Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மனோஜிடம் கோபமாக நடந்து கொண்டு முத்து. அதிர்ச்சியில் மீனா.இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

sirakadikka-aasai serial episode-update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் அண்ணாமலை வீட்டுக்கு வர மீனா மாமியார் விஜயா பற்றி விசாரிக்க அண்ணாமலை அவர் வந்தா அவனோட தான் வருவேன்னு சொல்லிட்டா. அதனால அங்கேயே இருன்னு சொல்லிட்டு வந்துட்டேன் என சொல்ல மீனா அத்தை அங்க இருந்தா நம்ம குடும்பத்துக்கு தான் அவமானம், அவங்கள மட்டும் வீட்டுக்கு கூப்பிடுங்க என சொல்ல அண்ணாமலை நான் கூப்பிட மாட்டேன் என சொல்ல மீனா நீங்க சொன்னதா நான் கூப்பிடவா என கேட்க அதற்கு சரியென சொல்கிறார்.

பிறகு மீனா விஜயாவுக்கு போன் போட்டு வீட்டுக்கு வாங்க அத்தை என்று சொல்ல முதலில் மறுக்கும் விஜயா பிறகு மாமா தான் கூப்பிட சொன்னதாக சொல்ல சரி போனை வை என சொல்லிவிட்டு மனோஜ் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறார். வீட்டு வாசலில் மனோஜை பார்த்த அண்ணாமலை கோபப்பட்டு அவனை வெளியே போக சொல்ல விஜயா அவனுக்காக பரிந்து பேசுகிறார்.

அண்ணாமலை அவன் பண்ண துரோகத்துக்கு மீனாவிடம் மன்னிப்பு கேட்டால் இந்த வீட்டில் இருக்கலாம் இல்லையென்றால் அப்படியே போக சொல்லு என சொல்ல என் பையன் எதுக்கு அவ கிட்ட மன்னிப்பு கேட்கணும் என முரடு பிடிக்கிறார் விஜயா. அண்ணாமலை வேற வழியே இல்ல மன்னிப்பு கேட்டு தான் ஆகணும் என சொல்ல மனோஜ் மன்னிப்பு கேட்டுவிட்டு உள்ளே வரும்போது வீட்டுக்குள் வரும்போது அங்கு வரும் முத்து கழுத்தை பிடித்து இழுத்து வெளியே தள்ளி அடித்து உதைக்கிறார்.

முத்து மனோஜை போட்டு சரமாரியாக தாக்க விஜயா தடிக்க முயன்றும் முடியாமல் தவிக்கிறார். மீனா மற்றும் அண்ணாமலையிடம் அவனை அடிக்க வேண்டாம்னு சொல்லுங்க என சொல்லியும் இருவரும் அமைதியாகவே இருக்கின்றனர். நீ பாட்டுக்கு ஜாலியா பணத்தை தூக்கிட்டு ஓடிட்ட இவள என் தலையில கட்டி வச்சுட்டாங்க என முத்து கோபப்படுகிறார்.

பிறகு சரி நீ தூக்கிட்டு போன பணத்துல என்னுடைய பங்கு எங்க எடுத்து வை என கேட்க மனோஜ் அதிர்ச்சி அடைகிறார். சொல்லப்போனால் இப்போ 27 லட்சமும் எனக்கு தான் சேரணும் என சொல்லி மீனாவிடம் என்ன பாக்குற உன்னுடைய மதிப்பு உனக்கே தெரியல 27 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தா உன்னை கட்டிக்கிறதா சொன்னதால அப்பா இவனுக்கு பணம் கொடுத்தார் என்ற விஷயம் சொல்ல மீனா அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka-aasai serial episode-update

sirakadikka-aasai serial episode-update