சிந்தாமணி ஆட்களை அலறவிட்ட ஸ்ருதி, முத்துவிற்கு கிடைத்த பணம், இன்றைய சிறகடிக்க ஆசையை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து சிந்தாமணியின் வீட்டிற்கு இன்கம்டேக்ஸ் ஆபீஸ்களாக சென்று பணத்தை எடுத்து வர வேண்டும் என்பதை சொல்ல ரவி பயப்படுகிறார் ஆனால் ஸ்ருதி நான் பண்றேன் என ஒத்துக் கொள்ள உன்ன பாத்தா காலேஜ் படிக்கிற பொண்ணு மாதிரி இருக்கு நீ ஆபீஸர் என்று சொன்னால் நம்புவார்களா என்று கேட்கிறார். நான் நிறைய டப்பிங் பேசி இருக்கேன் அதனால கண்டிப்பா என்னால பண்ண முடியும் என்று சொல்லுகிறார் ஒரு வழியாக ரவியையும் சம்மதிக்க வைத்த யார் யாருக்கு என்னென்ன கேரக்டர் என்று சொல்லுகின்றனர். ஸ்ருதி ஹெட் ஆஃபீஸர் அவருக்கு நீ அசிஸ்டன்ட் என ரவியை சொல்ல, ரவிக்கும் ஸ்ருதிக்கும் நான் அசிஸ்டன்ட்,என்னோட அசிஸ்டன்ட் செல்வம் என சொல்லுகிறார்.

பிறகு ஒரு வழியாக பிளான் போட்டு மறுநாள் செல்ல முடிவெடுக்கின்றனர். காலையில் இவர்கள் நால்வரும் இன்கம்டேக்ஸ் ஆபிஸர்ஸ் போல கெட்டப் போட்டுக்கொண்டு சிந்தாமணி வீட்டின் முன் வந்து காத்துக் கொண்டிருக்கின்றனர் சிந்தாமணி அந்த நேரம் பார்த்து வேலை ஆட்களிடம் மண்டபத்தில் இருந்து பணம் கொடுக்க வருவாங்க வாங்கி வைங்க என்று சொல்லிவிட்டு வெளியில் வருகிறார் அதனை மறைந்திருந்து இவர்கள் கவனித்து சிந்தாமணி காரில் ஏறி சென்றவுடன் உள்ளே போக காத்திருக்கின்றனர்.

ஒரு வழியாக சிந்தாமணி போக ரவி இவர்களைப் பார்த்தாலே பயமா இருக்கு என்று சொல்லுகிறார் உடனே ஸ்ருதி அவருக்கு தைரியம் சொல்லி பிறகு அனைவரும் ஐடென்டி கார்ட் போட்டுக்கொண்டு சிந்தாமணி வீட்டுக்கு வருகின்றனர். முதலில் ஸ்ருதி போக அவர்கள் யார் என்று தெரியாமல் முழிக்கின்றனர் ஒருவேளை காசு கொடுக்க வருவாங்கன்னு சொன்னாங்களே அவர்களை இருக்கும் என்று சொல்லுகின்றனர். உடனே வந்த உடன் சுருதி ஹிந்தியில் பேச அங்கே இருப்பவர்களுக்கு ஒன்றும் புரியாமல் முழிக்க மீனா செல்வம் ரவி மூவரும் ஸ்ருதியை வியந்து பார்க்கின்றனர். இது என்ன பாஷை தெலுங்கா என்று சிந்தாமணி ஆட்கள் யோசிக்க, ரவியிடம் சொல்லி புரிய வைக்க சொல்லுகின்றார் உடனே ரவி இங்கிலீஷில் பேச அதுவும் அவர்களுக்கு புரியவில்லை.

உடனே முத்து நாங்க இன்கம் டேக்ஸ் ஆபிஸர்ஸ் என்று சொல்ல அப்படின்னா என்ன என்று கேட்கின்றனர் நாங்க வருமான வரித்துறையில் இருந்து வந்திருக்கோம் என்று சொல்லி, சிந்தாமணி என்றவங்க அரசாங்கத்துக்கு கணக்குல காட்டாம பணத்தை சேர்த்து வெச்சிருக்குறதா எங்களுக்கு தகவல் வந்திருக்கு அதனால சோதனை செய்ய வந்திருக்கோம் என்று சொல்ல அனைவரும் பதருகின்றனர். எங்க அம்மா அப்படி பண்ணி இருக்க மாட்டாங்க என்று சொல்ல ரவி நான் வேணும்னா போன் பண்ணி கேக்குறேன் என போன் பண்ண போக ஸ்ருதி போனை வாங்கச் சொல்லி இந்தியில் ரவியிடம் சொல்ல ரவி அனைவரிடமும் போனை வாங்க வேலையால் மற்றொரு போனில் பண்ண போக சுருதி அவரை அரைத்து போனை வாங்குகிறார் இதனை பார்த்து மூவரும் வாயைப் பிளந்து நிற்கின்றனர்.

மறுபக்கம் சிந்தாமணி வயிறு சரியில்லை வீட்டுக்கு போகணும் என்று முடிவு எடுத்து வர இவர்கள் பணத்தை தேடுகின்றனர் முத்துவிற்கு பணம் கிடைத்ததா?சிந்தாமணி வந்து விடுகிறாரா? என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update 28-04-25
jothika lakshu

Recent Posts

Mr X Tamil Trailer

Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…

3 days ago

Vibe Vaasey Lyric Video

Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…

3 days ago

Pappali Pazhamey Music Video

Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar

4 days ago

Battle Trailer

Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P

4 days ago

Kannamma En Kannamma Lyric Video

Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…

4 days ago

Ambuli Rock Video Song

Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…

4 days ago