siragadikkaasai serial episode update 17-07-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து பசியோடு வீட்டுக்கு வர சாப்பாடு இருக்குமா என்று தெரியவில்லையே என பார்க்க டைனிங் டேபிள் மீது சாப்பாடு இருக்கிறது போய் பார்க்கலாம் என்று திறந்து பார்த்துவிட்டு குழம்பு டேஸ்ட் செய்துவிட்டு மீனா செய்தது போல இருக்கிறது என்று நினைத்து விட்டு மீனா மீனா என கூப்பிடுகிறார் மீனா மறைந்து கொண்டிருக்க ஸ்ருதி கரெக்டா சொன்னீங்க மீனா முத்து கண்டுபிடிச்சிட்டாரு என்று சொல்ல மீனா அவர் என்னை கூப்பிட்டுக்கிட்டே இருக்காரு நான் போய் பாக்கணும் என்று சொல்லி முத்து எதிரில் வந்து நிற்கிறார். இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டே இருக்க சுருதி உங்களுடைய ரொமான்ஸ் போதும் போய் சாப்பிடுங்க என்று சொல்லுகிறார்.
உடனே முத்துவை சாப்பிட சொல்ல முத்து உட்கார்ந்து சாப்பிடுகிறார். இப்பதான் வழி தெரிஞ்சதா என்று கேட்க வழியெல்லாம் தெரியும் நீங்க தானே போ சொன்னிங்க என்று சொல்லுகிறார். கோவத்துல சொன்னேன் என்று சொல்ல அதனால்தான் கோபம் தனியும் வரை வர வேண்டாம் என நினைச்சேன் என்று சொல்லுகிறார். சரி நீ சாப்டியா என்று கேட்க மீனா சாப்பிட்டேன் என சொல்லுகிறார். நான் வராம நீ சாப்பிட்டு இருக்க மாட்டேன்னு தெரியும் வா சாப்பிடலாம் என்று சொல்ல நான் சாப்பிட்டேன் நீங்க சாப்பிடுங்க என்று சொல்ல சுருதி மீனா இன்னும் சாப்பிடாம தான் இருக்காங்க என்று சொல்லிவிட்டு ரூமுக்குள் சென்று விடுகிறார் உடனே முத்து மீனாவை உட்கார வைத்து மாறி மாறி சாப்பாடு ஊட்டிக்கொள்கின்றனர்.
கட்டில் மீது உட்கார்ந்து ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டே இருக்க பிறகு மாறி மாறி தலையில் கொட்டிக்கொண்டு எதுக்கு வீட்டை விட்டுப்போன என்று கேட்க நீங்க தானே போக சொன்னீங்க என்று சொல்லி கொட்டிக் கொண்டு தலையணை சண்டை போடுகின்றனர். இதனைப் பார்த்த ஸ்ருதி சந்தோஷப்பட்டு ரூமுக்கு சென்று ரவியின் தலையில் கொட்டுகிறார். தூங்கிக் கொண்டிருந்த ரவி யார் கொட்டியது என்று தெரியாமல் முழிக்க பிறகு மீண்டும் படுத்த உடன் ஸ்ருதி என கண்டுபிடித்து விடுகிறார். எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்க முத்துவும் மீனாவும் அங்க மாறி மாறி கொட்டிக்கிட்டு ஜாலியா சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க மீனா கிட்ட சண்டை போட்டாலும் அவங்க உடனே சேர்ந்துக்கிட்டாங்க பாருங்க என்று சொல்லுகிறார்.
ரவியும் அவனுக்கு சின்ன வயசுல இருந்து அம்மாவோட பாசம் கிடைச்சது இல்ல, இப்போ அண்ணி அந்த இடத்துல இருந்து பாத்துக்குறாங்க என்று சொல்லிவிட்டு மீண்டும் இவர்களும் ஜாலியாக சண்டை போட்டுவிட்டு படுகின்றனர் மறுநாள் காலையில் மீனா சமைத்துக் கொண்டு இருக்க சீதா போன் போடுகிறார். நலம் விசாரித்துவிட்டு மாப்பிள்ளை விருந்து இருப்பதாக கூப்பிடுகிறார். கண்டிப்பா நீயும் மாமாவும் வந்து விடனும் என்று சொல்ல நான் வருவதில் பிரச்சனை இல்லை உங்க மாமா தான் என்ன சொல்லுவாங்க தெரியல என்று சொல்ல நீ மாமாவை கண்டிப்பா கூட்டிட்டு வாகா என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறார்.உடனே முத்து வர மீனா சீதா போன் பண்ண விஷயத்தை சொல்ல நீ போயிட்டு வா மீனா நான் வரல என்று சொல்லுகிறார்.
முதலில் எனக்கு சவாரி இருக்கு என்று சொல்ல பிறகு வற்புறுத்தி கூப்பிட ஏற்கனவே அவனுக்கும் எனக்கும் ஆகாது அவன் எதனா ஒன்னு பண்ணுவா அதுக்கு எல்லாம் நான் பதில் பேசுவேன் இதெல்லாம் தேவையா விருந்து என்றால் சந்தோசமா இருக்க வேண்டியது இடம் நீ போயிட்டு வா என்று சொல்லி அனுப்பி வைக்கிறார் மீனா விருந்துக்கு அருண் வீட்டுக்கு போக என்ன நடக்கிறது? சீதாவின் மாமியார் என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.…
பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
புடவையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சினேகா. என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய யுவராதனை…
பாக்கியலட்சுமி ரித்திகா வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. சமீபத்தில் இந்த சீரியல்…
முத்து சிறார் ஜெயிலுக்கு போகும் காரணம் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
மதராசி படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…