கிச்சனுக்கு வந்த ராதிகா. பதறி அடித்து ஓடிய கோபி. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி பாக்கியாவிடம் ரொம்ப தலை வலிக்குது ஒரு காபி கிடைக்குமா என கேட்டு பிறகு சுதாரித்துக் கொண்டு வேண்டாம் என சொல்ல ராமமூர்த்தி ரொம்ப பாவமா இருக்கு நீ வீட்ல இருக்கவங்களுக்கு கொடுக்கிற மாதிரி கொடுக்க வேண்டாம் தெருவுல போற வரவங்களுக்கு கொடுக்குற மாதிரி ஒரு காபி போட்டு கொடு, உனக்கு விருப்பம் இல்லன்னா வேண்டாம் என சொல்லிவிட்டு எழுந்து செல்ல பாக்யா காபி போடுகிறார்.

கோபி குடிக்கலாமா வேண்டாமா என யோசித்து எழுந்து காபி எல்லாம் வேண்டாம் சொல்லிவிட்டு வெளியே போகும்போது பாக்கியா காபி எடுத்து வந்து கோபியின் அருகே வைக்கிறார். இந்த சமயம் பார்த்து ராதிகா கிச்சனுக்குள் வந்துவிட கோபி நான் ஒன்னும் காபி கேக்கல என அலறியடித்து கொண்டு அங்கிருந்து ஓடுகிறார்.

அதன் பிறகு ராதிகா என்ன எனக்கும் அவருக்கும் சண்டையா இருக்கும் போது காபி கொடுத்து இம்ப்ரஸ் பண்ண பாக்கறீங்களா என சண்டையிழுக்க அவரோட வாழும் போதே இன்ஃபிரஸ் பண்ண நான் ஒன்னும் பண்ணல, நான் விவாகரத்து கொடுத்த பிறகு அவரை இம்ப்ரஸ் பண்ணி என்ன ஆகப்போகுது என ராதிகாவுக்கு பதிலடி கொடுக்கிறார். பிறகு செல்வி இதோட முடிஞ்சிடுமா இல்ல இன்னும் ஏதாவது இருக்கா நீங்க பல்பு வாங்குவதை தவறாக பார்க்கணும்ல என நக்கல் அடிக்கிறார்.

அதன் பிறகு இனியா ஸ்கூலுக்கு கிளம்பி கொண்டு இருக்க செழியன் வர லேட் ஆவதால் ஸ்கூலில் டெஸ்ட் இருக்கு என சத்தம் போட்டுக் கொண்டிருக்க கோபி நான் கூட்டிட்டு போறேன் என இனியாவை கூட்டிச் செல்கிறார்.

பிறகு ஈஸ்வரி கிச்சனில் செல்வியிடம் இனியாவை கோபி ஸ்கூலுக்கு கூட்டிட்டு போனது அவகிட்ட சொல்ல வேண்டாம் என சொல்ல கொஞ்ச நேரத்தில் ஜெனியும் கிச்சனுக்கு வர பிறகு ராதிகா கோபியை தேடிக்கொண்டு கீழே இறங்கி வருகிறார்.

ஜெனியிடம் கோபி எங்கே என கேட்க எனக்கு தெரியாது என சொல்ல செல்வி ஒரு நிமிஷம் மேடம் என சொல்லி கிச்சனில் இருக்கும் கபோர்டுகளை திறந்து பார்த்து இங்கு எங்கேயும் கோபி சார் இல்லை என நக்கல் அடிக்கிறார். இதனால் ராதிகா கோபமாக ஈஸ்வரி உனக்கு பதில் சொல்வதே பெரிய விஷயம் இதுல நல்லபடியா வேற பதில் சொல்லனுமா என வாக்குவாதம் செய்கிறார்.

பிறகு செல்வி ஜெனிடம் இனியா பாப்பாவை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போய் இருக்கிறது அவங்களுக்கு சொல்ல வேண்டாம்னு அம்மா சொன்னாங்க என சொல்லிக் கொண்டிருக்க ராதிகா நீங்க சொல்லலனா எனக்கு தெரியாதா? அவர் கார் இல்ல, ஆஃபீஸ்க்கு தானே போயிருக்காரு என கேட்க ஈஸ்வரி அவன் ஆபீஸ்க்கு போகல இனியாவை ஸ்கூல்ல விட போயிருக்கான் என்று சொல்ல ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.

ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லிட்டு போயிருக்கலாம் என ராதிகா சொல்ல உன்கிட்ட அவன் எதுக்கு சொல்லணும் அவன் பொண்ண அவன் ஸ்கூல்ல விட போய் இருக்கான் என பதிலடி கொடுக்கிறார். பிறகு இனியாவும் கோபியும் காரில் சென்று கொண்டிருக்க கோபி ஏன் அமைதியா வர நீ முன்ன மாதிரி இல்ல ரொம்ப மாறிட்ட என சொல்ல இனியா ஏன் நீங்க மாறலையா நீங்க மாறும் போது நான் மாற கூடாதா என கேள்வி கேட்கிறார்.

எதுக்கு டாடி குடிக்கிறீங்க எனக்கு சுத்தமா பிடிக்கல என சொல்ல டாடிக்கு டென்ஷன் என சொல்லு அந்த ராதிகா ஆண்ட்டி தானே பிராப்ளம்? நீங்க அவங்களை கல்யாணமே பண்ணி இருக்க கூடாது என இனியா சொல்ல கோபி அவசரப்பட்டு பண்ணிட்டேன் என சொல்கிறார். அவங்க வேணாம் விட்டுட்டு வந்துடுங்க என்று சொல்ல, அப்படி வர முடியாது நான் பிராமிஸ் பண்ணி இருக்கேனு கோபி சொல்ல அம்மாவுக்கும் தான் ப்ராமிஸ் பண்ணீங்க, ஆனா விட்டுட்டு போகலையானு கேள்வி கேட்டு ஷாக் கொடுக்கிறார் இனியா.

உங்க அம்மா என்ன கஷ்டப்பட்டுட்டா இருக்கா? ரொம்ப சந்தோஷமா தானே இருக்கா என்று கோபி சொல்ல இனியா ஆமா நீங்க போனதுக்கு அப்புறம் அம்மா ரொம்ப சந்தோஷமா இருக்காங்க நீங்க அப்போ அம்மாவை அவ்வளவு டார்ச்சர் பண்ணிங்களா என்று கேட்க கோபி பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார். மேலும் இனியா இனி குடிக்க கூடாது என கோபியிடம் சத்தியம் வாங்குவது மட்டும் இல்லாமல் இனி அந்த வீட்டுக்கும் போகக்கூடாது என்று சொல்ல கோபி செய்வதறியாது தவிக்கிறார்.

இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


Baakiyalakshmi Episode Update
jothika lakshu

Recent Posts

கர்ப்பகால உடற்பயிற்சி குறித்து சமந்தா நெகிழ்ச்சி

நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த…

4 hours ago

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா கூட்டணியின் ‘ரணபாலி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா…

4 hours ago

‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில் சிம்பு – அனிருத் சந்திப்பு; வைரலாகும் புகைப்படம்

நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.…

5 hours ago

காமன்வெல்த் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துபாண்டி – நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகை சிம்ரன்!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டியை நடிகை சிம்ரன்…

8 hours ago

எதிர்மறை விமர்சனங்களை பின்னுக்குத் தள்ளி வசூலில் அசத்தும் ‘டாக்சிக்’!

கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ்…

9 hours ago

Mandaadi Official Teaser

Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…

1 day ago