Sirakadikka Aasai Episode Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் விஜயா 10 லட்சம் பணம் வாங்க கந்து வட்டிக்காரர் மூணு மாசத்தில் பணத்தை கொடுத்துட்டு பத்திரத்தை மீட்டுக்கங்க என சொல்கிறார்.
பிறகு பார்வதியை ஜாமீன் கையெழுத்து போட சொல்ல அவர் அங்கு தாலியை கழட்டி கொடுத்து நிற்கும் பெண்ணை பார்த்து பயத்துடன் கையெழுத்து போடுகிறார். மறுபக்கம் முத்துவும் மீனாவும் பஸ்ஸில் வந்து கொண்டு இருக்க மீனா கிராமத்தின் அழகை பார்த்து ரசிக்க முத்து இன்னும் ஊருக்குள்ள ரொம்ப அழகா இருக்கும் என சொல்லி இருவரும் சந்தோஷமாக பேசிக்கொண்டு பயணிக்கின்றனர்.
பணத்தை வாங்கி வந்த ரோகினி தன்னுடைய தோழியிடம் பணத்தைக் காட்டி அட்வான்ஸ் கொடுக்க சந்தோஷத்தோடு கிளம்புகிறார். பிறகு பஸ்ஸில் மீனா முத்து தோள் மீது சாய்ந்து தூங்க முத்து செய்வதறியாது தவிக்கிறார். அந்த நேரம் பார்த்து ஒரு பாட்டி பஸ்ஸில் ஏற முத்து நீங்க வாங்க பாட்டி, இங்க உட்காருங்க என சத்தமாக கூப்பிட்டு மீனாவை எழுப்புகிறார்.
அதன் பிறகு முத்துவுக்கு தெரிந்த ஊர்க்கார பெண்மணி ஒருவர் கொய்யா காயுடன் பஸ்ஸில் ஏற அவரிடம் பேசிக்கொண்டே செல்ல அவர் இந்த பொண்ணு யாரு என கேட்க முத்து என்ன சொல்வது என தெரியாமல் முழிக்கிறார். பாட்டி எதுவும் சொல்லலையா என்று கேட்க ஆமா உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்னாங்க அந்த பொண்ணு இதுதானா உன் பேர் என்ன என கேட்க மீனா தன்னுடைய பெயரை சொல்ல ரெண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்கிறார்.
மேலும் மீனாவிடம் முத்து ரொம்ப நல்ல பையன் உன்னை நல்லபடியா வச்சு பார்த்துப்பான் என்று சொல்ல மீனாவும் முத்துவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கின்றனர். இங்கே பணத்தை ரோகினிடம் கொடுத்து விட்டு விஜயா வீட்டுக்கு வர வெச்சிட்டியா என அண்ணாமலை கேட்க இவர் விஷயம் தெரிஞ்சிடுச்சா என பதறுகிறார்.
என்ன வெச்சிட்டியா எனக்கு ஒன்னும் புரியல என விஜயா கேட்க காய்கறி வாங்க பைய எடுத்துட்டு போன ஒன்னும் இல்லாம கைய வீசிட்டு வர என்று சொல்ல அண்ணாச்சி கடையில் கொடுத்து விட்டு வந்திருப்பதாக சமாளிக்கிறார். பிறகு மனோஜிடம் சென்று உனக்கும் உன் அப்பாவுக்கும் தெரியாமல் ரோகினிக்கு 10 லட்சம் பணம் கொடுத்து இருக்கேன் என விஷயத்தை சொல்ல என்னம்மா சொல்ற என மனோஜ் கேட்க விஜயா நான் தப்பு பண்ணிட்டேனா என்று அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…