Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஸ்ருதி அம்மா அப்பா எடுத்த முடிவு. மனோஜ் செய்த வேலை. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

sirakadikka aasai serial episode update 13-10-23

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து பார்க்கிற்கு வர மனோஜ் பிச்சைக்காரன் வேஷம் போட்டுக்கொண்டு ஒளிந்து கொள்ள அஞ்சு ரூபாய் பிச்சை போட்டுவிட்டு முத்து அங்கிருந்து கிளம்ப பிறகு ரோகிணி கையில் இன்று சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதால் மனோஜ் பார்க்கில் இருக்கும் தன்னுடைய நண்பனிடம் கடன் கேட்கிறார்.

அவர் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு மனோஜை போட்டோ எடுத்துக்கொண்டு அவரது ஆதார் கார்டை வாங்கிக்கொண்டு 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுக்கிறார். மறுபக்கம் வீட்டுக்கு வந்த ஸ்ருதி பிஜூவை பிடித்திருப்பதாக டிராமா போட்டு ரூமுக்கு சென்று ரவியுடன் சந்தோஷமாக பேசிக்கொண்டு இருக்க அவரது அம்மா வர மாப்பிள்ளையிடம் தான் பேசிக் கொண்டிருப்பதாக பொய் சொல்லி விடுகிறார்.

பிறகு பிஜு வீட்டுக்கு வர அவரது அம்மா ஸ்ருதி ரவியிடம் பேசிக் கொண்டிருப்பதை புரிந்து கொண்டு ஸ்ருதியை அறைந்து ரூமுக்குள் அடைக்கிறார். அதனைத் தொடர்ந்து ஸ்ருதி வேறொரு போனில் ரவிக்கு போன் செய்து ரூமில் அடைக்கப்பட்டிருக்கும் விஷயத்தை சொல்ல உடனடியாக கல்யாணம் பண்ணி ஆக வேண்டும் அதற்கான ஏற்பாடு பண்ணு என சொல்ல ரவியும் சம்மதம் தெரிவிக்கிறார்.

மறுபக்கம் ஸ்ருதியின் அப்பா அண்ணாமலையை பார்க்கில் சந்தித்து ரவியை என் மகளுடன் பேச வேண்டாம் என்று சொல்லுங்க அவனை கண்டித்து வைங்க என்று சொல்ல அண்ணாமலை அத உங்க பொண்ணு கிட்ட சொல்லுங்க என பதிலடி கொடுக்கிறார். என் பொண்ணு என் பேச்சை கேக்க மாட்டா என்று சொல்ல அண்ணாமலை நான் என் பையன அப்படி வளர்க்கல என் பேச்சை கண்டிப்பாக கேட்பான் என கூறுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka aasai serial episode update 13-10-23
sirakadikka aasai serial episode update 13-10-23