sirakadikka-aasai-episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து, மீனா, பாட்டி மற்றும் அன்னம் அக்காவுடன் கோவிலுக்கு வந்திருக்க ஒரு பக்கம் மீனா பூக்கடை நடத்தும் பெண்ணிடம் சென்று வேலை எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு என விசாரிக்க இன்னொரு பக்கம் ஃபுல் போதையில் வரும் குடிகாரனிடம் முத்து எப்படி சரக்கு அடிக்கணும் என பாடம் எடுக்கிறார்.
அதன் பிறகு எல்லோரும் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட முத்து தன்னுடைய நண்பனிடம் பேச சென்று விடுகிறார். மீனா கோவில் மணியை அடிக்க முயற்சி செய்து கொண்டிருக்க கயிறு எட்டாமல் இருக்கிறது. இதைப் பார்த்த பாட்டியும் அண்ணமும் முத்துவை மீனாவை தூக்கி மணி அடிக்க சொல்கின்றனர். ஆனால் அவளை எல்லாம் தூக்க முடியாது சேர் வேண்டும் என்றால் எடுத்துட்டு வந்து தரேன் என முத்து சேரை தேட அன்னம் அக்கா திட்டம் போட்டு முத்துவுக்கு பலமில்லை என கிண்டல் செய்ய பாட்டி முத்துமிடம் இதை சொல்ல இப்ப பாருங்க என முத்து நேராகச் சென்று மீனாவை தூக்கி மணி அடிக்க வைக்கிறார்.
இங்கே சென்னையில் டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் ஸ்ருதி சாப்பிட்டு வரேன் என்று சொல்லி வந்து ரவி செய்து கொடுத்து அனுப்பிய தோசை சவர்மாவை சாப்பிட்டு அதன் ருசியில் மயங்கி ஹோட்டலுக்கு போன் செய்து ரவியிடம் போனை கொடுக்க சொல்லி அவனை பாராட்டுகிறார். உங்க மனைவிக்கும் உங்களுக்கும் சண்டை வந்தா இங்கே ஏதாவது வித்தியாசமா செஞ்சு அவங்கள சமாளிச்சிடுவீங்க போல என சொல்ல ரவி எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல என்று சொல்கிறான்.
அதன் பிறகு எனக்கு ஏதாவது சாப்பிடணும்னா உங்களுக்கு போன் பண்றேன் உங்க நம்பர் சொல்லுங்க என ஸ்ருதி ரவியின் போன் நம்பரை வாங்கிக் கொள்கிறார்.
இங்கே கோவிலில் கும்பம் எடுக்கும் பூஜையில் ஐயர் கன்னிப்பெண்கள் மூன்று பேரை கூப்பிட இரண்டு பெண்கள் மட்டுமே இருக்கும் நிலையில் மீனா சாமி நான் வரேன் என சென்றுவிட மீனாவுக்கு கல்யாணம் ஆனதால் அவரைப் பார்த்து எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு சுதாரித்துக் கொண்ட மீனா அங்கிருந்து வந்து நான் போய் அவரை தேடிக் கூட்டிட்டு வந்துடுறேன் என நைசாக நழுவி சென்று விட்டார்.
அண்ணம் பாட்டியிடம் பாத்தீங்களா முத்துவுக்கு மீனாவுக்கும் இடையே எதுவும் நடக்கல அத மீனாவே காட்டிக் கொடுத்துட்டா, அவங்களுக்குள்ள நடக்க வேண்டியது நடக்கணும் அப்பதான் இப்படி பிரச்சனை இல்லாம இருப்பாங்க என்று சொல்ல பாட்டியும் அதற்கான வேலைகளை செய்யலாம் என முடிவெடுக்கிறார்.
பிறகு மீனா முத்துவை கூப்பிட்டு வர முத்து எனக்கு வர தெரியாதா என கோபப்பட்டு பேசி வேக வேகமாக நடந்து போக பாட்டி அவளோடு சேர்ந்து நடந்து போ என சொல்ல இவ கூட எல்லாம் நடக்க முடியாது என்று முத்து சொல்ல நான் அவரோட போக மாட்டேன் என்று மீனா சொல்ல இருவருக்கும் இடையே பிரச்சனை வெடிக்கிறது.
மறுபக்கம் ரோகிணி வீட்டுக்கு வர அவளது தோழி திவ்யா விஜயா பெயரை பியூட்டி பார்லருக்கு வைத்தது ஏன் என்று கேட்க நாளைக்கு என்ன பத்தி விஷயங்கள் தெரிய வந்தா நான் இதையெல்லாம் செஞ்சதை வைத்து அவங்க மனச மாத்த முயற்சி பண்ணலாம், அதுக்காகத்தான் என தனது திட்டத்தை சொல்கிறார்.
இந்த நேரம் பார்த்து வீட்டுக்கு வரும் ஒரு பணக்கார கஷ்டமரின் பிஏ உன்னை பற்றி எல்லா விஷயமும் எனக்கு தெரியும் என சொல்லி ரோகினிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடி
க்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
MYSAA Teaser (Tamil) | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy | UnFormula Films
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…