பாட்டியிடம் பேசிய மீனா. முத்து எடுத்த முடிவு. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து ரோகினி இடம் எங்க அப்பா இந்த பக்கம் வர மாதிரியே காணோம் என்று சொல்ல விஜயா டேய் அதெல்லாம் எதுக்கு நீ கேட்டுவிட்டு இருக்க என்று குறுக்கே கேட்டுப் போட அண்ணாமலை எனக்கு தோணுது கல்யாணம் ஆகி இவ்வளவு நாள் ஆச்சு அவங்க அப்பா இன்னும் வரவும் இல்ல போன்ல கூட பேசினது கிடையாது என்று கூறுகிறார்.

உடனே ரோகிணி அவர் பிஸியா இருக்கார் அங்கிள் பிசினஸ் போய் இருக்காரு என்று கூற விஜயா என்னைக்கா இருந்தாலும் ஒரு நாள் வர தானங்க போறாரு என்று சொல்லி சமாளிக்கிறார். பிறகு மனோஜ் ஏதோ மசாலா வாசனை வருது என்று சொல்ல முத்து ஆமா கரெக்டா கண்டுபிடிச்சுட்ட, மோப்ப நாயா போலீஸ்ல வேலைக்கு சேர்ந்திடு என்று கூறுகிறார்.

அதன் பிறகு கையில் இருக்கும் தந்தூரி சிக்கன் காட்ட மனோஜ் ஊற என் பொண்டாட்டிக்காக வாங்கிட்டு வந்தேன் என்று சொல்ல விஜயா என்னங்க இதெல்லாம் வெளியிலிருந்து எல்லாம் வாங்கிட்டு வரேன் அதுவும் அவன் பொண்டாட்டிக்கு மட்டும் தனியா என்று கேள்வி கேட்க இங்க எல்லாருக்கும் பிடிச்சது அதை செஞ்சு கொடுத்தா அவளுக்கு என்ன நீங்க யாரும் கேட்கலையே அதான் நான் வாங்கிட்டு வந்தேன் என்று சொல்லி மீனாவை ரூமுக்குள் கூப்பிட எதுக்குங்க இதெல்லாம் என்று கூறுகிறார்.

பிறகு அண்ணாமலை இடம் ஒரு நல்ல புருஷன் என்னப்பா பொண்டாட்டி கேட்காமலேயே அவளுக்கு பிடித்ததை வாங்கி தருவது தானே என்று கேட்க அவரும் கரெக்ட் என்று சொல்ல முத்து மீனாவை கூட்டிக்கொண்டு உள்ளே செல்கிறார். பிறகு மீனாவை தந்தூரி சிக்கன் சாப்பிட வைத்து அழகு பார்க்கிறார்.

நேத்து நைட்டு நீ எவ்வளவு கஷ்டப்பட்டாலும் எனக்கு தெரியும் நீ அந்த பக்கமா படுத்துட்டு கண்கலங்குன அது தெரிய கூடாதுன்னு தானே நெனச்ச? இன்று ஆறுதலாக பேச மீனா சந்தோஷப்படுகிறார்.

மறுநாள் காலையில் முத்து வேலைக்கு கிளம்ப மீனா வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருக்க குடுகுடுக்காரன் முத்து தங்கமான ஆளு என்று பாராட்டி பேச முத்து எல்லாரும் என்ன கோவக்காரன் இது அதுனு தான் சொல்லுவாங்க நீ தான் நல்ல விதமா சொல்லி இருக்க என்று அம்பது ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுக்கிறார்.

பிறகு மீனா இந்த வீட்டுக்கு வந்த குலவிளக்கு, ஆனா என்ன ஒன்னு வாயால தான் பிரச்சனை என்று சொல்ல கரெக்டா சொன்னீங்க என்று முத்து ஐம்பது ரூபாயை வாங்கிக் கொண்டு 100 ரூபாய் கொடுக்கிறார். பிறகு நீங்க கோவத்தை மட்டும் குறைச்சுக்கிட்டா இந்த கோட்டையை ஆளலாம் என்று சொல்ல முத்து நூறு ரூபாயை புரிந்து கொண்டு உனக்கு அம்பது ரூபாய் போதும் என துரத்தி விடுகிறார்.

அதன் பிறகு மீனா கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே பாட்டி போன் செய்து ரவிக்கு ஒரு நல்ல இடம் வந்து இருக்கு, பொண்ணு வீட்டுக்காரர்களை கூட்டிட்டு ஊருக்கு வரேன் என்று சொல்ல மீனா வேண்டாம் பாட்டி என்று முட்டுக்கட்டை போட நீ இப்படி எல்லாம் பேச மாட்டியே என்ன ஆச்சு என்ன விஷயம் என்று கேட்க மீனா ரவிக்கு கல்யாணம் ஆன விஷயம் அண்ணாமலை கைது செய்யப்பட்டது, நெஞ்சுவலி வந்து ஆப்ரேஷன் நடந்தது என எல்லா விஷயத்தையும் உடைத்து விடுகிறார்.

இதனால் பதறிப் போகும் பாட்டி உடனடியாக சென்னைக்கு கிளம்பி வருகிறார். விஜயாவை லெப்ட் அண்ட் ரைட் வாங்குகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌

sirakadikka-aasai serial episode-update
jothika lakshu

Recent Posts

பிரபாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ படம் ஓடிடி.யில் ரிலீஸ்..

பிரபாஸ் நடித்த 'த ராஜா சாப்' படம் ஓடிடி.யில் ரிலீஸ்.. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,…

17 hours ago

அட்ஜெஸ்ட்மென்ட் இல்லை; சிரஞ்சீவி பேச்சு சர்ச்சை: வைரலாகும் நிகழ்வு

அட்ஜெஸ்ட்மென்ட் இல்லை; சிரஞ்சீவி பேச்சு சர்ச்சை: வைரலாகும் நிகழ்வு சிரஞ்சீவியின் திரைப்பயணத்தில் பெரிய வெற்றிப்படம் ஆகி விட்டது அனில் ரவிபுடி…

17 hours ago

விஜய் தேவரகொண்டாவுடன் 3-வது முறையாக இணையும், ராஷ்மிகா… வெளியானது ‘ரணபாலி’ மாஸ் அப்டேட்

விஜய் தேவரகொண்டாவுடன் 3-வது முறையாக இணையும், ராஷ்மிகா… வெளியானது ‘ரணபாலி’ மாஸ் அப்டேட் தெலுங்கு சினிமாவான 'ரணபலி' படத்தின் தகவல்கள்…

17 hours ago

KGF -காந்தாரா டீமுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன் ? இயக்குனர் யார் தெரியுமா ?

KGF -காந்தாரா டீமுடன் கூட்டணி அமைக்கும் சிவகார்த்திகேயன் ? இயக்குனர் யார் தெரியுமா ? பராசக்தி படத்தை தொடர்ந்து எஸ்கே…

17 hours ago

கலெக்டர் ஆபீஸ் வந்து மனு கொடுத்த வாட்டர் மெலன் ஸ்டார்..என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா?

கலெக்டர் ஆபீஸ்க்கு மனுவுடன் வந்துள்ளார் பிக் பாஸ் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி…

17 hours ago

‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு – முழு விவரம்

‘ஜனநாயகன்’ படத்துக்கு தொடரும் சிக்கல்: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு - முழு விவரம் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு…

17 hours ago