SiragadikkaAasai Serial Episode Update 24-03-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பரசு மணியிடம் வந்து ஸ்வீட்ஸ் எல்லாம் ரெடி ஆயிடுச்சா சம்மந்தி என்று கேட்க எல்லாம் எடுத்து வச்சுக்கிட்டு இருக்காங்க என்று சொல்லுகிறார் நல்லபடியா கல்யாணம் முடிந்தது ஆனால் எனக்கு மட்டும் ஒரே ஒரு குறையா ஆச்சு சம்பந்தி என்னோட பிரண்டோட குடும்பத்துக்கு உங்களை அறிமுகப்படுத்தி வைக்க முடியல என்று சொல்லுகிறார். சரி பரவால்ல அவரோட பையனும் மருமகளும் இங்க தான் இருக்காங்க அது மட்டும் இல்லாம ஒரு திருட்டு ஜோடிங்க ஒன்னு மண்டபத்துக்குள்ள வந்துடுச்சு நகை எல்லாம் திருடிக்கிட்டு போக பார்த்தாங்க அவங்க கிட்ட இருந்து இவங்க ரெண்டு பேரும் நகை எல்லாம் காப்பாத்திருகாங்க என்று சொல்ல இவ்வளவு பண்ணியிருக்காங்க அவங்களுக்கு நான் மாலை மரியாதை செய்ய வேண்டும் என்று மணி முடிவு செய்து மாலையுடன் மேளதாளத்துடன் வருகிறார்.
முத்துவும், மீனாவும் உட்கார்ந்து கொண்டிருக்க மேளதாளம் சத்தம் கேட்டவுடன் இருவரும் திரும்பி பார்க்க அவர்கள் மணியை பார்த்து விடுகின்றனர். உடனே பரசு கறிக்கடைகாரர் மணியை பற்றி பெருமையாக முத்து மீனாவிடம் பேசிக் கொண்டிருக்க அவர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர். உடனே இவர் ரொம்ப நல்ல வேலை எல்லாம் பண்ணி இருக்காரு இவர் பண்ண வேலைக்கு இவருக்கு தான் மாலை மரியாதை போடணும் என சொல்லி கழுத்தில் அவர் எடுத்துக் கொண்டு வந்த மாலையை மணி கழுத்தில் முத்து போட்டு விடுகிறார். மணி அதிர்ச்சியில் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க இவர் பண்ண வேலைக்கு இங்க வச்சு மரியாதை கொடுக்கறதை விட தனியாக கவனித்து விடுவோம் என்று சொல்லி மணி தோல் மேல் கை போட்டு பாசமாக பேசுகிறார்.
மறுபக்கம் அண்ணாமலை இடம் விஜயா என்ன இருந்தாலும் மாப்ள வீடு கொஞ்சம் வசதி இல்ல வசதி கம்மிதான் என்று சொல்ல அதற்கு அண்ணாமலை வசதியே எப்பவுமே பார்க்கக்கூடாது சந்தோஷமா இருந்தா அதுவே போதும் என்று சொல்லுகிறார். உடனே ரோகினி மற்றும் ஸ்ருதியைப் பற்றி பெருமையாக பேசிவிட்டு நீங்களும் தான் கூட்டிட்டு வந்தீங்களே பூக்கற்றவல என்று நக்கல் அடிக்கிறார்.மீனா ரொம்ப நல்ல பொண்ணு என்று அண்ணாமலை பேசிக்கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து முத்து,மீனா வருகின்றனர் அவர்களிடம் வேலையெல்லாம் முடிஞ்சதா என்று கேட்க முடிஞ்சதுபா பரசு மாமா வீட்டிற்கு சடங்கு பண்ண அனுப்பி இருக்காங்க எங்களையும் கூப்பிட்டாங்க என்று சொல்ல போக வேண்டியது தானே என்று கேட்கிறார்.
