தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா மேனேஜரிடம் கண்டிப்பா சீதா அவர் மேல எந்த தப்பும் கிடையாது இதன் நிரூபிச்சியா கண்டிப்பா வேலைக்கு வந்து சேருவா என்று சொல்லிவிட்டு வர சீதா அழுது கொண்டே இருக்கிறார் அவருக்கு மீனா ஆறுதல் சொல்ல போக அமைதியாக சென்று விடுகிறார் மறுபக்கம் நடந்த விஷயங்களை வீட்டில் இருக்கும் அனைவரிடமும் சொல்ல வழக்கம் போல் விஜயா சீதா தான் பணத்தை எடுத்து இருப்பா என்று சொல்லுகிறார். உடனே மீனா என் தங்கச்சி ஒன்னும் அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது என்று சொல்ல உடனே மனோஜ் வழக்கம்போல் விஜயாவுக்கு சப்போர்ட் பண்ணி மீனாவின் குடும்பத்தை அசிங்கப்படுத்தி பேச முத்து கோபப்படுகிறார். பிறகு சுருதி எனக்கு கூட பொறந்தவங்க இல்ல ஆனா மீனா சொல்லும்போது சீதா அப்படிப்பட்ட பொண்ணு இல்லன்னு எங்களுக்கே தெரியும் ஆனா நீங்க ஏன் இப்படி பேசிகிட்டு இருக்கீங்க என்று சொல்ல அதெல்லாம் உங்களுக்கு இங்க தெரிய போகுது என்று சொல்லுகிறார்.
பிறகு அந்த ஆட்டோக்காரர் ரொம்ப அழுதுகிட்டே சொன்னாரு அந்த பொண்ணு அது மாதிரி பண்ணிருக்காது என்று சொல்ல அண்ணாமலை முத்துவிற்கு சந்தேகம் வருகிறது ஆட்டோ காரர் எதற்கு அப்படி அழவேண்டும் என்று யோசிக்கிறார் உடனே அண்ணாமலை இந்த விஷயத்துல என்ன பண்ணனும் யோசிச்சு முடிவெடு இதனால ஒரு புது பிரச்சனை வந்துவிட வேண்டாம் என்று சொல்லுகிறார். முத்து சீதாவை நினைச்சாலும் கஷ்டமா இருக்கு இப்ப என்ன பண்றது என்று கேட்க மீனா இதுல என்னங்க யோசிக்கிறதுக்கு சீதா ரொம்ப பாவம் நீங்க தான் ஏதாவது பண்ணனும் என்று சொல்ல இந்த வார்த்தை போதும் என்று சொல்லிவிட்டு செல்வத்திற்கு போன் போட்டு நடந்த விஷயத்தை சொல்லி ஆட்டோக்காரர் வீட்டுக்கு வந்து விசாரிக்க வருகின்றனர் அப்போது அவரது மனைவி கதவைத் திறந்து அவருக்கு காசு வாங்க தான் போயிருக்காரு எதை எடுத்துட்டு போய்டாதீங்க என்று சொல்ல நாங்கள் எதுவும் எடுத்துட்டு போகலாம் வரலாமா அவருடைய பிரண்டுங்க என்று சொல்ல அவர் நம்ப மறுக்கிறார் பிறகு முத்து பேசிய உள்ளே வருகின்றனர் பிறகு என்ன பிரச்சனை என்று கேட்க அவங்க தங்கச்சி கல்யாணத்துக்கு அஞ்சு லட்ச ரூபா வெளிய கடன் வாங்கி இருந்தாரு வட்டி கட்ட முடியாம அவங்க வந்து மிரட்டிட்டு இருந்தாங்க என்று சொல்லுகிறார். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே கொஞ்ச நேரத்தில் சத்யாவும் ஆட்களும் வர இவங்க தான் இப்ப காலி பண்ணிடுவேன்னு சொன்னாங்க என்று சொல்லுகிறார்.
உடனே வெளியில் வந்து அந்த பெண்மணி அவர்களிடம் கெஞ்ச நேற்றும் இத தனமா சொன்ன என்று சொல்லுகிறார். இதையெல்லாம் அமைதியாக நின்று பார்த்துக் கொண்டிருந்த முத்து கொஞ்ச நேரத்தில் அந்த ஆட்டோக்காரர் சீதாவிடம் வாங்கிய பணத்தை வாங்கிக் கொண்டு வேகம் வேகமாக வந்து இவர்களிடம் கொடுக்கப் போக அந்தப் பையை முத்து வாங்குகிறார். இதில் 5 லட்சம் பணம் இருக்கும்னு தெரியும் அது பேங்க்ல இருந்து எடுத்ததா இல்ல பேங்க் போகும்போது எடுத்ததா என்று கேட்க அவர் உண்மையை சொல்லி விடுகிறார். உன் தங்கச்சி கல்யாணத்துக்கு கடன் வாங்கி தான் இது மாதிரி பண்ணிட்டேன் இது மாதிரி நடக்காது என்ன மன்னிச்சிடுங்க என்னை போலீஸ்ல புடிச்சு கொடுக்காதீங்க என்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்க அவரது மனைவியும் அவரை போட்டு அடிக்கிறார் தயவுசெய்து இவரை கம்பிளைன்ட் பண்ணிடாதீங்க இல்லனா நாங்க கடல்ல தான் போய் விழுந்து சாகணும் என்று சொல்ல உடனே முத்து பணமும் கிடைச்சிருச்சு உங்களுக்கும் தண்டனை கிடைக்கக்கூடாது என்று முடிவெடுக்கிறார்.
பிறகு பணம் கிடைச்சிருச்சு திருடன புடிச்சு அடிக்கும்போது அவன் தப்பிச்சு ஓடிட்டான்னு சொல்லிடலாம் என்று முடிவெடுக்கின்றனர். எப்பவுமே திருடி பணத்தை கட்டிட சந்தோஷமா இருக்கலாம் நினைக்காதீங்க ஒழச்சி கட்டினால் தான் மனசுல சந்தோஷமா நிம்மதியும் இருக்கும் என்று சொல்லிவிட்டு நீங்க கார் ஓட்டுவீங்க இல்ல நான் ஏதாவது சவாரி வந்தால் சொல்ற நீங்க போயிட்டு வாங்க நீங்க பூ கட்டுவீங்களா என் பொண்டாட்டி பூ கட்டி டெக்கரேஷன் பிசினஸ் பண்ற ஆள் பத்தலனா கூப்பிடுறேன் வாங்க நீ வந்து உழச்சி கடனை அடைங்க என்று சொல்லிவிட்டு சத்யாவிடம் எதுவும் பேசாமல் சென்று விடுகிறார்.
மறுபக்கம் சீதாவிடம் போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்க நான் பணத்தை எடுக்கல சார் என்று சீதா சொல்லுகிறார். பிறகு போலீஸ் சீதாவிடம் என்ன கேட்கின்றனர்? அதற்கு சீதாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.


