அதிகாலை 1 மணிக்கு அழைத்து பாராட்டிய அஜித்: நெகிழ்ந்த ஜி.வி.பிரகாஷ்!

நடிகர் அஜித்குமாரின் தொழில்முறை ரேசிங் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் பிரம்மாண்ட ஆவணப்படம் ‘கிளாடியேட்டர்ஸ்’. இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கும் இப்படத்தை அஜித் குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீசஸ் மற்றும் ஷாலினி அஜித்குமாரின் கோல்டன் டிரோபி ஃபிலிம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து இப்படத்திற்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

‘இம்மார்ட்டல்’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்வில் பேசிய ஜி.வி.பிரகாஷ், ‘கிளாடியேட்டர்ஸ்’ படத்திற்கான தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். அதிகாலை 1 மணியளவில் அஜித் தனக்கு போன் செய்து பேசியதாக அவர் தெரிவித்தார்.

படத்தின் டிரெய்லர் மற்றும் பின்னணி இசையைக் கேட்ட அஜித், ஜி.வி.பிரகாஷின் பணியை வெகுவாகப் பாராட்டியதுடன், நன்றி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், “உங்களை நிச்சயம் பெருமைப்படுத்துவேன்” என்று அஜித் கூறியதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். அஜித்தின் இந்த வார்த்தைகள் தனக்கு மிகுந்த உற்சாகத்தையும் நெகிழ்ச்சியையும் அளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

‘கிளாடியேட்டர்ஸ்’ வெறும் கார் ரேசிங் குறித்த ஆவணப்படமாக மட்டுமல்லாமல், அஜித்தின் தனிப்பட்ட சிந்தனைகள், சர்வதேச ரேசிங் மீதான அவரது கனவு மற்றும் பயணத்தில் அவர் சந்தித்த சவால்களையும் பதிவு செய்யும் படைப்பாக உருவாகி வருகிறது.

அஜித் மற்றும் அவரது அணியினர் சர்வதேச பந்தயக் களங்களில் எதிர்கொண்ட சவால்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லருக்கு ‘UA 13+’ தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துள்ளது. அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தற்போது திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

Suresh

Recent Posts

அஜித் படத்தில் ஷாலினி நடிக்கிறாரா? வெளியான புதிய தகவல்!

நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘டேர் டெவில்’ படத்தில்…

30 minutes ago

லண்டனில் திரிஷாவின் புகைப்படம் வைரல்: புகைப்படம் எடுத்தவருக்கு குவியும் கண்டனம்!

நடிகை திரிஷா சமீபத்தில் தனது நண்பர்களுடன் லண்டனில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை மாளவிகா ரகுநாத் என்பவர்…

36 minutes ago

40 நாட்களில் நிறைவடைந்த ஜீவாவின் ‘தகப்பன்’ படப்பிடிப்பு!

‘கிடா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்து வரும் திரைப்படம் ‘தகப்பன்’.…

51 minutes ago

பிரபு – விஜய் வர்மா இணையும் புதிய படம்: தொடங்கியது படப்பிடிப்பு!

வித்தியாசமான கதைக்களம் கொண்ட புதிய திரைப்படத்தை Romeo Pictures நிறுவனம், Aviate Pictures நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு…

2 hours ago

Konji Konji Lyrical Video

Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records

24 hours ago

Kai Valavi Kulunga Lyrical Video

Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…

24 hours ago