முத்து போட்ட பிளான். ஸ்ருதி சொல்ல வார்த்தை. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் விஜயா திரும்ப திரும்ப பழையதை பேச இப்ப ரூம் தானே பிரச்சனை? அதுக்கு நான் ஒரு வழி பண்றேன் என்று சொல்லி எல்லாரையும் கூப்பிட்டு உட்கார வைக்கிறார்.

பிறகு முத்துவிடம் என்னதான் இருந்தாலும் நீ ரூமை பூட்டிட்டு போனது தப்புதான் என்று சொல்கிறார். கீழ இருக்க பாத்ரூம்ல போய் குளிக்க சொல்றாங்கப்பா அப்போ எங்களுக்கு கஷ்டமா இருக்காதா என்று கேட்க உங்க அம்மா மீனாவ பேசுன வார்த்தைகள் ரொம்ப ரொம்ப தப்பு. அதனால நான் ஒரு முடிவு எடுத்து இருக்கேன் இனிமே நீங்க அந்த ரூம்லயே தங்கிக்கங்க ரவிக்கு எங்க ரூமை தந்து விடுகிறோம் என்று சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார். நம்ப ரூமா என்று கேட்க நீ தானே ரவி இந்த வீட்ல இருக்கணும்னு ஆசைப்பட்ட என்று கேள்வி கேட்கிறார்.

அதை தொடர்ந்து முத்து வேண்டாம்பா நீ வேணா எங்க ரூம்ல இருந்துக்க என்று சொல்ல விஜயா அதான் அவங்களே சொல்றாங்களே என்று கூறுகிறார். ஆனால் அண்ணாமலை நாங்க வாழ்ந்து முடிச்சவங்க எங்க படுத்தாலும் தூக்கம் வரும் என்று பாய் தலையணையை எடுத்து வந்து கீழே போட்டு உட்கார முத்து எனக்கு கஷ்டமா இருக்குப்பா என்று கண் கலங்குகிறார்.

அதன் பிறகு திடீரென முத்துவுக்கு யோசனை தோன்றி மீனாவை ரூமுக்கு அழைத்துச் சென்று கட்டிலை அப்பாவுக்கு கொடுத்துடலாம் உனக்கு பிரச்சனை இல்லையே என்று கேட்க எனக்கு என்னங்க பிரச்சனை கொடுத்திடலாம் என்று சொன்னதும் மனோஜை கூட்டி சென்று கட்டிலை பிரித்து வெளியே எடுத்து வந்து பிட் செய்ய விஜயா ரூம் தான் இல்ல கட்டிலாவது இருக்கட்டும் எனக்கு கீழே படுத்தால் தூக்கம் வராது என நிம்மதி அடைகிறார்.

அதைத்தொடர்ந்து ரவி மற்றும் ஸ்ருதி வீட்டுக்கு வர கட்டில் வெளியே இருப்பதை பார்த்து ஏன்பா என்ன ஆச்சு என்று கேள்வி கேட்க இனிமே நீங்க எங்களோட ரூம்ல தங்கிக்கோங்க என்று சொல்கிறார். ஸ்ருதி நீங்கதான் அங்கிள் தப்பு பண்ணிட்டீங்க தொலைநோக்கு பார்வையோட மூணு பிள்ளைங்களுக்கு 3 ரூம் கட்டியிருக்கணும் என்று சொல்ல என்னுடைய தப்புதான் என் புள்ளைங்க என் பேச்சைக் கேட்டு நடந்துப்பாங்க என தப்பு கணக்கு பண்ணிட்டேன் என்று சொல்லி ரூமுக்கு போக சொல்கிறார்.

ஸ்ருதி அதான் அங்கிள் பிராப்ளம் இல்லன்னு சொல்லிட்டாரே வா என்று ரூமுக்கு அழைத்துச் செல்கிறார். ‌ பிறகு ரவி என்னால உனக்கு எவ்வளவு பிரச்சனை என்று சொல்லி வருத்தப்பட ஸ்ருதி ரொமான்ஸ் செய்து அவரது மூடை மாற்றுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka aasai serial episode update 15-12-23
jothika lakshu

Recent Posts

Meesaya Murukku 2 Official Trailer

Meesaya Murukku 2 Official Trailer | Hiphop Tamizha | Khushbu Sundar | ACS Arun Kumar

8 hours ago

Vaan Meeru Video Song

Vaan Meeru Video Song | Enna Vilai | Karunaas | Nimisha | Sam CS |…

9 hours ago

Maayapoove Lyrical Video Tamil

Maayapoove Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…

9 hours ago

Neengalellam Lyrical Video

Neengalellam Lyrical Video | Aagayam | N.R. Raghunanthan | Jayamoorthy | Thinanthorum Nagaraj

9 hours ago

DHIK.DHIK..DHIK… Official Teaser

DHIK.DHIK..DHIK... Official Teaser | Pavel | JSK | Chandini | Sandra | Bijesh | Srinivasan

9 hours ago

Asku Macha Lyrical Video

Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…

1 day ago