முத்துவால் கடுப்பான மீனா. ஆவேசப்பட்ட முத்து. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து எல்லோருக்கும் ஸ்வீட் கொடுக்க பிறகு அண்ணாமலை காரணம் கேட்க அம்மா அறிவாளின்னு சொல்லிக்கிட்டு இருக்க இந்த முட்டாள் ஒரு பொண்ணு கிட்ட ஏமாந்து வந்திருக்கான்ல அதை நினைச்சு எனக்கு சந்தோஷமா இருக்கு, அதுக்குத்தான் இந்த ஸ்வீட் என்ன சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார். மீனா இதைக் கேட்டு சந்தோஷமாக சிரித்துக்கொண்டு ஸ்வீட் சாப்பிடுகிறார்.

அதைத்தொடர்ந்து மனோஜ் என்ன இவ்வளவு பிடிச்சி என் தலையில கட்டி வச்சுட்டீங்க என சொல்ல மீனா கடுப்பாக அதைப் பார்த்து விஜயா இதுக்கு ஸ்வீட் சாப்பிடலாம் என சந்தோஷமாக ஸ்வீட் சாப்பிடுகிறார். இதனால் மீனா கோபித்துக் கொண்டு ரூமுக்கு வந்துவிட உள்ளே வரும் முத்து இப்ப எதுக்கு உள்ள வந்த அப்பா என்ன திட்டத்திற்கு என்னை சொல்லி சத்தம் போடுகிறார்.

எதுக்கு என்னை தினம் தினம் காயப்படுத்தி கொண்டு இருக்கிறீர்கள் என முத்து கேட்க உண்மையை தானே சொல்றேன். ஏன் உனக்கு இங்க வந்து மாட்டிக்கிட்டோம்னு தோணலையா என கேட்க, தோணுச்சு ஆனா அது எல்லாம் மறந்து அடுத்து என்னன்னு யோசிக்க கூட விடாம நீங்க தினம் தினம் சொல்லி ஞாபகப்படுத்திக்கிட்டு இருக்கீங்க என சத்தம் போடுகிறார்.

எதுக்கு நீ சத்தம் போட்டு பேசுற என்கிட்ட சத்தம் போட்டு பேச எங்க அப்பாவுக்கும் பாட்டிக்கு மட்டும்தான் உரிமை இருக்கு என முத்து ஆவேசப்படுகிறார். உங்களுக்கு பிடிக்கலைன்னா அன்னைக்கே சொல்ல வேண்டியது தானே என மீனா சொல்ல நான் எங்க அப்பாவுக்காக ஒத்துக்கிட்டேன் என முத்து பதில் சொல்ல மீனா நான் எங்க அம்மாவுக்காக ஒத்துக்கிட்டேன் என கூறுகிறார்.

உங்களுக்கு பிடிக்கலைன்னா சொல்லிடுங்க நான் கிளம்பி எங்க வீட்டுக்கு போயிட்டே இருக்கேன் என சொல்ல முத்து உன்னை யார் போ சொன்னது, நீ கிளம்பி போயிட்டியா அப்பா என்னை போய் கூட்டிட்டு வர சொல்லுவாரு எனக்கு இதெல்லாம் தேவையா நீ கடைசி வரைக்கும் கழட்டி விட முடியாத லக்கேஜ் என்ன சொன்னா மீனா கோபப்பட்டு துணியை எடுத்து வைக்கிறார்.

இந்த நேரம் அண்ணாமலை வந்து கதவைத் திட்ட முத்து அவங்க வீட்டுக்கு போறேன்னு சொல்றா போகட்டும் என சொல்ல அவர் மீனாவை சமாதானம் செய்ய முயற்சி செய்ய மீனா இதுக்கு எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான். நீங்க என் வாழ்க்கை நல்லபடியா இருக்கும்னு இந்த கல்யாணம் பண்ணி வச்சீங்க ஆனா இதனால எனக்கு வலி தான் அதிகமாச்சு.

சொல்லப்போனா நீங்க உங்க பையனுக்கு என்னை 27 லட்சத்துக்கு வித்து இருக்கீங்க என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார், இனிமேலும் என்னால அவரோட வாழ முடியாது என சொல்லி வீட்டை விட்டு கிளம்ப விஜயா சந்தோஷப்படுகிறார். நாம ஒன்னும் பண்ண வேணாம், முத்துவே எல்லாத்தையும் பண்ணிட்டான் என சந்தோஷப்படுகிறார்.

அதன் பிறகு வீட்டுக்கு வந்த மீனா இனியும் அவரோட வாழ முடியாது அந்த வீட்டுக்கு போக முடியாது என சொல்ல மீனாவின் அம்மா உங்கப்பா தான் உனக்கு எல்லாம் என்னமோ ஹீரோனு சொல்லுறியே அவரும் இந்த மாதிரி என்கிட்ட சண்டை எல்லாம் போட்டு இருக்காரு கல்யாணம் ஆன புதுசுல என்ன அடிச்சு கூட இருக்காரு. அண்ணாமலை அண்ணா மட்டும் இல்லனா எல்லாரும் நாம வயித்துள்ள நெருப்பை கட்டிக்கிட்டு தான் இருக்கணும். அண்ணாமலை அண்ணா உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுத்து இருக்காரு, அத வாழ தெரியாம வந்து நிக்கிற என திட்டி மீனாவுக்கு அறிவுரை சொல்லி அழைத்துக் கொண்டு கிளம்புகிறார் மீனாவின் அம்மா. இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka-aasai-episode-update
jothika lakshu

Recent Posts

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

3 hours ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

3 hours ago

Kaalidas 2 – Trailer

https://youtu.be/zH2MZU2fc-w?si=CSjG9SR-G3LKHDNg

4 hours ago

Naanga Naalu Peru Lyric Video

Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…

4 hours ago

BIKER Trailer (Tamil)

https://youtu.be/0xHjwlnRGT4?si=WGpGwJhCCJQ1Rr9_

4 hours ago

Pallichattambi Official Teaser – Tamil

Pallichattambi Official Teaser - Tamil , Tovino Thomas , Dijo Jose Antony ,World Wide Films…

4 hours ago