Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபத்தில் ரோகினி. கிருஷ் சொன்ன வார்த்தை. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

sirakadikka aasai serial episode update 10-10-23

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அம்மாவை செக்கப் கூட்டிட்டு சென்று வந்ததும் ரோகிணி பிரச்சனை எதுவும் இல்ல கம்ப்ளீட்டாக குணமாகிவிட்டதா சொன்னாங்க என்று சொல்லி இன்னைக்கு சாயங்காலமே ஊருக்கு கிளம்ப சொல்கிறார். வித்யா ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு போகட்டும் என சொல்லி ரோகிணி தனது முடிவில் உறுதியாக இருக்கிறார்.

பிறகு கிரிஷ் பற்றிய பேச்சு வர உனக்கு அவன பாத்துக்க கஷ்டமா இருந்தா சொல்லு ஹாஸ்டல்ல சேர்த்து விடுகிறேன் என்று ரோகினி சொல்ல அவரது அம்மா நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் அது மட்டும் நடக்க விடமாட்டேன் என கோபப்படுகிறார்.

பிறகு வித்யாவிடம் ஒரு கேப் புக் பண்ணி இவங்களை பஸ் ஸ்டாண்ட் அனுப்பிடு என்று சொல்லிவிட்டு ரோகிணி கிளம்பி விட வித்யா தனக்கு தெரிந்த ட்ராவல்ஸ்க்கு போன் செய்து கார் புக் செய்ய கடைசியில் முத்துவே டிரைவராக வரும் சூழ்நிலை ஏற்படுகிறது.

இவர்களைப் பார்த்ததும் முத்து சந்தோஷப்பட்டு பேசி கூட்டிச் செல்லும் போது மீனாவை பாத்துட்டு போங்க என வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். ரோகினி அம்மா வேண்டாம் என சொல்லியும் அவர்களை வீட்டுக்கு கூட்டிச் செல்ல மீனாவும் இவர்களை பார்த்து சந்தோஷப்படுகிறார்.

அந்த நேரம் பார்த்து ஆட்டோவில் வரும் ரோகினி இவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்து கார் பின்னால் ஒளிந்து கொண்டு நடப்பதை வேடிக்கை பார்க்கிறார். ரோகிணி அம்மா என் பொண்ணு சிங்கப்பூர் போய் இருக்கா என்று மாற்றி சொல்ல அன்னைக்கு துபாய் என்று சொன்னிங்களே என மீனா மடக்கி பிடிக்கிறார். இருந்தாலும் ஒரு வழியாக மீனாவை சமாளித்து விடுகிறார்.

பிறகு க்ரிஷ் நீ கூட சொல்லாம போயிட்டியே என்று மீனா சொல்ல எங்க அத்தை தான் உங்ககிட்ட பேச கூடாதுன்னு சொல்லி இருக்காங்க என்று உளறி விடுகிறான். உங்கள் சொந்தக்கார பொண்ணை தான் சொல்றான் என ரோகினியின் அம்மா சமாளிக்கிறார். பிறகு மீனா இருவரையும் வீட்டுக்குள் கூப்பிட ரோகினி பயத்தில் மிரண்டு நிற்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka aasai serial episode update 10-10-23
sirakadikka aasai serial episode update 10-10-23