தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கல்லை அடித்து விட்டு முத்து மீது பழி போட ஸ்கூலில் இருந்து விஜயாவை வர சொல்லு பேசுகின்றனர் விஜயாவும் இவன்தான் இப்படி பண்ணி இருப்பான் என்று சொல்ல அவர்கள் நாங்க போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்னு இருக்கோம் அப்படி கொடுத்தா உங்க பையன சிறுவர் சீர்திருத்த பள்ளியில் போட்டு விடுவாங்க என்று சொல்லியும் விஜயா எதுவும் சொல்லாமல் அமைதியாகி விடுகிறார். பிறகு வீட்டுக்கு வந்து அனைவரும் பேசிக் கொண்டிருக்க அண்ணாமலையும் பாட்டியும் முத்து ஒன்னு ரவுடி கிடையாது அவன் இந்த தப்பை பண்ணி இருக்க மாட்டா அவங்களே சொன்னாலும் நீ எப்படி இவன் தான் செஞ்சி இருப்பான்னு சொல்ற நீ இவனுக்கு தானே சப்போர்ட் பண்ணி பேசி இருக்கணும் என்று சொல்ல இவன்தான் செஞ்சிருப்பான் இவன் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு போகட்டும் என சொல்ல கொஞ்ச நேரத்தில் போலீஸ் வருகின்றனர்.
அவர்களிடம் அண்ணாமலை என் பையன் அப்படி பண்ணி இருக்க மாட்டான் தயவு செஞ்சு அவனை கூட்டிட்டு போகாதீங்க என்று சொல்ல ஹெட் மாஸ்டர் இப்போ கோமால இருக்காரு அவங்க கம்ப்ளைன்ட் கொடுத்துட்டாங்க ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்ல அதுவும் இல்லாம இவங்க அம்மாவின் சொன்னதுனால கோர்ட்ல ஸ்ட்ராங்கா முடிவு பண்ணிட்டாங்க முத்துவை அழைத்துச் செல்ல விஜய் நீங்க எதுக்கு கெஞ்சுகிட்டு இருக்கீங்க அவனை எடுத்துட்டு போட்டோ விடுங்க எனக்கு அப்பதான் நிம்மதி என்று சொல்ல முத்து அதிர்ச்சியடைகிறார். அனைவரும் பார்க்க வெளியில் முத்துவை ஜிபில் ஏற்றி செல்ல அண்ணாமலை கலங்கி நிற்கிறார் முத்துவும் கண் கலங்கி செல்கிறார். இந்த விஷயத்தை மீனாவிடம் முத்து சொல்லி கதறி அழுகிறார் அதற்கு மீனா நீங்க நல்லவர் என்று தெரியும். ஆனா உங்களுக்குள்ள இவ்வளவு காயங்களை வச்சுக்கிட்டு இருக்கீங்கன்னு எனக்கு தெரியாது என்று சொல்லுகிறார்.
நீங்க இப்ப வரைக்கும் மனோஜ் தான் இத பண்ணாரு என்று ஏன் உங்க அம்மாக்கு தெரியாதா என்று சொல்ல சொன்னாலும் நம்ப மாட்டாங்க ஒருத்தர் மேல அதிக அன்பு வைத்திருக்கும் போது அவங்க மேல எந்த ஒரு பழியை போட்டாலும் ஒத்துக்க மாட்டாங்க ஒருத்தர புடிக்கலைன்னா அவங்க செய்யவே இல்லனாலும் அந்த தப்பு அவங்க மேல போட்டுருவாங்க என்று சொல்லி கண் கலங்கி அழுகிறார். நீங்க ஏன் உங்க அம்மாகிட்ட மனோஜ் இத பண்ணாருன்னு சொல்லல என்று சொல்ல அவங்க ஸ்கூல்ல வந்து என் பையன் தப்பு பண்ணி இருக்க மாட்டான் அவன் மேல எந்த தப்பும் இல்ல என்று சொல்லுவாங்க நீ எதிர்பார்த்தேன் ஆனா பெத்த அம்மாவே வந்து பையன ரவுடி முரடன் என்று சொல்லும் போது நான் ஏன் நொறுங்கி போயிட்டா மீனா என்று சொல்லி அழுகிறார்.
அதற்கு மீனா நீங்க கவலைப்படாதீங்க உங்களுக்காக நான் இருக்கேன் என்று சொல்ல பிறகு அந்த ஹெட் மாஸ்டர் குணமானதுனால என்ன சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து அனுப்பிட்டாங்க பாட்டி வீட்ல தான் போய் படிச்சு அங்கேயே தான் இருந்தேன் ஆனா இந்த விஷயத்துனால எனக்கு படிப்பு ஏறவே இல்ல அம்மா எனக்கு இப்படி பண்ணிட்டாங்களே அம்மா என்ன நம்பாமல் போயிட்டாங்களேன்னு அதுவே தான் தோனி கிட்டு இருந்தது அங்கே இருந்தெல்லாம் நினைச்சேன் அப்புறம்தான் அப்பா கட்டாயப்படுத்தி எங்க கூட்டிட்டு வந்தாரு அதுக்கப்புறம் தான் உனக்கும் எனக்கும் கல்யாணம் நடந்தது என் வாழ்க்கையில சந்தோஷம் என்றதையே உன்ன கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் தான் எனக்கு கிடைச்சது என்று சொல்லுகிறார் பிறகு முத்து என்ன சொல்லுகிறார்? மீனாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
