Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜயா சொன்ன வார்த்தை. முத்து எடுத்த முடிவு. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

sirakadikka aasai serial episode update 15-11-23

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இது சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி மற்றும் மனோஜ் இருவரும் உட்க்கார்ந்து வீட்டு செலவுக்கான சேர் கொடுத்தாச்சு யாருடைய காசுலையும் நாம உட்க்காந்து சாப்பிடல என மீனாவை நக்கலாக பேசிக் கொண்டிருக்க முத்து வீட்டுக்கு வருகிறார்.

மளிகை சாமான்களை பார்த்து ஓ காசு வேற தரணும் நாளைக்கு கொடுத்து விடுகிறேன் என்று சொல்ல விஜயா அப்ப இவ கொண்டு வந்து கொடுத்தது என்ன என கேள்வி கேட்கிறார்.

நீ காசு கொடுக்கவில்லை என்றால் இவளுக்கு எப்படி காசு வந்தது? திருடிட்டு வந்தியா மீனாவை அவமானப்படுத்தி பேச முத்து நான் வட்டி கட்ட வச்சிருந்த பணத்திலிருந்து எடுத்து கொடுத்திருப்பா என்று சொல்லி சமாளித்து விடுகிறார்.

பிறகு ரூமுக்குள் வந்த முத்து பணம் ஏது? எப்படி வந்தது என கேட்க அது எதுக்கு விடுங்க பார்த்துக்கலாம் என்று சொல்ல பிறகு மீனாவின் கையில் வளையல் இல்லாததை பார்த்து அடகு வச்சுட்டியா ஏன் இன்னைக்கு இல்லன்னா நாளைக்கு கொடுத்துட போகிறோம் என்று பேச உங்களை அவமானப்படுத்தி பேசுவதை என்னால் பார்த்துகிட்டு இருக்க முடியாது என கூறுகிறார்.

சரி ரசீதை பத்திரமா வச்சுக்க சம்பளம் வந்ததும் மீட்டு விடலாம் என்று கூறுகிறார். மறுநாள் காலையில் முத்து வேலைக்கு கிளம்பியதும் மீனாவின் தோழி ஒருவர் வந்து முத்து கார் துடைக்கும் வேலை செய்வதாக சொல்ல அந்த இடத்திற்கு செல்கிறார் மீனா.

அங்கே முத்து கார் துடைத்துக் கொண்டிருக்க ஒருவர் வந்து காரில் வைத்த மொபைல் போனை காணோம் என முத்துவின் மீது குற்றம் சாட்ட எல்லோரும் ஒன்று கூடி முத்துவை பரிசோதனை செய்ய முயற்சி செய்ய முத்து நான் எடுக்கல என உறுதியாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அந்த சமயத்தில் ஜிம்மில் இருந்து வந்த ஒருவர் போனை அங்கேயே மறந்திட்டு வந்துட்டீங்க என்று சொல்லி கொடுக்க எல்லோரும் கலைந்து செல்கின்றனர். குடும்ப கஷ்டத்துக்காக இந்த வேலைக்கு வந்து இருக்கேன். இதெல்லாம் கேட்டு தான் ஆகணும் என முத்து ஒருவரிடம் புலம்ப மீனா அதை கேட்டு வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka aasai serial episode update 15-11-23
sirakadikka aasai serial episode update 15-11-23