தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் மீனா முத்து முத்து பிடிக்கும் என்பதால் பூரி மசாலா செய்து வைத்திருக்க ரோகிணி காலையிலேயே இதை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் தான் வரும் என்று கிளப்பி விட விஜயா இது தான் சாக்கு என்று சொல்லி மீனாவை பிடித்து திட்டிக் கொண்டிருக்கிறார்.
முத்து சாப்பிட தயக்கம் காட்ட அண்ணாமலை உக்காந்து சாப்பிடு என்று சொல்ல விஜயா அது எப்படி உட்கார்ந்து சாப்பிடுவான் அவ செஞ்சதெல்லாம் அதுக்குள்ள மறந்திடுவானா உங்கள கூட்டிட்டு போய் ஜெயில்ல உட்கார வச்சாலே என்று ஏற்றி விட முத்து எனக்கு வேண்டாம் வயிறு சரியில்லை என்று சொல்லி கிளம்பி விடுகிறார். இதனால் மீனா கலங்கி நிற்க விஜயா அதை பார்த்து ரசிக்கிறார்.
அதனைத் தொடர்ந்து இங்கே ஸ்ருதி ஷாப்பிங் செய்து ரவிக்கு டிரஸ் மற்றும் மோதிரம் ஆகியவற்றை வாங்கி வந்து கொடுத்து இப்போ நாம தான் ஃபேமிலி, இந்த தீபாவளிக்கு சந்தோஷமா கொண்டாடலாம் என்று சொல்ல ரவி தன்னுடைய குடும்பத்தை நினைத்து கவலைப்படுகிறார். பிறகு ஸ்ருதி ரவியை சமாதானம் செய்து எனக்கு பசிக்குது என்று சொல்லி சமைக்க சொல்கிறார்.
அதைத் தொடர்ந்து முத்து காரை பற்றி நினைத்து செல்வத்திடம் பீல் செய்து கொண்டிருக்க அப்போது கார் வாங்கிய கணபதி அந்த இடத்திற்கு வந்து முத்துவிடம் டாக்குமெண்ட்டை வாங்கி கையெழுத்து வாங்கிக் கொள்கிறார். முத்து கடைசியாக ஒருமுறை என்னோட காரை ஓட்டி பார்த்துக்கிறேன் என்று சொல்லி ஆசை ஆசையாக காரை ஓட்டி பிறகு அதை கணபதியிடம் கொடுத்து வருத்தப்படுகிறார்.
அதைத்தொடர்ந்து முத்து நைட்டு குடித்துவிட்டு வீட்டிற்கு வர மீனா என்னை இப்படி குடிச்சிட்டு வந்திருக்கீங்க என்று சொல்ல உன்னால அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போச்சு என் காரும் போச்சு என கோபத்தை காட்ட மீனா வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
அதைத் தொடர்ந்து வெளியான ப்ரோமோ வீடியோவில் அந்த பிஏ கொரியர் பாய் கெட்டப்பில் வந்து ரோகினி இடம் நாளைக்கு காலையில ஏழு மணிக்குள்ள ஐம்பதாயிரம் ரூபாய் பணம் வந்தாக வேண்டும் இல்லனா அடுத்த நிமிஷம் இங்க வருது உன்ன பத்தி எல்லா உண்மையும் சொல்லிடுவேன் என மிரட்ட மீனா இதை பார்த்து விடுவது போல காட்டப்படுகிறது. இதனால் ரோகினி சிக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
