sirakadikka-aasai-serial-episode
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி விஜயாவை ஓடிவந்து சந்தோஷமாக கட்டிப்பிடித்துக் கொள்ள என்ன ஆச்சு திடீர்னு இவ்வளவு சந்தோசமா இது கட்டிப்பிடித்து விட்டார் என்று கேள்வி கேட்க கல்யாணம் பண்ணி எல்லாருக்கும் ஒரே மாமியார் கிடைப்பாங்க, ஆனால் எனக்கு நீங்க அம்மா மாதிரி கிடைச்சு இருக்கீங்க என்று சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார்.
அடுத்ததாக எனக்கு ஒரு சின்ன ஆசை கல்யாணம் முடிஞ்ச பிறகு குடைத்துக்குள் மோதிரம் போட்டு எடுக்கிறது அப்பளத்தை தலையில உடைச்சுக்கிறது இதெல்லாம் செய்யணுமே ஆசையா இருக்கு என்று சொல்ல அதுக்கு என்ன உடனே ஏற்பாடு பண்ணிடலாம் என்று விஜயா கூறுகிறார்.
மீனாவை கூப்பிட்டு ஒரு குடத்துல தண்ணீர் குடித்து மஞ்சத்தூள் போட்டு கலக்கி பூவை சுத்தி எடுத்து வா, அப்புறம் அப்பளத்தை நல்லா புரிஞ்சு எடுத்துட்டு வா என்று சொல்ல மீனாவும் அதை எல்லாம் செஞ்சு எடுத்துட்டு வர அது சமயம் பார்த்து முத்து வந்து விடுகிறார்.
என்ன நடு வீட்ல கொடுத்து இருக்கீங்க என்ன விஷயம் என்று கேட்க அண்ணாமலை மோதிரம் போட்டு எடுக்க என்று கூறுகிறார். இப்போ இந்த கல்யாணத்துல தேவையில்லாத வேலை எல்லாம் பண்ணுவாங்களே அதுவா என்று நக்கல் அடிக்கிறார். மோதிரம் போட்டு எடுக்க ரோகிணி மனோஜ்க்காக விட்டுக் கொடுக்க விஜயா நீ இப்பவே அவனுக்காக விட்டுக் கொடுக்கிற, உன்ன மாதிரி நல்ல மனைவி கிடைச்சா வாழ்க்கை நல்லா இருக்கும் என்று சொல்ல பல வருஷத்துக்கு முன்னாடியே இது உனக்கு புரியாமல் போயிடுச்சுப்பா என்று அண்ணாமலையிடம் சொல்ல விஜயா ஷாக் ஆகிறார். அவரும் முத்துவுடன் சேர்ந்து இப்ப புரிஞ்சி என்ன பிரயோஜனம் என விஜயாவுக்கு பல்பு கொடுக்கிறார்.
அடுத்து அப்பளம் உடைத்துக் கொள்ளும் சடங்கு நடைபெறுகிறது. சாப்பிட பொருளை இப்படி வீண் அடிச்சுட்டு இருக்கீங்க என முத்து இதுக்கும் ஒரு கவுண்ட்டர் போட அண்ணாமலை அவனை கூட்டிட்டு போய் சாப்பாடு போடுமா என மீனாவிடம் சொல்லி அனுப்புகிறார்.
பிறகு ரோகிணி ரூமுக்குள் இருக்க விஜயா உள்ளே வந்தது ரோகிணி மீனாவோட ஹஸ்பண்ட் ஏன் எப்ப பாத்தாலும் எதையாவது சொல்லிக்கிட்டே இருக்காரு என்று கேட்க அவனும் அவளும் படிக்காத முட்டாளுங்க எங்கே என்ன பேசணும்னு தெரியாமல் அப்படித்தான் பேசிகிட்டு இருப்பாங்க, அவங்க கிட்ட நீ அதிகமா பேசிக்காத என்று சொல்கிறார்.
அடுத்ததாக மனோஜ் ரூமுக்கு வந்து ரோகிணியிடம் நெருங்கி வர அவர் மனோஜை கன்னத்தில் தட்டி விட்டு வெளியே ஓடி வந்து விடுகிறார். பிறகு விஜயா ரோகினியை உட்கார வைத்து ஆப்பிள் கட் பண்ணி கொடுக்க அந்த நேரம் பார்த்து மீனாவுடன் பூ கட்டுபவர்கள் வீட்டுக்கு வந்து பூவை கட்ட கொடுக்க ரோகினி இவங்க எல்லாம் யாரு என கேட்க விஜயா அவர்களை அசிங்கப்படுத்துவது போல பேசுகிறார்.
அவர்கள் கிளம்பிச் செல்லும் போது மீனாவிடம் ஒரே வீட்ல இருக்க போறீங்க அக்கா தங்கச்சிங்க மாதிரி பேசி பழகுங்க என சொல்கின்றனர். இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…
Gadi Mela Dheko Lyric Video | Kabhi Kabhi | Madan.N.Thulasingam | Tenma | Yasin Sherif…
Muttayi Vandi Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
Sakkaraiye Video Song | Hi | Nayanthara, Kavin | Jen Martin | Vishnu Edavan
Pandi Muni Kekkudhu Lyrical Video | Lenin Pandiyan | Ilaiyaraaja | DD Balachandran
நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘டேர் டெவில்’ படத்தில்…