தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ் ஹாஸ்டலில் இருக்கும் பசங்களை பார்க்க அவர்களது அம்மா வந்து இருக்க அவர்களையே பார்த்து ஏக்கப்பட்டு நிற்கிறார். பிறகு அங்கிருந்து கிளம்பி போக உடனே மூன்று பசங்க வந்து எங்க அம்மா ட்ரெயின் வாங்கி கொடுத்தாங்க எங்க அம்மா பஸ் வாங்கி கொடுத்தாங்க என்று வாங்கி கொடுத்த பொம்மைகளை காட்டுகின்றன உங்க அம்மா ஏன் வரல என்று கேட்க இன்னொரு பையன் இவனுக்கு அம்மா இருக்காங்களான்னு தெரியல இவனை பார்க்க யாருமே வரல இவன் தான் அம்மா இருக்காங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்கான் என்று சொல்ல உடனே கிருஷ் எனக்கு அம்மா இருக்காங்க என்று சொல்லுகிறார். உங்க அம்மா பேரு என்ன என்று கேட்க ரோகினி என்று சொல்லிவிட்டு இல்லை என சொல்லி கல்யாணி என சொல்லுகிறார். இவன் பேர மாத்தி மாத்தி சொல்றா இவனுக்கு யாருமே இல்லை என்று சொல்லிவிட்டு அவர்கள் ஓடிவிடுகின்றனர்.
உடனே க்ரிஷ் மேனேஜரிடம் வந்து எங்க அம்மா கிட்ட பேசணும் என்று போனை கேட்கிறார் இப்போ பேசக்கூடாது என்று சொல்ல எல்லாரும் அவங்க பசங்கள பாக்க வந்திருக்காங்க ஆனா என்ன பாக்க மட்டும் யாருமே வரல நான் எங்க அம்மா கிட்ட பேசணும் என்று சொல்ல,அவரும் போன் போட்டுக் கொடுக்கிறார் பிறகு கிரிஷ் அழுது கொண்டே என்னை வந்து நீயம்மா பார்க்க மாட்டேங்கற எல்லாரும் இங்க வந்து பார்க்கிறாங்க என்ன கிண்டல் பண்றாங்க என்று சொல்ல நான் இந்த மன்த் என்டு வரேன் இப்ப என்னால வர முடியாது புரிஞ்சுக்கோ க்ரிஷ் என்று சொல்ல அதெல்லாம் எனக்கு தெரியாது நீ இப்பவே வரணும் என்ற அடம் பிடிக்காத வழக்கம் போல் நீ இப்படி அடம்பினால் நானும் பாட்டி மாதிரி தொலைந்து போயிடுவேன் அப்புறம் வரவே மாட்டேன் என்று பிளாக்மெயில் பண்ண கிரிஷ் அமைதியாக சென்று விடுகிறார். மறுபக்கம் மீனா அதே ஸ்கூலுக்கு டெகரேஷனுக்காக வந்து மேனேஜரை சந்திக்க சிந்தாமணியும் வருகிறார்.
சிந்தாமணி நேராக கரஸ்பாண்டன்ட் கிட்ட சென்று பேசிவிட்டு வர மேனேஜரிடம் மீனா அவங்க முடிச்சுக்குவாங்க வேண்டாம் சார் என்று சொல்லுகிறார் என் மேடம் நீங்க கொட்டேஷன் சொல்லாமலே சொல்றீங்க என்று கேட்க நான் என்ன கொட்டேஷன் கொடுத்தாலும் அதைவிட கம்மியா பண்ணி தரேன்னு தான் அவங்க சொல்லுவாங்க என்று சொல்ல சரி உங்களுடன் அமொண்ட மட்டும் சொல்லுங்க என்று சொல்ல உடனே மீனா நான் பண்றது விட நீ குறைத்து பண்றியா உனக்கு இப்ப இருக்கு என்று சொல்லிவிட்டு ஸ்கூல் அதனால எனக்கு லாபம் எல்லாம் வேணாம் பூவோட காசு 15,000 மட்டும் போதும் என சொல்ல பேசிவிட்டு வெளியில் வந்த சிந்தாமணி இடம் மேனேஜர் சென்று அவங்க ஒரு கொட்டேஷன் சொல்லி இருக்காங்க நீங்க என்ன சொல்றீங்க என்று கேட்க அவ பண்ணதை விட நான் 2000 கம்மி பண்ணி தரேன் என்று சொல்லிவிடுகிறார். உடனே மீனா சந்தோஷப்பட மேனேஜரும் சந்தோஷமாக அவர்களை 15,000 பண்ணி தருகிறார்கள், நீங்கள் அதைவிட 2000 கம்மி பண்ணி கொடுத்தா ரொம்ப சந்தோஷமா நீங்களே வந்து பண்ணிடுங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
உடனே சிந்தாமணி மீனா விடம் இதுக்கு 50 ஆயிரம் ஆகும் என்ன நஷ்டமாக வைத்துவிட்ட அல்லவா உன்னை சும்மா விடமாட்டேன் என்று சொல்லுகிறார் எத்தனை பேர் வைத்து சம்பாதித்து இருப்ப உனக்கு புண்ணியத்தை தான் சேர்த்து இருக்கேன் வரட்டுமா சிந்தாமணி என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மீனாவும் அங்கிருந்து கிளம்பி வெளியே வர கிருஷ் தனியாக உட்கார்ந்து கொண்டிருக்கும் மீனாவை பார்த்து விடுகிறார் உடனே கத்தி கொண்டு ஓடி வர மீனாவிற்கு காதில் விழாமல் சென்று விடுகிறார் பிறகு வாட்ச்மேன் கிருஷ் அழைத்துச் சென்று விடுகிறார்.
மனோஜ் ஸ்கூலுக்கு போக ரெடி ஆகி கொண்டு இருக்க அவரது நண்பர் ஃபோன் போட்டு அட்ரஸ் எல்லாம் கரெக்டா இருக்குல்ல என்று சொல்ல அறிவு போர்டிங் ஸ்கூல் தானே என்று கேட்க அதுதான் என சொல்லுகிறார் சரி நான் பாத்துக்கிறேன் நான் வந்துட்டேன்னு சொல்ல ரோகிணி அதிர்ச்சி அடைகிறார் இந்த ஸ்கூல்ல தானே நம்ம கிருஷ் சேர்த்து விட்டு இருக்கோம் என்று யோசித்து விட்டு பார்த்துட்டா என்ன பண்றது என நினைக்கிறார் உடனே மனோஜ் வெளியில் வந்து விஜயாவிடம் நான் ஸ்கூலுக்கு போய் பேசிட்டு வரேன்மான்னு சொல்ல நீ பேசுற பேச்சில் எல்லாரும் உன்ன பாராட்டணும் என்று சொல்லுகிறார். நான் பேச போறது தான் இப்ப வைரலா இருக்க போகுது என்று சொல்ல சரி போயிட்டு வா என்று அனுப்பி வைக்கிறார். மனோஜ் போகாமல் இருக்க ரோகிணி என்ன திட்டம் போடுகிறார்? மனோஜ் என்ன பண்ணப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
