Tamilstar
News Tamil News

ரோகினி கொடுத்த ஷாக். முத்துவுடன் ஜாலியாக ஊர் சுற்றும் மீனா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

sirakadikka aasai serial episode update 15-06-23

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ரோகினி தோழி நீ பொய் சொல்லி ஏமாத்துற கல்யாணம் பீச்சில் கட்ற மணல் வீடு மாதிரி எப்ப வேணாலும் இடிந்து விடும் என சொல்ல ரோகிணி பாசிட்டிவா யோசி என்று திட்டுகிறார்.

இந்த நேரம் பார்த்து அவருடைய அம்மா போன் செய்து கிரிஷ் உன் கிட்ட பேசணுமாம் என்று சொல்லி போனை கொடுக்க நான் அப்புறம் பேசுறேன் என கோபப்பட்டு ரோகிணி போனை வைத்து விடுகிறார். இதனால் தோழி நீ பண்றது ரொம்ப தப்பு அவன் சின்ன பையன் உன்ன விட்டா வேற யாரு இருக்கா என்று கேட்க ரோகிணி நான் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கிறேன், அவன வச்சுக்கிட்டு கல்யாணம் பண்ணா எனக்குள்ள ஒரு குற்ற உணர்ச்சி வந்துடும் என சொல்கிறார்.

மறுபக்கம் பாட்டி முத்து மற்றும் மீனாவை கோவிலுக்கு அனுப்பி வைக்க கோவிலில் என்னென்ன செய்ய வேண்டும் எனவும் சொல்லி அனுப்புகிறார். இருவரும் வெளியே கிளம்பும்போது பிரண்டு ஒருவர் வந்து முத்துவை வெளியே கூப்பிட பாட்டி அவனை திட்டி அனுப்பிவிட்டு அவனிடமிருந்து வண்டியை வாங்கி முத்துவிடம் கொடுத்து இருவரையும் கோவிலுக்கு அனுப்புகிறார்.

பிறகு முத்துவும் மீனாவும் வண்டியில் சென்று ஓர் இடத்தில் வண்டியை விட்டுவிட்டு வயல்வெளிக்குள் நடந்து செல்ல மீனா கால் வழுக்குது என சொல்ல முத்து கையை பிடித்து கூட்டி செல்கிறார் கோவிலில் பூஜை எல்லாம் செய்துவிட்டு வெளியே வரும்போது நானும் நாற்று நட ஆசைப்படுவதாக மீனா சொல்ல பிறகு முத்து வயல்வெளியில் இறக்கி விட மீனா நாற்று நடுகிறார்.

இதைப் பார்த்து முத்து மீனாவை கலாய்க்க மீனா சேற்றை வீச பதிலுக்கு முத்துவும் மீனா மீது சேற்றை வீசுகிறார். இப்படி இருவரும் விளையாடி கொண்டு பிறகு பம்பு செட்டில் போய் ஒருவருக்கு ஒருவர் சேற்றை துடைத்து விடுகின்றனர்.

அதன் பிறகு முத்து மீனாவுக்கு ஊர் முழுவதையும் சுற்றிக் காட்டி தன்னுடைய ஸ்கூலுக்கு கூட்டி சென்று இங்க தான் நான் படிச்சேன், இங்கதான் பசங்களோட விளையாடுவோம் என தனது பள்ளி பருவ விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka aasai serial episode update 15-06-23
sirakadikka aasai serial episode update 15-06-23