பிஏ குறித்த உண்மையை மீனாவிடம் சொன்ன ரோகிணி, முத்து போட்ட பிளான், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ் யார் கடத்திருப்பார்கள் என்று குடும்பத்தினர் பேசிக் கொண்டிருக்க மீனா போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று சொல்லுகிறார் உடனே ரோகினி வேண்டாம் என சத்தமாக சொல்ல அனைவரும் ரோகிணியை பார்க்கின்றனர் உடனே அண்ணாமலை ரோகினி சொல்வது தான் கரெக்ட் இப்போதைக்கு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க கூடாது என்று சொல்லுகிறார். நீ க்ரிஷ் பாட்டி கிட்ட ஏதாவது விசாரிச்சு பாருமா என்று மீனாவிடம் அண்ணாமலை சொல்ல மறுபக்கம் ரோகினி மீனாவை மொட்டை மாடிக்கு வர சொல்லிவிட்டு சென்று விடுகிறார் மீனாவும் பின்னாடியே செல்ல ரோகிணி அழுது கொண்டே கிரிஷ் பற்றிய விஷயத்தை உண்மையையும் சொல்லிவிடுகிறார்.

இன்னும் நீ எவ்வளவுதான் உண்மையை மறைப்ப உன்னால இப்ப க்ரிஷ் ஓட உயிருக்கு ஆபத்தா இருக்கு என்று சொல்லுகிறார். முத்துக்கு ஃபோன் போட்ட செல்வம் சிந்தாமணி கடத்தவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறார். பிறகு மீனா இப்பவே நீ வீட்ல வந்து உண்மையை சொல்லிடு என்று சொல்ல உடனே ரோகினி உங்களுக்கு என் மேல கோவமா இருந்தா நீங்க திட்ட கூட திட்டிடுங்க இப்ப வந்து உண்மைய சொன்னா என்ன வீட்டை விட்டு துரத்திடுவாங்க என்று சொல்ல அதற்கு மீனா உன் புருஷனுக்கு போன் போட்டு பணம் கேட்க சொல்லு என்று சொல்ல அவர்கிட்ட உண்மை சொல்லிட்டானா என்ன பண்றது என்று கேட்க அவனோட நோக்கம் உண்மையை சொல்றது கிடையாது பணம் கேட்பது மட்டும் தான் அதனால அவ்வளவு சீக்கிரம் உண்மையை சொல்ல மாட்டான் என்று சொல்ல ரோகிணியும் பிஏவுக்கு போன் போட்டு மனோஜிடம் பேச சொல்லுகிறார்.

பிறகு இருவரும் கீழே இறங்கி வந்துவிட அண்ணாமலை என்னம்மா விசாரிச்சியா என்று கேட்க அவங்க யாரோ கூட்டிட்டு போகலன்னு சொல்லிட்டாங்க என்று சொல்ல சரி நான் போய் வெளியே விசாரிக்கிறேன் என்று முத்து கிளம்ப அந்த நேரம் பார்த்து மனோஜ்க்கு பிஏ போன் போடுகிறார் கிருஷ் நான் தான் கடத்தி வச்சிருக்கேன் என்று சொல்லமுத்து ஓடி வந்து ஸ்பீக்கரில் போட்டு பேசுவதை கேட்கிறார் 2 லட்சம் பணம் வேண்டும் என்று சொல்ல உடனே எங்க வரணும்னு கேளு என்று முத்து சொல்ல மனோஜ் அதேபோல் கேட்க நான் வேற வேற நம்பர்ல இருந்து போன் பண்ணுங்க நீங்க எடுத்து பேச சொல்றேன் என சொல்லி போனை வைக்கிறார். உடனே வழக்கம் போல் விஜயா அவனுக்காக எதுக்கு என் பையன் பணம் கொடுக்கணும் அதனால தான் அவன டாடி என்று எல்லாம் சொல்ல வேணாம்னு சொன்னேன் என்று சொல்ல இப்ப இது ரொம்ப முக்கியமா முதல்ல கிருஷ் காப்பாத்தணும் என்று அண்ணாமலை சொல்லுகிறார்.

மனோஜ் நான் பணம் தர மாட்டேன் என்று சொல்ல உன்னை இப்ப பணம் கேட்டேனா நான் சொல்றத மட்டும் செய் என்று சொல்லுகிறார் உடனே மனோஜ்க்கு போன் வர அவன் ஒரு இடத்தை சொல்ல அந்த இடத்துக்கு பணத்தை எடுத்துட்டு வந்துடனும் என்று சொன்னவுடன் முத்து நீ ஒரு பையில் துணி பாக்க போட்டு எடுத்துட்டு வா அந்த பேக் எடுத்துட்டு போய் அவன் சொன்ன இடத்தில பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார். முத்து என்ன செய்கிறார்? பிஏ சிக்கினாரா? இல்லையா? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

ரவியை காதலிக்கும் நீத்து, கடுப்பான சுருதி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இன்றைய எபிசோடில் மனோஜ் தரப்பினர் ரோகினிக்கு…

2 hours ago

ஆனந்தி சொன்ன வார்த்தை, நந்தினி கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு, சிங்க பெண்ணே ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

2 hours ago

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…

19 hours ago

விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுத்த தனுஷ்! என்ன காரணம்? பகிர்ந்த பிரபலம்..

விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுப்பு: தனிஷின் நினைவலைகள் வைரல் பன்முகத்திறமை பெற்ற தனுஷ் தற்போது 'போர்த்தொழில்' பட இயக்குநர் விக்னேஷ்…

19 hours ago

சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் “புருஷன்”- புரோமோ வீடியோ வெளியீடு

சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் "புருஷன்"- புரோமோ வீடியோ வெளியீடு நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் 'பொட்டு அம்மன்-2' படத்தின்…

20 hours ago

டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது?

டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது? பாலிவுட் சினிமாவில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்-ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான…

21 hours ago