தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த முத்துவின் ஃபிளாஷ்பேக் காட்சி கடந்த வாரம் வெளியாகி இருந்தது. மனோஜ் பண்ண தப்புக்காக தான் முத்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு சென்றுள்ளார் என்ற உண்மையும் தெரிய வந்தது.
இந்த நிலையில் தற்போது விஜயா டாக்டர் பட்டத்திற்காக எடுத்த வீடியோ மற்றும் போட்டோக்களை பார்வதியின் பிரண்டிடம் காட்ட உங்களுக்கு டாக்டர் பட்டம் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கு உங்களுக்கு பரிந்துரை செய்ய நான் உதவி பண்றேன் என சொல்லுகிறார் முத்து டாக்டர் பட்டம் குறித்த விஷயத்தை பார்வதி இடம் கேட்டு தெரிந்து கொண்டு அம்மாவுக்கு இது கிடைக்கக்கூடாது அவங்க பொய் சொல்லி வாங்குறாங்க என்று சொல்லுகிறார்.
உடனே விஜயாவின் ஃப்ரெண்ட் இடம் வந்து நீங்க தான் எங்க அம்மாவுக்கு டாக்டர் பட்டத்துக்கு பரிந்துரைக்கிறீங்களா? நீங்க இந்த வீடியோவை பாருங்க என்று சொல்ல அதில் விஜயா பிச்சைக்காரனைக் கொம்பெடுத்து அடிக்கிறார் இதை மீனா வீடியோவாக எடுக்கிறார். உடனே இதைப் பார்த்து அவர்கள் உங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட விஜயா கடுப்பாகிறார்.
என்ன நடக்கப் போகிறது என்று இனி வரும் எபிசோடுகள் பார்த்து தெரிந்து கொள்வோம்.
