baakiyalakshmi-episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவை சமாதானம் செய்ய பார்க்க ராதிகா என்னை நீங்க தெருவுல போறவங்க மாதிரி தூக்கி போட்டு விடுவீங்கன்னு சொன்னாங்க, என்னுடைய கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார்கள், எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? உங்க அம்மா அவ்வளவு பேசுறாங்க ஒரு வார்த்தை கூட நீங்க வாய் திறந்து பேசல எனக்கு உங்கள பார்த்தா அவ்வளவு கோவமா வருது என ஆவேசப்படுகிறார்.
உங்க அம்மா போலீஸ் எல்லாம் கூட்டிட்டு வந்ததுனால எனக்கு கையும் ஓடல காலும் ஓடவில்லை ஓடல என கோபி சொல்கிறார். எனக்குனு கேள்வி கேட்க யாரும் இல்ல அதனால தான் இவங்க எல்லாரும் இப்படி பண்றாங்க என்று சொல்ல ஏன் நான் இருக்கேன் என்று கோபி சொல்கிறார். இதைக் கேட்ட ராதிகா கிழிச்சீங்க என இன்னும் கோபப்படுகிறார்.
இந்த கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு படிச்சு படிச்சு சொன்னேன். ஆனா நீங்க உன்னை நல்லபடியா பாத்துக்குறேன்னு எனக்கு வாக்கு கொடுத்துட்டு இப்போ இருந்த நிம்மதியும் போய் நிற்கிறேன் என கவலைப்பட கோபி எதுவும் பேச முடியாமல் நிற்கிறார்.
அதன் பிறகு ஈஸ்வரி பாக்யாவிடம் வந்தவங்க பேசினதை எல்லாம் நீ மனசுல வச்சுக்காத என்று சொல்ல இப்பவும் நான் அதைத்தான் கேட்கிறேன் நான் எந்த உரிமையில் இந்த வீட்டில் இருக்கிறது? விவாகரத்து கொடுத்ததும் நான் இந்த வீட்டை விட்டு கிளம்பிடலாம்னு முடிவு பண்ணேன் ஆனா நீங்க போக விடல, ராதிகா வந்த பிறகு போகலாம்னு நெனச்சேன் அப்பயும் நீங்க போக விடல, இப்போ எனக்குள்ள அதே கேள்வி தான் இருக்கு நான் ஏன் இந்த வீட்ல இருக்கணும் என்று பாக்கியா கேட்க நீ எங்களோட மருமகள் அந்த உரிமையோட இந்த வீட்லதான் இருக்கணும் என்று சொல்ல அது நமக்குள்ள இருக்க உறவு மத்தவங்களும் அதையே ஏற்றுக் கொள்ளணும்ல என்று சொல்ல ஈஸ்வரி நீ இந்த வீட்ல தான் இருக்கணும், வேற எங்கயும் போறது பத்தி யோசிக்க கூட கூடாது என சத்தியம் வாங்குகிறார். ராமமூர்த்தியும் அவன் செய்ததையே எங்களால ஏத்துக்க முடியல நீயும் இந்த வீட்டை விட்டு போயிட்டா நாங்க உடைந்து போய் விடுவோம் என சொல்லி பாக்யாவின் மனசை மாற்றுகிறார்.
அதன் பிறகு மயூவுடன் வீட்டுக்கு வரும் ராதிகா கிச்சனுக்கு போய் பாக்கியாவை வெறுப்பேத்துவது போல பேசுகிறார். மயூ நீ யாருக்கும் பயப்படக்கூடாது இது உன்னுடைய வீடு நீ விருப்பம் போல எங்க வேணாலும் இருக்கலாம், தேவையில்லாதவங்க எல்லாம் இங்க சந்தோஷமா சுதந்திரமா இருக்கும்போது நீ ஏன் இருக்கக்கூடாது என பேச பாக்கியா கிச்சனிலிருந்து வெளியே வந்து விடுகிறார்.
அதற்கு அடுத்ததாக என்கிட்ட வச்சுக்கிட்டா போலீச கூப்பிடுவேன் என ஈஸ்வரியை வெறுப்பேற்றுவது போல பேச ஈஸ்வரி கோபப்பட்டு சண்டை போட எழுந்துக்கொள்ள பாக்யா வேண்டாம் என தடுத்து நிறுத்துகிறார். அதன் பிறகு ராதிகா இருவரையும் வெறுப்பேற்றுவது போல பேசிவிட்டு மயூவை கூட்டிக்கொண்டு மேலே செல்கிறார்.
இதை தொடர்ந்து பாக்யா, எழில், அமிர்தா, ஜெனி ஆகியோர் பேசிக் கொண்டிருக்கும் போது ஜெனி வேற வீட்டை பார்த்துகிட்டு இங்கிருந்து கிளம்பி போயிடலாம் என சொல்ல பாக்கியா நமக்கு அது ஈசி, ஆனா அத்தை மாமாவுக்கு அது அவ்வளவு ஈஸியா இருக்காது என்று சொல்கிறார். அவருக்கு கொடுக்க வேண்டிய 18 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துட்டா அதுக்கப்புறம் அவர் இங்கு இருக்க முடியாது எப்படா பணத்தை கொடுப்போம் என்று இருக்குனு பாக்கியா பேச எழில் சீக்கிரம் கொடுத்து விடலாம் என ஆறுதல் சொல்கிறார்.இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…