ஸ்ருதிக்கு மீனா உதவி செய்ய முத்துக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா ரோகினியை திட்டு விட மனோஜ் சரி நீங்க போங்கம்மா நான் ரோகிணி கீழ படுக்க சொல்லிட்டு நான் மேல படுத்துகிறேன் என்று சொல்ல அதெல்லாம் தேவையில்லை நீ எழுந்து ரூமுக்கு வா நீ அப்பா கூட படுத்துக்க நான் கீழ படுத்து இருக்கேன் என அழைத்துச் செல்ல ரோகிணி கோபப்படுகிறார். மறுபக்கம் சுருதி ரெஸ்டாரன்ட் பற்றி லேப்டாப்பில் பார்த்துக் கொண்டிருக்க ரவி வந்தவுடன் இன்டீரியர் எப்படி இருக்குன்னு பாரு ரவி என்று சொல்ல அதெல்லாம் எனக்கு இப்போதைக்கு தேவையில்லை என்று சொல்லுகிறார். உடனே வழக்கம் போல் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட ஒருவருக்கொருவர் பேசாமல் போன எடுத்துப் பாட்டு கேட்கின்றனர்.
இரண்டு பேரும் ஒரே மாதிரி சைகை செய்ய ஸ்ருதி கவனித்து ரவி காதில் இருக்கும் ஹெட்செட் எடுத்து கேட்க இருவரும் ஒரே பாடலை கேட்கின்றனர் பிறகு இருவரும் சமாதானமாக சந்தோஷப்படுகின்றனர். முத்து சீதாவுக்காக ஜாதகம் கொடுத்து வைத்திருக்கும் இடத்திற்கு செல்வத்துடன் வருகிறார். ஏதாவது மாட்டியிருக்கான்னு பார்ப்போம் என்று சொல்லி வர அங்கு இருப்பவர் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க என சொல்லி உட்கார வைக்கின்றனர். பிறகு ஜோதிடர் அவர்களை உள்ளே கூப்பிட, ஏதாவது வரன் வந்திருக்கா என்று முத்து கேட்க சீதா என்ற பெயரில் கொடுத்த ஜாதகம் தானே அவங்களுக்கே பிறந்த மாதிரி ஒரு ஜாதகம் வந்து இருக்கு பத்து பொருத்தமோ அம்சமா வந்திருக்கு என்று சொல்ல முத்து சந்தோஷப்படுகிறார்.
அவரோட பெயர் அருண் என்று சொல்ல முத்துவின் முகம் மாறுகிறது அவங்க அம்மாவை வர சொல்லி இருக்கேன் என சொல்லி கூப்பிட சொல்லுகிறார் உடனே அருண் அம்மா வந்து நிற்க இந்த கல்யாணம் நடக்காது என்று சொல்லிவிட்டு முத்து கோபமாக சென்று விடுகிறார். ஏமா இவர் எப்படி இருக்காரு நல்லா பொருந்தி வந்த ஜாதகம் தானே என்று சொல்ல அந்த பொண்ண தான் என் பையன் லவ் பண்றான் என் பையனுக்கு இவருக்கும் சண்டை அதனால கல்யாணத்தை நடத்த விட மாட்டேங்குறாரு என்று சொல்லுகிறார். உடனே செல்வம் ஜாதகம் தான் பொருந்தி இருக்கு என்று சொன்னார் அந்த கடவுளே வந்து சொன்னாலும் அருணுக்கு சீதாவை கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன் என்று சொல்லுகிறார்.
மீனா சுருதியை சாப்பிட கூப்பிட வேண்டாம் மீனா நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் என்று சொல்லுகிறார் ரவி ரெஸ்டாரன்ட் விஷயத்துல எந்த முடிவும் எடுக்க மாட்டேங்கறான் அதனால இன்டீரியர் கலர் கேட்டா சொல்ல மாட்டேங்குற நீங்கதான் அவனுக்கு புடிச்ச கலர் என்னன்னு கேட்டு எனக்கு சொல்லனும் என்று சொல்ல நான் எப்படி கேட்க முடியும் என்று சொல்கிறார் உங்களால முடியும் கேளுங்கள் என்று சொல்லிவிட்டு சுருதி கிச்சனில் மறைந்து கொள்கிறார். ரவி வந்தவுடன் சாப்பிட கூப்பிட வேண்டாம் அண்ணி வெளியே சாப்பிட்டுகிறேன் என்று சொல்லுகிறார் ரெண்டு தோசை சாப்பிட எவ்ளோ நேரம் ஆக போது வாங்க என்று கூப்பிட்டு உட்கார வைத்து பேச்சுவாக்கில் ரவிக்கு பிடித்தது ப்ளூ லைட் ப்ளூ என்று தெரிந்து கொள்கிறார். உடனே சுத்தி சந்தோஷப்பட்டு மீனாவிற்கு நன்றி சொல்லுகிறார். ரோகிணியும், மனோஜ் வேலைக்கு கிளம்ப விஜயா பணம் எப்ப வரும் என்று கேட்கிறார். ஒரு வாரம் டைம் கொடுங்க என்று சொல்ல அதற்குள்ள கொடுத்துட்டா தான் இல்லனா இவன் கூட கடைக்கு போக முடியாது என்று வார்னிங் கொடுத்துவிட்டு போக வித்யா போன் போட்டு ரோகினி வர சொல்லுகிறார்.
முத்து கார் செட்டில் செல்வத்திடம் பேசிக் கொண்டிருக்க செல்வம் என்ன சொல்லுகிறார்?என்ன நடக்கிறது? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikkaasai serial today episode update 26-06-25