அண்ணாமலை கொடுத்த அதிர்ச்சி. மீனாவிற்கு ஊட்டி விட்ட முத்து. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் மீனா ஊட்டி விட முத்து கடிப்பது போல வாயைத் திறந்து கொண்டு செல்ல மீனா பாட்டி என அலறுகிறார்.

அதன் பிறகு அதான் கடிக்க கறி இருக்கே உன் பொண்டாட்டி கையை கடிச்சிடாத என வீட்டு வேலைக்கார அக்கா முத்துவை கலாய்க்க பாட்டி பொறுமையா சாப்பிடுடா என சொல்ல பிறகு முத்து மீனா ஊட்ட சாப்பிடுகிறார்.

அதன் பிறகு பாட்டி இருவரையும் மாற்றி மாற்றி ஊட்டி விட சொல்ல அதேபோல் ஊட்டி விட்டு கொள்கின்றனர். இலை முழுக்க இப்படித்தான் ஊட்டி விடணுமா என முத்து கேட்க இப்போ நீயே சாப்பிடு என பாட்டி சொல்ல முத்து சாப்பிடுகிறார்.

அதன் பிறகு முத்து ரூமில் இருக்க மீனா ரூமுக்கு வந்து நீங்க இன்னும் தூங்கலையா என கேட்க தூங்கணும் என சொல்லி பாயை எடுக்க நீங்க மேல படுத்துக்கோங்க நான் கீழ படுத்துகிறேன் என மீனா சொல்கிறார். இது கிராமம் பூச்சி பொட்டு எல்லாம் வரும், எதாவது மேலே ஏறி நீ கத்தினால் அதுக்கும் நான் தான் ஏதோ பண்ணிட்டேன்னு நெனச்சுப்பாங்க என சொல்லி மீனாவை மேலே படுக்க சொல்கிறார்.

அதன் பிறகு மீனா உங்ககிட்ட ஒன்னு கேட்கணும் என்று சொல்லி உங்கள் பிரண்ட்ஸ் கூட சேர்ந்தா எப்பயும் பொண்ணுங்கள பத்தி தப்பா தான் பேசுவீங்களா என கேட்க முத்து அதான உண்மை கல்யாணத்துக்கு பிறகு பொண்ணுங்க பிரண்ட்ஷிப்பை பிரிச்சிடுறீங்க என்று பேச உங்க அம்மாவையும் பாட்டியையும் இப்படித்தான் தருவீங்களா என மீனா கேட்க என் அம்மா வேணாலும் இந்த லிஸ்ட்ல வருவாங்க ஆனா என் பாட்டி அப்படி கிடையாது அவங்க ரொம்ப நல்லவங்க என்ன முத்து பெருமையாக பேசுகிறார்.

இதைத்தொடர்ந்து மீனா சரி இதுல நான் எந்த லிஸ்டில் வருவேன் என கேட்க உன்னை எனக்கு கொஞ்ச நாளா தானே தெரியும் உனக்கு வயசு ஆகட்டும் அதுக்கப்புறம் சொல்றேன் என்று சொல்ல அப்போ பார்ட்டி ஆகுற வரைக்கும் என்ன பாத்துக்குவேனு சொல்றீங்க அப்படித்தானே என்று மீனா முத்துவை மடக்கி கேட்கிறார்.

நான் கூட நீங்க குடிகாரன் ரவுடி பையன் என நினைத்தேன் ஆனா அப்படி இல்ல நல்லவரா தான் இருக்கீங்க என்று சொல்ல நான் நல்லவனா எல்லாம் இருக்க விரும்பல நான் இப்படித்தான் எனக்கு தோன்றத செய்வேன் கெட்டவன்னு பேர் எடுத்தாலும் எனக்கு கவலை இல்லை என முத்து சொல்கிறார். மேலும் நீ என்னை மாற்ற நினைக்காத என்று சொல்ல அப்போ உங்களுக்கு நான் உங்களை மாத்திடுவேன்னு பயம் வந்துருச்சு அப்படித்தானே என மீண்டும் முத்துவை மடக்க முத்து அமைதியாக படுத்து விடுகிறார்.

மறுநாள் காலையில் சென்னையில் ரோகினி பியூட்டி பார்லர் திறப்பு விழாவிற்கு அண்ணாமலை, விஜயா, பார்வதி ஆகியோர் வருகின்றனர். ரோகினி இருவரையும் மாலை போட்டு வரவேற்று நீங்கதான் சீப் கெஸ்ட் என சொல்லி விஜயா கையால் ரிப்பன் கட் செய்ய வைத்து பிறகு கடையின் பெயர் ஓபன் செய்ய வைக்கிறார். அதில் விஜயா பியூட்டி வோல்டு என இருக்க அதை பார்த்து விஜயா சந்தோஷப்படுகிறார்.

இதைத் தொடர்ந்து விஜயா ரோகினி பற்றி பெருமையாக சொல்லி மீனாவை மட்டம் தட்டி பேச இது எல்லாம் பார்க்கும்போது எனக்கு என்னவோ நீ தான் பணத்தை கொடுத்து பியூட்டி பார்லர் திறந்த மாதிரி இருக்கு என கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.

அதன் பிறகு மனோஜ் வேலைக்கு டைம் ஆச்சு என கிளம்பி செல்ல அண்ணாமலையும் நாமும் கிளம்பலாம் என்று சொல்ல ரோகிணி என்னுடைய ஃபர்ஸ்ட் கஸ்டமர் ஆன்ட்டி தான் அவங்களுக்கு ஒரு சின்ன மேக் ஓவர் பண்ணி விடுறேன் என்று அண்ணாமலையை ஒரு அரை மணி நேரம் காத்திருக்க சொல்ல அவர் சோபாவில் உட்கார்ந்து தூங்கி விடுகிறார்.

மறுபக்கம் ரோகினி விஜயாவுக்கு மேக்கப் போட்டு இளம் பெண் போல் மாற்றி கொண்டு வர அதை பார்த்து அண்ணாமலை ஷாக் ஆகிறார். பிறகு இந்த அதிசயத்தை அப்படியே படம் பிடித்து விடனும் என சொல்லி தனது மொபைல் கேமராவில் வளைத்து வளைத்து போட்டோ எடுக்க விஜயாவும் விதவிதமாக போஸ் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka-aasai-episode-update
jothika lakshu

Recent Posts

Mr X Tamil Trailer

Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…

2 days ago

Vibe Vaasey Lyric Video

Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…

2 days ago

Pappali Pazhamey Music Video

Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar

3 days ago

Battle Trailer

Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P

3 days ago

Kannamma En Kannamma Lyric Video

Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…

3 days ago

Ambuli Rock Video Song

Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…

3 days ago