தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடின் பார்வதியும் சிவனும் டான்ஸ் ஆட வேண்டும் என இருவரும் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்க விஜயாவும் சிந்தாமணியும் வந்து பார்த்து என்ன பார்வதி இதெல்லாம் பார்க்கவே நல்லா இல்ல என்று சொல்லிக் கொண்டிருக்க நீ மட்டும் சந்தோஷமா இருக்க எனக்கு மட்டும் பிரச்சனையா இருக்கு என்று சொல்லுகிறார் நம்ம மனசுல நல்லது நினைச்சாலே பிரச்சனை இருக்காது என்று சொல்ல அப்ப நான் யாருக்கும் நல்லது நினைக்கலையா என்று கேட்கிறார்.
என்னாச்சு என்ன விஷயம் என்று கேட்க ஸ்ருதி விஷயத்தைப் பற்றி சொன்னவுடன் நீத்து பண்றது ரொம்ப தப்பு என்று பார்வதி சொல்லுகிறார் உடனே விஜய நீ பண்றது மட்டும் ரொம்ப சரியா என்று முணுமுணுக்கிறார். உடனே சிந்தாமணி இதுக்கெல்லாம் ஒரு சாமியாரை பார்த்தா கரெக்டா இருக்கும் என்று சொல்ல பார்வதி இப்பல்லாம் நான் எந்த சாமியார்கிட்டயும் போறது கிடையாது கோவிலுக்கு போயிட்டு வர்றதோடு சரி என்று சொல்ல உடனே சிந்தாமணி எனக்கு தெரிஞ்ச சாமியார் இருக்காங்க நான் உங்ககிட்ட பேசிட்டு சொல்றேன் மாஸ்டர் என்ன சொல்லுகிறார் மறுபக்கம் மீனாவின் கடை திறப்பு விழா கோலாக்கலமாக நடக்கிறது. மீனாவின் அம்மா மீனாவின் கடையை பார்த்து கண்கலங்கி நிற்க மீனா என்னாச்சுமா என்று கேட்கிறார் நான் இவங்க ரெண்டு பேரையும் படிக்க வச்சேன் ஆனா ஒன்னும் படிக்க வைக்கல ஆனா நீ இந்த தொழிலை முன்னேறி சாதித்து காட்டிருக்கேன் நீ இன்னும் பல உயரங்களுக்கு போகணும் மாப்பிள்ளை உன் கூட இருக்கிற வரைக்கும் நீ இதைவிட உயரத்துக்கு போவ என்று சொல்லுகிறார்.
உடனே முத்து குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் அழைத்துக் கொண்டு கடை திறப்பு விழாவிற்கு வர அனைவரும் வந்து இறங்கியவுடன் மீனாவிற்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர் அண்ணாமலை பெரிய தொழிலதிபரா வருவமா என்று சொல்ல ரவியும் அவரது வாழ்த்தை தெரிவிக்கிறார் இது எல்லாத்துக்கும் காரணம் இவர்தான் என்று மீனா சொல்ல இவன் ஒன்னும் காரணம் கிடையாது எங்களுக்கு கிடைக்க வேண்டிய இடத்திலிருந்து பேசி நீ வாங்கி இருக்க என்று மனோஜ் சொல்ல அண்ணாமலை அமைதியாக இருக்கச் சொல்லுகிறார். மறுபக்கம் பாட்டி போன் போட்டு வீடியோ காலில் முத்து மீனாவுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு ஆசிர்வாதம் எப்பவும் உங்களுக்கு இருக்கும் இன்னும் நிறைய சாதிக்கணும் என்று சொல்லுகிறார். உடனே அண்ணாமலையிடம் கொடுக்க சொல்லி அவரிடம் பேசிக் கொண்டிருக்க ரவி ஸ்ருதிக்காக காத்துக் கொண்டிருக்கிறார் முத்துமீனா வந்து என்னாச்சு என்று கேட்க தான் காத்திருக்கிறேன் என்று சொல்லுகிறார் உடனே அந்த நேரம் பார்த்து சுருதி மீனாவுக்கு வீடியோ கால் போட்டு ஹோட்டலில் இன்ஸ்பெக்ஷன் வராங்க அதனால வர முடியாது சாரி மீனா நான் நாளைக்கா வரேன் என்று சொல்லி பேசிக்கொண்டு இருக்க விஜயா வந்து போனை வாங்கி ஏமா வீட்டுக்கு வரலை என்று கேட்க என்னால இப்ப வர முடியாது அது உங்க பையன் கையில தான் இருக்கு என்று சொல்லுகிறார் அதுவும் இல்லாம மீனாவோட இந்த வளர்ச்சிக்கு காரணம் அவரோட புருஷன் தான். அதை புரிஞ்சுக்கோங்க என்று சொல்ல ரவி இதை கேட்டு அமைதியாக இருக்கிறார். விஜயா ரவி இடம் போனை கொடுக்கிறேன் என்று சொல்ல பேச விருப்பமில்லை என்று சொல்லிவிட்டு போனை வைத்து விடுகிறார்..
கொஞ்ச நேரத்தில் ஒரு கார் வந்து நிற்க யாராவது வி.ஐ.பி வராங்களா என்று பார்க்க ரோகிணி வந்து இறங்க குடும்பத்தினர் ஆயிருச்சு அடைகின்றனர். குடும்பத்தினர் என்ன கேட்கின்றனர்?அதற்கு ரோகினியின் பதில் என்ன? என்ன நடக்கிறது?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.


