Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கிரிஷ் பாட்டி பற்றி விசாரித்த முத்து, ரோகினி எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

siragadikkaasai serial episode update 14-08-25

கிருஷுக்கு ரோகினி டிசி வாங்க,மீனாவுக்கு சந்தேகம் வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை,இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ் மனோஜ் மற்றும் ரோகினி கையைப் பிடித்துக் கொண்டு நான் இந்த வீட்ல தான் இருப்பேன் அனுப்பிடாதீங்க என்று அழுது கொண்டே இருக்க மனோஜ் கையை உதறிவிட்டு அமைதி ஆகிறார் பிறகு முத்து நீதான் ஓட்டு போட சொன்ன இல்ல நானு அப்பா மீனா மூணு பேர் நீயும் அம்மாவும் மட்டும்தான் நாங்க தான் ஜெயிச்சோம் என்று சொல்ல ரவி சுருதி இடம் மனோஜ் நேத்து எனக்கு சப்போர்ட் பண்றேன்னு சொன்னீங்க இப்ப ஏன் கை தூக்க மாட்டேன்றீங்க தூங்குங்க என்று சொல்ல கிரிஷ் இந்த வீட்ல இருக்கட்டும் அவங்க பாட்டி வர வரைக்கும் போக வேண்டாம் அவன தெரிஞ்சவங்க யாராவது வந்தாலும் பாட்டி வந்தாலும் அவன் போகட்டும் என்று சொல்லிவிட அண்ணாமலையும் இதுதான் என்னோட முடிவும் திரும்பவும் இதை பத்தி யாரும் பேசக்கூடாது என்று உறுதியாக சொல்லிவிடுகிறார்.

மறுபக்கம் முத்து ஆட்டோ ஸ்டாண்டில் வந்து ரோகினி இன் அம்மாவின் புகைப்படத்தை காட்டி விசாரிக்க ஒரு ஆட்டோக்காரர் நான் இவங்களை கோவில்ல விட்டதாக சொல்லுகிறார். உடனே மீனாவுக்கு போன் போட்டு கோவில்ல விசாரிச்சு பாரு மீனா என்று சொல்ல மீனா சத்யாவுக்கு போன் பண்ணி கோவிலுக்கு வர சொல்லுகிறார். அண்ணாமலை ஆட்டோவில் கிருஷை ஸ்கூலுக்கு அழைத்துக் கொண்டு வந்து விட அங்கு ஒரு பெண்மணி இருப்பதை பார்த்த கிரிஷ் பாட்டி என நினைத்து போய் கூப்பிட்டு பார்க்க அது வேறொருவராக இருக்கிறது உடனே அண்ணாமலை அவனுடைய பாட்டி மாதிரி இருக்கீங்க அதனாலதான் கூப்பிட்டான் என்று சொல்ல சரி எனக்கு வேலை இருக்கு கிரிஷ் நான் கிளம்புறேன் நீ பத்திரமா போ என்று சொல்லி அனுப்ப ரோகினி மறைந்திருந்து பார்த்துவிட்டு அண்ணாமலை கிளம்பியவுடன் கிருஷை கூப்பிட்டு பேசுகிறார்.

நான் பாட்டி வர வரைக்கும் கூடவே இருக்கமா என்று சொல்ல எனக்கும் ஆசை தான் ஆனால் அது முடியாது கிரிஷ் என்று சொல்ல, எனக்கும் அப்படி இருக்கணும்னு ஆசைதான் ஆனா இப்போ அது பத்தி உனக்கு சொன்னா புரியாது நீ பெரிய பையன் நான் என்ன நான் சொல்றேன் எனக்கு புரியுமா நீங்க சொல்லுங்க என்று சொல்ல அதெல்லாம் வேணாம் கிருஷ், நான் உன்னோட பிரின்ஸ்பல் பார்க்க போகணும் என்று அழைத்துச் செல்கிறார் பிறகு சந்தித்து பேசி டிசி கேட்டிருந்த ரெடி ஆயிடுச்சா என்று சொல்ல அதெல்லாம் ரெடி ஆயிடுச்சு நல்லா படிக்கிற பையன எதுக்கு இப்படி பாதியில் கூட்டிட்டு போகணும் என்று சொல்ல எங்க இருந்தாலும் நல்லா படிச்சுவா அம்மா கொஞ்சம் உடம்பு சரியில்ல அதனால சொந்த ஊருக்கே போகலாம்னு இருக்கேன் என்று சொல்லி டிசியை வாங்கிவிட கிரிஷ் நான் இந்த ஸ்கூல்ல தான் படிப்பேன் எனக்கு இந்த ஸ்கூல்ல தான் பிரண்ட்ஸ் இருக்காங்க என்று சொல்லுகிறார்.

ஆனால் ரோகினி வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்ல ஓவராக அடம் பிடிக்க அடித்து ஆட்டோவில் இழுத்துச் செல்கிறார் இதனை க்ரிஷ் பாட்டி மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருக்க அடி பாவி அவன் உன் கூட இருக்கணும்னு தான் அவன விட்டுட்டு வந்தேன் நீ ஸ்கூல்ல இருந்து படிப்பு கெடுத்து கூட்டிட்டு போற என்று நினைக்கிறார் மறுபக்கம் சத்யாவும் மீனாவும் கோவிலில் வந்து விசாரிக்கின்றனர். அங்கு இருப்பவர்கள் இவர்களைப் பார்த்ததாகவும் இரண்டு நாளா வந்து அன்னதானம் சாப்பிட்டாங்க என்று சொல்ல பூசாரியும் இரண்டு நாள் தொடர்ந்து வந்தாங்க ஆனா இன்னைக்கு வரவில்லை என்று சொல்ல மீனா முத்துக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொல்லுகிறார் சரி நீ வேற ஏதாவது கோவில்ல விசாரிச்சு பாரு என்று சொல்லி ஃபோனை வைக்கிறார் மறுபக்கம் ரோகினி கிருஷை கூட்டிக்கொண்டு வித்யா வீட்டுக்கு வர வித்யா என்ன சொல்லுகிறார்? ரோகிணியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikkaasai serial episode update 14-08-25