அது இல்லப்பா நம்ம வீட்டுல ஒரு சடங்கு இருக்கு அதனால தான் நான் வந்துட்டேன் என்று சொல்லுகிறார் நம்ம வீட்ல சடங்கா என்னடா சொல்ற என்று கேட்க மனோஜ் இருக்கானா என்று கேட்டுவிட்டு கூப்பிடுகிறார் உடனே அவர்கள் வந்தவுடன் அண்ணாமலை இடம் பாட்டி முதல்ல அந்த நரி கதை சொல்லுவாங்கல்லப்பா அந்த கதையில நரி பல வேஷம் போடும் ஒரு நாள் எல்லாமே தெரிஞ்சுக்கணும்னு அது இப்பதான் பா எனக்கு புரியுது என்று சொல்லுகிறார்.உடனே ரோகினி இப்ப எதுக்கு இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லுங்க என்று சொல்ல, சொல்ற பார்லரம்மா இன்னைக்கு தான் எல்லாரோட வேஷமும் கலைய போகுது என்று சொல்லி மாமா மாமா என கூப்பிட பிரவுன் மணி வந்து நிற்கிறார். அவரைப் பார்த்து ரோகினி அதிர்ச்சியாகி நிற்க மனோஜ் மற்றும் விஜயா இருவரும் சம்பந்தி என சொல்லிக்கொண்டு சந்தோஷமாக ஓடுகின்றனர்.
அவரை வரவேற்று விஜயா சந்தோஷமாக பேசுகிறார் உடனே அப்பா தான் இறந்துட்டாரு அந்த சொத்து விஷயம் எல்லாம் என்னாச்சு கேஸ் முடிஞ்சிடுச்சா ரோகிணிக்கு சொத்து வந்துரும் இல்ல என கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார் அது மட்டுமில்லாமல் மனோஜ் நான் பணம் தேவை இருக்கிறதுனால எடுத்துட்டு வர சொன்னியா அதுக்காக வந்து இருக்காரா என்று சந்தோஷப்பட்டு பேசுகிறார். ஆனால் அவர் அமைதியாக எதுவும் பேசாமல் உட்கார்ந்து விட ரோகிணி என்ன அங்கிள் சொல்லாமல் கொள்ளாமல் வந்து இருக்கீங்க என்று சொல்ல, முத்து நாங்க மாமாவ பார்த்த இடத்திலிருந்து அப்படியே கூட்டிட்டு வந்துட்டோம் என்று சொல்லுகிறார் உடனே கோவப்பட்ட ரோகினி அவர் முக்கியமான வேலை விஷயமாக வந்திருப்பாரு நீங்க எதுக்கு இப்படி டிஸ்டர்ப் பண்றீங்க எங்க விஷயத்துல தலையிடாம உங்களால இருக்க முடியாதா என்று கோபப்படுகிறார்.
உடனே முத்து குடும்பத்தினரிடம் ரோகினி அங்கிள் அங்கிள் என்று சொல்றாங்களே என்ன அர்த்தம் தெரியுமா அப்பா அங்கிள் என்றால் மாமா ஆனா இவர் யாருக்கு மாமா தெரியுமா பரசு மாமாவோட மாப்பிள்ளையோட தாய் மாமா என்று சொல்ல அனைவரும் ஒன்றும் புரியாமல் இருக்கின்றனர் அப்போ இவங்க சொந்தக்காரங்களா என்று அண்ணாமலை யோசிக்க அதற்கு முத்து நீ அநியாயத்துக்கு நல்ல விதமா யோசிக்காதப்பா இப்படி எல்லாம் இருக்கிறதுனால தான் நம்ம ஈஸியா ஏமாத்திடறாங்க என்று சொல்லுகிறார்.
பரசு மாமா நம்ப கிட்ட தாய் மாமாவை அறிமுகப்படுத்தனும்னு சொன்னாங்கல்ல அது இவர்தான் அதனாலதான் இவரை பார்த்த உடனே நான் கூட்டிட்டு வந்துட்டேன் என்று சொல்ல மனோஜ் இவங்க மலேசியாவில் பெரிய பணக்காரங்க ஆனா பரசு மாமா குடும்பம் எப்படி சொந்தமாக முடியும் என்று சொல்லுகிறார். ஆனால் ரோகினி அவரை இங்கிருந்து அனுப்புவதற்கு முயற்சி செய்வது போலவே பேசுகிறார். நீங்க ஹோட்டல்ல தங்கியிருந்தீங்களா வாங்க நம்ம அங்க போய் பேசலாம் என்று எழுப்ப போக முத்து மணியை உட்கார வைக்கிறார்.
பிறகு முத்து என்ன சொல்லுகிறார்?அதற்கு விஜயாவின் பதில் என்ன? என்பதை எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…
ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…
விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…
இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம்…