கோபியிடம் சண்டையிட்ட ராதிகா. ஈஸ்வரி எடுத்த அதிரடி முடிவு. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ராதிகா கோபியை மேலே வர சொல்லிவிட்டு ரூமுக்கு சென்று மயூராவின் பேக்கை எடுத்து வைக்கிறார். கோபி நீ முன்னாடியே சொல்லி இருந்தா அதுக்கேத்த மாதிரி நான் பிளான் பண்ணி இருப்பேன் என்று சொல்ல ராதிகா சொல்ல மறந்துட்டேன் என சொல்கிறார்.

கோபி உனக்கு இனியாவோட பேசுறது பிடிக்கல அதனால நீ வேணும்னே பண்ண மாதிரி இருக்கு என சொல்ல ராதிகா கொஞ்சம் கூட சந்தோஷமே இல்லாத இந்த வாழ்க்கையை எதற்கு தேர்ந்தெடுத்தேன் என்று தெரியவில்லை என்று சத்தம் போடுகிறார். நீ வர வரைக்கும் இந்த வீட்ல எல்லாரும் சந்தோஷமா இருந்தாங்க ஆனா இப்போ தினம் தினம் பிரச்சனை என கோபி ராதிகாவை திட்டுகிறார்.

அதன் பிறகு ராதிகா மயூவை நானே ஸ்கூலில் விடுறேன் என சொல்ல கோபி அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நானே விடுறேன் அழைத்துக் கொண்டு கீழே வர இதை பார்த்த ஈஸ்வரி நடத்துடா நல்ல நடத்து என கோபியை பிடித்து திட்ட கோபி எதுவும் பேசாமல் வெளியே சென்று விடுகிறார்.

அதன் பிறகு ராதிகா போனில் பேசியபடி கிச்சனுக்கு வர இதை பார்த்த ஈஸ்வரி நன்றாக ராதிகாவிடம் சென்று கோபி அவனுடைய பொண்ணு ஸ்கூலுக்கு கூட்டிட்டு போனா உனக்கு என்ன வந்துச்சு எதுக்கு இப்படி டிராமா போட்டு தடுத்து நிறுத்தின என சத்தம் போட இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகிறது.

ஒரு கட்டத்தில் ராதிகா இது என்னுடைய புருஷனோட வீடு இங்க ஓரமா இருக்க முடிஞ்சா இருங்க இல்லனா வீட்டை விட்டு வெளியே போங்க என சொல்ல ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். இது உன் புருஷன் மட்டுமே வாங்குன வீடு கிடையாது என்னுடைய புருஷன் ஊர்ல இருக்க நிலத்தை எடுத்து பணம் கொடுத்து இருக்காரு என சொல்ல ஆனாலும் இன்னமும் வீடு கோபி பேர்ல தான் இருக்கு அப்போ இங்கே இருக்க எல்லா உரிமையும் எனக்கு இருக்கு யாரும் என்ன எதுவும் சொல்ல முடியாது என சொல்கிறார்.

எல்லோரும் ராதிகாவை யார் வீட்டில் வந்து யாரை வெளியே போக சொல்றீங்க என கேள்வி கேட்க திரும்பவும் அவங்கள ஓரமா அமைதியா இருக்க சொல்லுங்க அப்படி இல்லன்னா வெளியே போக சொல்லுங்க என்று சொல்ல ஈஸ்வரி கோபமாகிறார்.

இனிமே ஒரு நிமிஷம் கூட நீ இந்த வீட்ல இருக்க கூடாது நான் எதுவா இருந்தாலும் கோபி கிட்ட பேசிக்கிறேன் வெளியே போ என்று சொல்ல இந்த இடத்தை விட்டு ஒரு அடி கூட நகர மாட்டேன் என ராதிகா கைநீட்டி பேச ஈஸ்வரி ராதிகாவின் முடியை பிடித்து தரதரவென இழுத்து வந்து வெளியே தள்ளி கதவை சாத்துகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Episode Update
jothika lakshu

Recent Posts

Sigma Official Trailer

Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S

1 day ago

Dorothy Official Trailer

Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja

1 day ago

சண்டக்காரி திரைவிமர்சனம்

லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…

1 day ago

சிக்மா இசை வெளியீட்டு விழாவில் அப்பா விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்!

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…

1 day ago

ஊர் வாயை அடைக்க முடியாது… உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள்! – அட்லீ

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…

1 day ago

முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த விஜய் சேதுபதி!

இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…

1 day ago