தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவின் டெக்கரேஷனைப் பார்த்து சுருதி சூப்பராக இருக்கு சொல்ல இதை சோசியல் மீடியாவில் மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்று சொல்லி அதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர் அதற்கு மீனாவின் லுக்கை மாற்றி சுருதி போட்டோ எடுக்கிறார். பிறகு முத்து சொல்லிக் கொடுக்கும் படி மீனா செய்கிறார்.
மறுபக்கம் ரோகினி மனோஜ் கடையில் உட்கார்ந்து கொண்டிருக்க, சிட்டி போன் செய்து பணம் இன்னும் வரல என்று சொல்லுகிறார். உடனே ரோகினி நான் அனுப்புனா தான வரும் சொல்ல என்ன கலாய்க்கிறீயா கொஞ்ச நேரம் ஆக ஆக ரொம்ப சீரியஸா இருக்கா என்று சொல்லுகிறார். எனக்கு புரியுது நான் தரேன் தானே சொல்றேன் என்று சொல்லுகிறார் ரோகினி. அப்படி இல்லன்னா அவன் செத்த பிறகு பாடிய உங்க வீட்ல போட்டு நான் எங்கயாவது போயிடுவேன் என்று சொல்லி மிரட்டுகிறான்.
இதனால் பதறிப் போன ரோகினி விஜயாவின் பணத்தை எடுக்க முடிவு செய்கிறார். விஜயா டான்ஸ் கிளாஸில் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிற ரதி உங்கள மாதிரி டான்ஸ் ஆடவே முடியாது மாஸ்டர் என்று ஐஸ் வைக்கிறார். கொஞ்ச நேரத்தில் அனைவரும் கிளம்ப சொல்ல அந்த நேரம் பார்த்து ரோகினி வருகிறார். இன்னைக்கு மேக்கப் போட ஒரு வீட்டுக்கு போயிருந்ததாகவும் அங்கு உங்கள பத்தி பேசினதாகவும் அவங்களுக்கு உங்களை ரொம்ப பிடிச்சு போய் அவங்களோட ஸ்நேக்ஸ் கொடுத்தாங்க என்று சொல்லி எடுத்து வைக்கிறேன் வாங்க என்று கூப்பிட்டு பரிமாறுகிறார். உடனே மீனாவை திட்டியும் ரோகினியை பெருமையாகவும் பேசுகிறார்.
விஜயாவும் பார்வதியும் நல்லா சாப்பிட்டுக் கொண்டிருக்க நைசாக போன் வந்தது போல் ரோகிணி மேலே சென்று பணத்தை எடுத்து வைத்துக் கொண்டு கீழே போன் பேசி வந்து சமாளிக்கிறார். விஜயா இந்த மீனா சாப்பாடு சாப்பிட்டு நாக்குல செத்துப்போச்சு என்று சொல்லுகிறார் மீனா நல்லதா சமைப்பா என்று பார்வதி கேட்க நல்லா தான் சமைப்பா ஆனா இவளுக்கு இந்த மாதிரி சமைக்க தெரியாதுல ரோகிணி தான் எனக்காக எடுத்து வந்திருக்கா என்று சொல்லுகிறார். மூணு பேருலயே எனக்கு புடிச்ச மருமக ரோகிணி தான் என்று பெருமையாக பீத்திக் கொள்கிறார். ரோகிணி கிளம்பிடலாமா என்று யோசிக்க இல்ல டவுட் வந்துரும். இவங்க கூடிய கிளம்பலாம் என்று முடிவெடுக்கிறார்.
மறுபக்கம் சுருதி மீனாவிற்கு ராம்ப்வாக் சொல்லிக் கொடுக்க, மீனாவும் அதே போல் செய்ய முத்து போட்டோ எடுக்கிறார். அந்த நேரம் பார்த்து ரவி வருகிறார். பிறகு மீனா என்ன சொல்லுகிறார்? அதற்கு முத்துவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
