இவன் என்ன அவமானப்படுத்தியது தான் காரணம் என்று மனோஜ் முத்துவின் சட்டையை பிடித்து சண்டைக்கு வர இருவருக்கும் இடையே மோதல் உருவாக அண்ணாமலை தடுத்து நிறுத்துகிறார். முதல்ல போய் ரோகிணியை தேடி கண்டுபிடித்து மன்னிப்பு கேட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வா என்று மனோஜை அனுப்ப நான் எங்கப்பா போய் தேடுவ என்று சொல்ல முத்துவை கூட அனுப்புகிறார்.
முத்து மற்றும் மனோஜ் இருவரும் தேடி செல்லும் போது மனோஜ் தொடர்ந்து ரோகிணிக்கு போன் போட்டுக் கொண்டே வர முத்து ஆப் பண்ண போன் ஆன் ஆகாது சும்மா அதே நம்பருக்கு கூப்பிடாம பார்லருக்கு போன் பண்ணி கேளு என கூறுகிறார். பார்லருக்கு போன் செய்து விசாரிக்க வந்தாங்க கலெக்ஷன் பணம் 3 ஆயிரத்தை எடுத்துக்கிட்டு எங்கேயோ கிளம்பி போயிட்டாங்க குமரி பாளையத்துக்கு பஸ் பத்தி விசாரிச்சாங்க என்று சொல்ல இருவரும் புரியாமல் இருக்கின்றனர்.
மீனா போன் போட்டு என்ன ஆச்சு என்று விசாரிக்க முத்து ஏதோ குமரி பாளையத்திற்கு பஸ் பற்றி விசாரிச்சதா சொல்றாங்க என்று கூறுகிறார். அதாங்க கிருஷ், அவனோட பாட்டியும் இருக்கிற ஊர் என்று சொல்ல முத்து நீ கார்ட்டை எடுத்துக்கிட்டு சூப்பர் மார்க்கெட் கிட்ட வந்து வெயிட் பண்ணு நீயும் கூட வா போய் பாத்துட்டு வந்துடலாம் என்று சொல்லி ஃபோனை வைக்கிறார்.
வரும் வழி எல்லாம் முத்து பாட்டு பாடி மனோஜை வெறுப்பேற்றிக் கொண்டே வருகிறார். மனோஜ் விஜயாவுக்கு போன் போட்டு இவன் கூட ஏமா அனுப்புனீங்க நான் தனியாவே போய் தேடுகிறேன் என்று சொல்ல விஜயா இப்போதைக்கு அவனுடைய தயவு வேண்டும் கொஞ்சம் பொறுமையா இரு என கூறுகிறார். பிறகு மீனா வந்ததும் மனோஜை இறக்கி பின்னாடி சீட்டுக்கு அனுப்பி மீனாவை முன்னாடி உட்கார வைத்து காரை எடுக்கிறார் முத்து.
அப்போதும் முத்து எல்லாரும் அம்மா வீட்டுக்கு தான் போவாங்க இந்த பொண்ணு என்ன குமரிபாளையத்துக்கு போய் இருக்கு என முத்து கேள்வி கேட்கிறார். ஒருவேளை பெரிய வக்கீல் ஏதாச்சு பாக்க போயிருக்குமோ என்று சொல்ல மீனா எதுக்கு அவங்கள போய் பாக்கணும் என்று கேட்க இவனோட வாழ பிடிக்கவில்லை என்று விவாகரத்துக்கு வாங்கத்தான் மனோஜ் நீயும் ஒரு நல்ல வக்கீலா பார்த்து வைத்துக்கொள் என்று வெறுப்பேற்றுகிறார்.
பிறகு மீனா முத்துவை பேசாம அமைதியா கார் ஓட்டிட்டு வாங்க என்று சொல்ல முத்து திரும்பத் திரும்ப மனோஜை கலாய்க்க இப்ப நீங்க அமைதியா வரீங்களா இல்ல மாமாவுக்கு போன் பண்ணட்டா என மிரட்டுகிறார். அடுத்ததாக முத்து காரை ஓரமாக நிறுத்தி இரண்டு பிஸ்கட் பாக்கெட் வாங்கி பிரித்து சாப்பிட இதுக்கு தான் காரை நிறுத்தினீங்களா என மீனா கேட்க ஆமா காலைல சாப்பிடாம வந்துட்டேன் பசிக்குது என சொல்கிறார்.
டேய் நீ சாப்பிடுறியா என்று கேட்க மனோஜ் வேண்டாம் என்று சொல்ல வழியில் எங்கேயாச்சு காரை நிறுத்த சொன்ன நிறுத்த மாட்டேன் என கூறுகிறார். மூவரும் சேர்ந்து ரோகினியை தேடி குமரி பாளையம் வருகின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
