தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம் இன்னைக்கு கிருஷ் அவங்க பாட்டிகிட்ட கூட்டிப் போய் காட்டிட்டு வரணும் என்று சொல்ல வேற வேலை இல்லையா நீங்க போங்க என்று சொல்லிவிட்டு விஜயா ரோகினி சும்மாதான் இருக்கா அவ கூட்டிட்டு போயிட்டு வீட்டுக்கு வரட்டும் இவங்க போனா கூட்டிட்டு போய் திருப்பி கூட்டிட்டு வந்துடுவாங்க என்று சொல்லிவிட்டு ரோகினி இடம் இந்த ததிரத்தை கூட்டிட்டு போய் ஒழிச்சிட்டு வா என்று சொல்ல அண்ணாமலை என்ன பேசணும்னு யோசிச்சு பேசு ஒரு குழந்தையை இப்படி வச்சுக்கிட்டு தான் பேசுவியா என்று சொல்லுகிறார்.
பிறகு முத்து சின்ன வயசுல என்கிட்ட எப்படி பேசணும் அதே மாதிரி பேசாதீங்க அந்த வழி எல்லாம் நான்தான் கிட்ட இவன் தாங்க மாட்டான் என்று சொல்லுகிறார் உடனே பாட்டி சாக கிடக்கிறார்கள் கூட்டு போய்விடு என்று சொல்ல அப்ப பாட்டி சாமிகிட்ட போயிடுவாங்க தாத்தா என்று கிருஷ் கேட்க அண்ணாமலை வாய் வச்சுட்டு உன்னால சும்மாவே இருக்க முடியாதா என்று கண்டிக்கிறார். ரோகினி நானே கூட்டிட்டு போய் கூட்டிட்டு வரேன் நீங்க ஆன்டி விஷயத்தை பாருங்க என்று சொல்லுகிறார். உடனே மீனா கிச்சனுக்கு சென்று விட முத்து வந்து முதல்ல அந்த பையனை பத்தி தெரிஞ்சுக்கலாம் என்று சொல்ல நான் பார்வதி அன்று கிட்ட பேசி அவளோட நம்பர் அட்ரஸ் வாங்கணும்னு சொல்ல சூப்பர் மீனா வாங்கிவை அதுக்குள்ள நான் அந்த பையனை எப்படி மீட் பண்றதுன்னு யோசிக்கிறேன் என்று சொல்லுகிறார்.
ரோகிணி ஹாஸ்பிடல்க்கு வந்து பார்க்க டாக்டர் செக் பண்ணி விட்டு இன்னும் ஒரு வாரம் இல்லை இருக்கணும் என்று சொல்லிவிடுகின்றனர். க்ரிஷ் எனக்கு அந்த வீட்டுல இருக்குறது ரொம்ப புடிச்சிருக்கு பாட்டி அங்க எல்லாரும் என்ன நல்லா பாத்துக்கிறாங்க தாத்தா எனக்கு ஹோம் ஒர்க் சொல்லி தராரு ஐஸ் கிரீம் வாங்கி தராது என்று சந்தோஷமாக பேசிவிட்டு நீங்களும் அங்க வந்துருங்க நம்ம எல்லாரும் ஒண்ணா இருக்கலாம் என்று சொல்ல ரோகிணி அப்படி எல்லாம் பேசாதே என்று சொல்லுகிறார். உடனே அம்மா அவ மேல எதுவும் கோவப்படுற இவ்வளவு நாள் தனிமையில் இருந்து தான் இப்ப சொந்தங்களை பார்த்தவுடன் சந்தோஷமா இருக்கான் என்று சொல்ல ஏற்கனவே என் மேல எல்லாரும் கோவமா இருக்காங்க இதைப் பத்தி தெரிஞ்சா என்ன வீட்டை விட்டு அனுப்பிடுவாங்க மனோஜ் எப்படி எடுத்துப்பான்னு கூட தெரியாது என்று சொல்லுகிறார். சரி நீ பயப்படாத ரோகிணி எனக்கு கொஞ்சம் சரியான உடனே நான் கிரிஷ் போட்டுட்டு போயிடுறேன் என சொல்லுகிறார்.
மறுபக்கம் முத்து கிருஷ் ஸ்கூலுக்கு யூனிபார்ம் போட்டு ரெடி பண்ண மீனா சாப்பாடு பேக் எடுத்துக் கொண்டு வருகிறார் அண்ணாமலை வேலைக்கு கிளம்ப ஸ்ருதி கிருஷ் சாக்லேட் கொடுக்கிறார் அனைவரும் கிரிஷ்யிடம் சந்தோஷமாக பேசுவதே ரோகினி பார்த்துக் கொண்டிருக்கிறார். பிறகு அனைவருக்கும் பாய் சொல்லிவிட்டு பிரஷ் கிளம்ப விஜயா மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார் உடனே மனோஜ் ரோகினி ரூமுக்கு அழைத்து சென்று முதல்ல இந்த பையனை வீட்டை விட்டு துரத்தி விடு அப்பதான் அம்மா சமாதானமாவாங்க என்று சொல்ல முதல்ல ஆண்ட்டி பிரச்சனையை தீர்க்கதற்கு பார்க்கலாம் என்று சொல்லி மாற்றி விடுகிறார். அனைவரும் வெளியில் சென்று விட விஜயா ஒக்காந்து இருக்க பார்வதி மற்றும் சிந்தாமணி இருவரும் வந்து விஜயாவை சந்தித்து பேசுகின்றனர்.
பார்வதி அந்த ரதியோட வீட்டிலிருந்து வந்து உன்னை எதுக்கு மிரட்டுனாங்க எனக்கு கேட்டவுடனே பதறிப் போயிருச்சு என்று சொல்லுகிறார். சிந்தாமணியும் விஜயாவை பயமுறுத்தும் படி அவங்கள சும்மா இருக்க மாட்டாங்க கொலை பண்ண கூட தயங்க மாட்டாங்க உஷாரா இருங்க என்றெல்லாம் பேசுகிறார். அதற்கு மீனா என்ன சொல்லுகிறார்?ரவி ஸ்ருதி என்ன பேசுகின்றன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
