Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அதிர்ச்சியில் ரோகினி. சர்ப்ரைஸ் கொடுத்த ரவி. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

sirakadikka aasai serial episode update 11-10-23

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா ரோகிணியின் அம்மா மற்றும் கிரிஷ் ஆகியோரிடம் துருவித் துருவி கேள்வி கேட்க ரோகிணி அதிர்ச்சி அடைந்து நிற்கிறார்.

இது எல்லாத்தையும் சமாளித்து ரோகிணியின் அம்மா கிரிஷ்ஷை கூட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்ப ரூமுக்கு வந்த ரோகினி இந்த மீனா சும்மாவே இருக்க மாட்டா போல இவ என்ன அன்னை தெரசாவா என வித்யாவிடம் ஆவேசப்படுகிறார். வித்யாவும் ஆமாண்டி இந்த மீனா லேசு பட்டவ கிடையாது உனக்கு அவளால தான் ஆப்பு இருக்குன்னு நினைக்கிறேன் என கூறுகிறார். உனக்கு இந்த வாழ்க்கை நிலைக்கனும்னா நீ மனோஜ் கூட்டிகிட்டு தனிக்குடித்தனம் போயிடு என எச்சரிக்கிறார்.

இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது ரூமுக்குள் வரும் விஜயா விஜயாவிடம் நீ எப்ப அம்மா வந்த எனக்கு பார்வதி மாதிரி நீ ரோகினிக்கு ரொம்ப நல்ல பிரண்ட் என பாராட்டி பேசி ஜூஸ் எடுத்துட்டு வரேன் என செல்கிறார். அடுத்து ரெஸ்டாரண்டில் ஸ்ருதி எனக்கு ஒரு முடிவு தெரியாம போக மாட்டேன் என உட்கார்ந்து இருக்க ரவி சமாதானம் படித்து வீட்டுக்கு அனுப்ப முயற்சி செய்கிறார்.

கடைசியாக இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான் டைம் நீ உன்னுடைய முடிவை சொல்லல நான் எடுக்க போற முடிவுல நீ லைஃப் லாங் கஷ்டப்படுவேன் என சொல்கிறார். பிறகு ரவி வீட்டுக்கு வந்து ஒரே சிந்தனையில் இருக்க ஸ்ருதி தொடர்ந்து போன் போட்டு கொண்டு இருக்கிறார் ரவி எடுக்காத காரணத்தினால் வாய்ஸ் மெசேஜ் செய்கிறார்.

ரவி எதுவும் பேசாத நிலையில் மறுநாள் காலையில் விஜய் வீட்டுக்கு வந்து ஸ்ருதியை ஷாப்பிங் அழைத்துச் செல்ல இவர்கள் ஷாப்பிங் போன இடத்தில் வந்து சர்ப்ரைஸ் கொடுக்கிறார் ரவி. இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka aasai serial episode update 11-10-23
sirakadikka aasai serial episode update 11-10-23