குடிபோதையில் கோபி. ராதிகாவை வெறுப்பேற்றிய பாக்யா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடு செல்வி மற்றும் பாக்யா என இருவரும் கேண்டினில் இருக்கும்போது அங்கு வரும் ராதிகா பாக்கியாவை எப்படி ஏதாவது கேள்வி கேட்டு வெறுப்பேத்தலாம் என வருகிறார்.

ஆனால் ராதிகா கேட்கும் அனைத்து கேள்விகளுக்கு முன்கூட்டியே செல்வி பதிலளித்து ஷாக் கொடுக்கிறார். நீங்க பஞ்சாயத்து கூட்ட வசதியா எதுவும் இங்க நடக்கல என சொல்ல அதான் சாப்பாடு சுமாரா தான் இருக்குன்னு எனக்கு ஏகப்பட்ட கம்ப்ளைன்ட் வருது என ராதிகா சொல்கிறார். உடனே பாக்யா இங்க பாருங்க சாப்பாட்டுல ஏதாவது குறை இருந்தா இங்கே எழுதி வைக்கலாம்னு ஒரு நோட்டு வச்சிருக்கோம் ஆனா இதுவரைக்கும் ஒருத்தர் கூட எந்த ஒரு குறையும் எழுதி வைக்கல என நோட்டை எடுத்துக் காட்டி பதிலடி கொடுக்கிறார்.

அடுத்து செல்வி காபி குடிக்கிறீங்களா என்ன கேட்க எனக்கு அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல என்று ராதிகா சொல்ல பாக்கியா நீங்க இருக்கிற வீட்ல உங்களுக்கு ருசியான சாப்பாடு கூட கிடைக்குதோ இல்லையோ, அவ்வளவு ஏன் ஒரு நல்ல காபி கூட கிடைக்குதோ இல்லையோ இங்கே ஆச்சு குடிப்பீங்கன்னு தான் செல்வி கேட்கிறார் உங்களுக்கு காபி வேணுமா வேணாமா என கேட்க எனக்கு ஒன்னும் வேணாம் என பல்பு வாங்கிக் கொண்டு ராதிகா அங்கிருந்து கிளம்புகிறார்.

அதன் பிறகு கோபி தன்னுடைய நண்பனை வர வைத்து வீட்டில் நடந்த பிரச்சனைகளை சொல்லி குடி போதையில் புலம்புகிறார். அவர் நீதானே இரண்டாவது கல்யாணம் பண்ணுன அப்போ நீ இதெல்லாம் அனுபவிச்சு தான் ஆகணும் என சொல்ல நீ இப்படித்தான் சொல்லுவேன்னு சொல்லியும் உன்கிட்ட புலம்பறேன் பாரு எனக்கு எதுவும் வேணும் இன்னமும் வேணும் என கோபி புலம்பி தள்ளுகிறார்.

அதற்கு அடுத்ததாக பழனிச்சாமி பாக்யாவிடம் ஆறுதலாக பேசி அவருக்கு தன்னம்பிக்கையை உருவாக்கி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.

இங்கே வீட்டில் ஜெனி மற்றும் எழில் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது கோபி குடிபோதையில் வீட்டுக்கு வருகிறார். முதலில் எதுவும் பேசாமல் படி ஏற போக பிறகு மீண்டும் வந்து சோஃபாவில் உட்கார்ந்து ஜெனியை நலம் விசாரிக்கிறார்.

பிறகு எழிலிடம் பேச எழில் பதில் ஏதும் பேசாமல் எழுந்து சென்று விடுகிறார். இந்த நேரத்தில் பாக்யா வீட்டுக்கு வர சுடிதார் பாக்யாவை பார்த்த கோபி குறுகுறுவென பார்க்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

‘அரசன்’ முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு

கலைப்புலி V Creations எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம்…

19 hours ago

தமிழ் சினிமாவில் 50 வருட அனுபவம் கொண்டவர் பாக்யராஜ்

பிரபல இயக்குநரும், நடிகரும், திரைத்துறையின் பல்துறை கலைஞருமான கே. பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சென்னை கிரீம்ஸ்…

19 hours ago

திரைப்பட இயக்குநர் கே. பாக்யராஜ்- வாழ்க்கை வரலாறு சிறப்பு தொகுப்பு

தமிழ் சினிமாவின் “திரைக்கதையின் மன்னன்” என போற்றப்படும் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் கே. பாக்யராஜ் (கிருஷ்ணசாமி பாக்யராஜ்) 1953…

19 hours ago

பாரதிராஜா மறைந்து 17 நாட்களில் காலமான பாக்யராஜ்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான கே. பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். உடல்நலக்குறைவு…

19 hours ago

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமானார்

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய கே. பாக்யராஜ் இன்று காலமானார்.…

21 hours ago

Nightu Nila Lyric Video

Nightu Nila Lyric Video | Vekkai | G.V. Prakash Kumar | Shivani | Akiran Moses

2 days ago