கோபி எடுத்த முடிவு.. ஷாக்கான பழனிச்சாமி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபியிடம் சண்டை போட்டுவிட்டு கேன்டீனுக்கு வரும் பாக்கியாவை பழனிச்சாமி மற்றும் லோபிதா இருவரும் பின் தொடர்ந்து வருகின்றனர்.

பாக்யாவிடம் சண்டையை நேரில் பார்த்ததாக சொல்லி இப்ப நீங்க ஓகேவா என்று கேட்க பாக்யா நான் ஓகேவா தான் இருக்கேன், யாரோ என்னமோ பேசினால் நான் எதுக்கு கவலைப்படணும் என்று சொல்ல பழனிச்சாமி இப்படித்தான் இருக்கணும் என பாராட்டுகிறார். மேலும் லோபிதா எல்லாம் என்னால வந்தது தான் என்று சொல்லி வருத்தப்பட பழனிச்சாமியும் நானும் அப்படி பேசி இருக்கக் கூடாது என்று சாரி கேட்க பாக்கியா அது ஒரு டாஸ்க் இது இல்லனாலும் வேறொரு காரணத்தை வைத்து அவர் சண்டை போட்டு இருப்பார். அவருக்கு நான் சந்தோஷமா இருக்க கூடாது அவ்வளவுதான் என்று சொல்கிறார்.

மறுபக்கம் கோபி பழனிச்சாமி வீட்டுக்கு வந்து அவருடைய அம்மாவிடம் பேச முடிவெடுக்கிறார். வேகவேகமாக பழனிச்சாமி வீட்டுக்குள் வரும் கோபி ஒரு கட்டத்தில் பாடி பில்டர்ஸ் இருப்பாங்க என பயந்து நடுங்குகிறார். பிறகு யாரும் இல்லை என்பதால் வீட்டுக்குள் வந்து விட பழனிச்சாமியின் அம்மா சோபாவில் உட்கார்ந்து புக் படித்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்து அவரிடம் லேம்ப்போஸ்ட் இல்லையா என்று கேட்க ஓ eb-யில் இருந்து வந்திருக்கியா நைட் எல்லாம் கரண்ட் போயிட்டு போயிட்டு வந்துச்சு, என்னன்னு போய் பாரு என்று சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார். நான் ஈபி ல இருந்து வரல பழனிச்சாமியோட அம்மா தானே நீங்க என்று கேட்க ஆமா பழனிசாமி பார்க்க வந்திருக்கியா அவன் இல்லையே என்று சொல்கிறார்.

இல்லம்மா உங்கள தான் பார்க்க வந்தேன் என்று சொல்ல கோபியை உட்கார சொல்லி என்ன விஷயம் என்று கேட்க அவர் ஒரு பெண்ணு பின்னாடி சுத்திக்கிட்டு இருக்காரு என்று சொன்னதும் இவர் அப்படியா அந்த பொண்ணு யாரு உனக்கு தெரியுமா சொல்லு உடனடியா பேசி கல்யாணத்தை முடித்து விடலாம் என்று சொல்ல கோபி இன்னும் அதிர்ச்சி அடைகிறார்.

பழனிச்சாமி என் பொண்டாட்டி பின்னாடி சுத்திக்கிட்டு இருக்காரு என்று சொல்ல அப்போதுதான் இது பாக்யாவின் புருஷன் கோபி என்பது பாட்டிக்கு தெரிய வருகிறது. பிறகு உங்க பையன் கிட்ட சொல்லி வையுங்க இல்லன்னா வேற மாதிரி ஆகிடும் நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என சொல்லி விட்டு கோபி கிளம்பி வருகிறார்.

அடுத்ததாக வீட்டில் பாக்கியா ஜெனி மற்றும் இனியா மூவரும் உக்காந்து பேசிக் கொண்டிருக்கும்போது ஜெனியின் அம்மா வீட்டுக்கு வந்து சீமந்தம் குறித்து பேசுகிறார். ஈஸ்வரி வந்ததும் பேசிட்டு ஒரு நல்ல நாளா சொல்கிறோம் என்று சொல்ல செழியன் ஜெனி இங்கேயே இருக்கட்டும் என்று கூறுகிறார். ஜெனியும் அதையே சொல்ல நீ என் கூட இருக்கணும் உன்னை நான் பார்த்துக்கணும்னு எனக்கும் ஆசை இருக்காதா? எனக்கும் இதுதான் சான்ஸ் என சொல்கிறார். பிறகு தாத்தா செழியனை கூப்பிட்டு பாட்டியை விட்டு ஒரு வாரம் கூட இருக்காதா என கிண்டல் அடிச்ச இன்னைக்கு தெரியுதா அந்த கஷ்டம் என கலாய்த்து அனுப்புகிறார்.

அடுத்ததாக பழனிச்சாமி வீட்டுக்கு வர அவருடைய அம்மா கோபி வந்து பேசிய விஷயங்களை சொல்ல பழனிச்சாமி ஷாக் ஆகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


Baakiyalakshmi Episode Update
jothika lakshu

Recent Posts

Thadumaarudhe Video Song

Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…

12 hours ago

‘டாக்ஸிக்’ படத்தின் ‘தடுமாறுதே’ பாடல் வெளியீடு – யஷ், தாரா சுதாரியாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்கிறது!

'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…

20 hours ago

பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் ‘கட்டா குஸ்தி 2’ – உலகளவில் ரூ.55 கோடி வசூல்!

செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…

21 hours ago

300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்; தேசிய ட்ரோன் விருதால் கவுரவிக்கப்பட்ட சாதனையாளர்

தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…

21 hours ago

நடிகர் அர்ஜுன் தாஸின் கான் சிட்டி ஓடிடி தேதி அறிவிப்பு!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…

2 days ago

கவின் – நயன்தாரா நடிக்கும் ‘Hi’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…

2 days ago