மீனா எடுத்த முடிவு.ஷாக் கொடுத்த ஸ்ருதி. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயாவுக்கு போன் பண்ணும் பார்வதி ரவி பத்தி என்ன முடிவு பண்ணி இருக்க என்று கேட்க நான் என்ன முடிவு பண்றது அவன் பேர எடுத்தாலே முத்து அப்படியே எரிந்து விழுகிறான் என சொல்கிறார்.

முத்துவை விடு உன் வீட்டுக்காரரை சமாதானம் பண்ணினா அவரை வைத்து முத்துவை சரி பண்ணி விடலாம் என கூறுகிறார். அந்த பொண்ணு என்ன ஐடியாவில் இருக்கான்னு தெரியலையே, அப்புறம் ரவி அந்தப் பக்கமாக சாய்ந்துட்டா எதுவும் பண்ண முடியாது என்று சொல்கிறார்.

இதை தொடர்ந்து ரோகினி மனோஜிடம் இந்த மாதம் எவ்வளவு காசு சேல் பண்ண என்று கேட்க அவர் 15 கார் என அளந்துவிட சூப்பர் மனோஜ் அப்படின்னா நீ எம்டி கிட்ட சம்பளத்தை ஏத்தி கேளு கண்டிப்பா கொடுப்பாரு என்று சொல்ல வேறு வழியில்லாமல் மனோஜ் சரி என்று சொல்லி அங்கிருந்து நழுவிச் செல்ல அண்ணாமலை ஏன்டா தினம் ஆட்டோல போய்ட்டு இருக்க? நீ கார் கம்பெனியில் தானே வேலை செய்ற லோன் போட்டு ஒரு கார் வாங்கிட்டு என்று சொன்னது ரோகிணி இதுவும் நல்லா ஐடியா தான். நீ உன் எம்டி கிட்ட பேசு, அவர் உனக்கு நல்ல விலையில் கார் கொடுப்பார் என கூறுகிறார்.

பிறகு விஜயா இன்னைக்காவது ஒரு நல்ல வேலையோட வா என்று சொல்லி அனுப்ப அண்ணாமலை அதைக் கேட்டு என்ன வேலை என்று கேட்கிறார். விஜயா ஒரு வழியாக சமாளித்து விடுகிறார். பிறகு மீனா சமையல் வேலையை முடித்துவிட்டு கோவில் வரைக்கும் போயிட்டு வரேன் என்று சொல்லி கிளம்ப பார்வதி வீட்டுக்கு வருகிறார்.

அண்ணாமலையிடம் நலம் விசாரித்துவிட்டு பிறகு காலையிலிருந்து சாப்பிடவில்லை என்று சொன்ன விஜயா சரி வா சாப்பிடலாம் என்று சொல்லி அழைத்துச் சென்று சாப்பாட்டை போட்டுக்கொண்டு குழம்பை மூடாமல் திறந்து விட்டு விட அதில் பல்லி விழுந்து விடுகிறது.

இன்னொரு பக்கம் ஸ்ருதிக்கு அவரது தோழி போன் பண்ண குழந்தை பெத்துக்க போறதால வேலையை விட போவதாக சொல்ல இப்ப எதுக்கு குழந்தை பெத்துக்கிற அப்புறம் உன்னோட லைப்பே போயிடும் முதல்ல லைஃப் என்ஜாய் பண்ணி என அறிவுரை கூறுகிறார். எனக்கு இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்கிற ஐடியாவே கிடையாது. ஏன் பெத்துக்காம கூட போகலாம் என சொல்ல இது எல்லாம் கேட்டு ரவி அதிர்ச்சி அடைகிறார். மீனா எப்படியாவது இன்னிக்கி பைனான்ஸியரை பார்த்து கார் வாங்கிடனும் என்று சொல்லி அவரது ஆபீஸில் வந்து காத்துக் கொண்டிருக்கிறார்.

பிறகு வீட்டில் இருந்து விஜயாவும் பார்வதியும் வெளியே கிளம்ப வழியில் ரவியை பார்க்கின்றனர். விஜயா ரவியிடம் நலம் விசாரித்து நீ வீட்டுக்கு வந்துடு எனக்கு விட ரவி நான் மட்டும் எப்படி வர முடியும் ஸ்ருதி என கேள்வி கேட்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka aasai serial episode update 16-11-23
jothika lakshu

Recent Posts

மதுரை மக்களின் பேச்சுவழக்கை கற்றுக்கொண்டு வருகிறேன் – நடிகை பிரீத்தி முகுந்தன்

‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…

5 hours ago

‘சர்தார் 2’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..! எங்கு, எப்போது பார்க்கலாம்?

2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…

6 hours ago

பெத்லகேம் குடும்ப யூனிட் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…

6 hours ago

கோவாவில் புருஷன் படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு விபத்து

சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘புருஷன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் இடம்பெறும்…

6 hours ago

தேவையில்லாதவர்களுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்காதீங்க! – நடிகர் சூர்யா

சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்துகொண்டு, சமூக வலைதளங்களில் வெளியாகும் எதிர்மறையான கருத்துகள் மற்றும் விமர்சனங்கள்…

6 hours ago

Nenjanathi Lyrical Video

Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…

2 days ago