Prabhu & Vijay Varma Join Hands for a New Film Shooting Begins
வித்தியாசமான கதைக்களம் கொண்ட புதிய திரைப்படத்தை Romeo Pictures நிறுவனம், Aviate Pictures நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது.
‘ரைட்டர்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இப்படத்தை இயக்குகிறார். இளைய திலகம் பிரபு மற்றும் விஜய் வர்மா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். Romeo Pictures ராகுலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
டார்க் ஹியூமர் பாணியில், திரில்லர் மற்றும் காமெடி கலந்த வித்தியாசமான திரைப்படமாக இப்படம் உருவாகிறது. முத்துக்குமார், ரமேஷ் திலக், திலீப் சுப்பராயன், தீனா, அருண் மாதேஸ்வரன், கவிதா பாரதி, அவினாஷ் ரகுதேவன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.
படப்பிடிப்பின் முதல் நாளில் நடிகர் விக்ரம் பிரபு மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் படப்பிடிப்புத் தளத்திற்கு நேரில் சென்று படக்குழுவினரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா G.K படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். P.C. ஸ்டன்ட்ஸ் சண்டைப் பயிற்சியை கவனிக்க, யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். நவ்ஷாத் அகமது ஆடை வடிவமைப்பையும், சக்தி வெங்கட்ராஜ் M கலை இயக்கத்தையும் மேற்கொள்கின்றனர்.
பிரபு உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த நடிகர்களுடன் இளம் தலைமுறை நட்சத்திரங்கள் இணையும் இப்படம், ரசிகர்களுக்கு புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் தலைப்பு மற்றும் இதர முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.
Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…
Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…
நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…
72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…