முத்து கொடுத்த ஷாக். பதற்றத்தில் விஜயா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் மீனா தன்னுடைய அம்மா வீட்டுக்கு ஆட்டோவில் வந்து இறங்க அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீனாவிடம் நலம் விசாரிக்கின்றனர். இந்த நேரம் பார்த்து இந்த வழியாக வரும் கந்துவட்டிக்கார சுதாகரனின் ஆட்கள் மீனா தனியாக வந்திருப்பதை அவனிடம் சொல்ல கிளம்பி செல்கின்றனர்.

அடுத்த வீட்டுக்கு வந்த மீனா அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு சந்தோஷப்படுகிறார். ரோகிணி பற்றி பேசுகின்றனர். பிறகு மீனாவின் அம்மா நீயும் மாப்பிள்ளையும் ஒன்னா சேர்ந்து வாழ்க்கை தொடங்கிட்டீங்க எனக்கு அதை நினைத்தால் சந்தோஷமா இருக்கு என்று கூறுகிறார்.

இங்கே விஜயா ரோகினிக்கு மீனா குடும்பத்தார் என் கண்ணு பட்டு இருக்கும் என சுத்தி போட்டு முதல்ல இந்த வீட்டுக்கு நீ தான் ஒரு வாரிசு பெற்று கொடுக்கணும் அதனாலதான் அந்த மீனாவை ஆடி மாசம் சொல்லி அனுப்பி வைத்தேன் என்று தனது திட்டத்தை உடைக்க ரோகிணி வெட்கப்படுகிறார். மறுபக்கம் சுருதி தொடர்ந்து ரவிக்கு போன் செய்து கொண்டு இருக்க ரவி போனை எடுக்காமல் அவாய்ட் செய்கிறார்.

அடுத்ததாக ஸ்ருதி ரவியை தேடி ஹோட்டலுக்கு வர அங்கிருப்பவர்கள் ரவி இல்லை என்று சொல்லி சமாளிக்க ரவிக்கு போன் போட போன் ரிங் ஆவதை பார்த்து அந்த போனை எடுத்துக்கொண்டு அவன் கிட்ட நானே கொடுத்தேன் என்னை கிளம்பிச் செல்ல ரவி போனை கொடுத்துட்டு போ என்று ஓடி வர ஸ்ருதி கிளம்பிச் சென்று விடுகிறார்.

அடுத்து வீட்டுக்கு வந்த முத்து உப்புமா செய்திருப்பதை பார்த்து நல்லாவே இல்ல சாப்பிட பிடிக்கவில்லை, சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிட அந்த நேரம் பார்த்து ரோகிணி தண்ணி எடுத்துட்டு வந்துறேன் என ரூமில் இருந்து வெளியே வர மீனாவை மட்டும் ஆடி மாதம் வீட்டுக்கு அனுப்பிட்டு இந்த பண்ண மட்டும் இங்கேயே வச்சுட்டு இருக்கீங்க என முத்து கேட்க அவ எதுக்கு போகணும் என விஜயா கேட்கிறார்.

நீங்கதானே சொன்னீங்க ஆடி மாசம் புருஷன் பொண்டாட்டியும் ஒன்னா இருக்க கூடாது அப்ப கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும் அது குழந்தைக்கு நல்லது இல்லன்னு அப்படி இருக்கும்போது இவங்க மட்டும் ஒன்னா இருக்காங்க இதுதான் நீங்க ஆச ஆசையா கூட்டிட்டு வந்த மருமக மேல இருக்க அக்கறையா? என்று ஆப்பு வைக்க விஜயா பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.

மனோஜ் அவ அம்மா வீட்டுக்கு போகணும்னா மலேசியாவுக்கு தான் போகணும் உடனே எப்படி முடியும் என சொல்ல கல்யாணத்துக்கு முன்னாடி இங்க ஒரு வீட்ல இருந்தாங்க இல்ல அங்க போகட்டும் என முத்து ஆப்பு அடிக்கிறார். இவன் இப்படித்தான் ஏதாவது பேசிட்டு இருப்பான் நீ வா ரோகிணி என்ன ரூமுக்குள்ள அழைத்துச் செல்ல நடுவில் வந்து கேட்டு போடும் முத்து என்னம்மா உங்க மருமக மேல அக்கறை இல்லையா என கேட்க விஜயா செய்வதறியாது நிற்கிறார்.

வேறு வழி இல்லாமல் மனோஜை நீ போய் தூங்கு, ரோகிணி என் கூடவே படுத்துக்கட்டும். என ரோகினி ரூமுக்கு அழைத்துச் செல்ல மனோஜ் அப்செட் ஆகிறார். அதனை தொடர்ந்து ரூமில் தூக்கம் வராமல் மீனாவின் நினைவுகளால் தவிக்கும் முத்து மொட்டை மாடிக்கு வர அங்கு ரவியும் வந்து படுக்கிறார்.

அப்போது முத்து ரூம்ல தூக்கம் வரல மீனா இருந்தா அவர் ஏதாச்சு பேசிட்டு இருப்பா இல்ல வயிறு நிறைய சாப்பாடு போட்டுட்டு வா இப்ப அதுவும் இல்ல அவ இல்ல சண்டை போட ஆள் இல்லை என்று ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும் இன்னொரு பக்கம் ஒரு மாதிரி இருக்கு என்ன சொல்ல எப்படி இருக்கு என்று ரவி கேட்க அது சொல்ல தெரியல எனக்கு கூறுகிறார்.

ஒரு ஆளு இருந்தாலும் பிரச்சனை இல்ல நாளும் என முத்து எதையோ சொல்ல வர ரவி பிரச்சனை அதானே என பதில் கொடுக்க முத்து யோசிக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


sirakadikka-aasai-episode-update
jothika lakshu

Recent Posts

அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை… ரசிகர்களுடன் ‘கொம்பு சீவி’ படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி

அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை... ரசிகர்களுடன் 'கொம்பு சீவி' படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி விஜயகாந்த்…

34 seconds ago

’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ – இசையமைப்பாளர் சாம் சி.எஸ்

’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ - இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தமிழ் சினிமாவில் 'ஓர் இரவு' என்ற படத்தின் மூலம்…

6 minutes ago

‘வா வாத்தியார்’ எப்போது ரிலீஸ்?

'வா வாத்தியார்' எப்போது ரிலீஸ்? கார்த்தி நடிப்பில் உருவான 'வா வாத்தியார்' திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்தது.…

16 minutes ago

காஞ்சனா பட நடிகைக்கு ஏற்பட்ட கார் விபத்து..வெளியான தகவல்.!!

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து…

3 hours ago

பராசக்தி படம் குறித்து தரமான தகவலை பகிர்ந்த சுதா கொங்கரா..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள்…

4 hours ago

எந்தவிதமான இசையையும் உருவாக்கும் திறன் எனக்கு உள்ளது..இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேச்சு.!!

தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் போன்ற பல திரைப்படத்துறையில் இசையமைப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாம் சி.எஸ் இவர்…

8 hours ago