தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன் பார்வதியிடம் பேசிக்கொண்டு இருக்கிறார் அந்த நேரம் பார்த்து மீனா பூ கொடுக்க வர இருவரையும் பார்த்துக் கொண்டே இருக்கிறார். இவரு யோகா கிளாசுக்கு வரவரு என்று அறிமுகப்படுத்தி வைக்க மீனா பூவை கொடுக்கிறார் நீயே போற்றும மீனா என்று பார்வதி சொல்லுகிறார். பிறகு பார்வதியிடம் சிவன் நான் நேத்து ஒரு கதை எழுதின பார்வதி என்று சொல்ல நீங்க கதையெல்லாம் எழுதுவீங்களா என்று கேட்கிறார் என் மனைவி சாகறதுக்கு முன்னாடி வரைக்கும் கவிதை எல்லாமே எழுதிக்கிட்டு தான் இருந்தேன் ஆனா நான் போனதுக்கு அப்புறம் எல்லாத்தையும் விட்டுட்டேன் இப்பதான் எல்லாத்தையும் தொடங்கி இருக்கேன் என சொல்லுகிறார். இத நீங்களே படிங்க என பேப்பரை கொடுக்க பார்வதியும் சிவன் எழுதிய கதையைப் படிக்கிறார்.
உடனே படித்து முடித்த பிறகு மீனா கைதட்டுகிறார். கதை ரொம்ப அருமையா இருந்தது அதைவிட நீங்க வாசிச்ச விதம் இன்னும் சூப்பரா இருந்தது என்று பார்வதியும் பாராட்ட இப்ப இருக்குற பசங்களுக்கு இது மாதிரியான கதை ரொம்ப முக்கியமா இருக்கும் என்று சொல்ல சிவனும் ரொம்ப கரெக்டா சொன்னீங்க என்று சொல்லுகிறார். உடனே மீனா நீங்க ஒரு சேனல் ஆரம்பிச்சு அதுல நீங்க கதையை எழுதி நீங்க உங்க வாய்ஸ்ல படிச்சு காட்டுங்க நல்ல ரீச் கிடைக்கும் என்று சொல்லுகிறார். சிவனும் நல்ல ஐடியா தான் என்று சொல்ல பார்வதி பேரையும் நீயே சொல்லிடுமா என்று சொல்ல மீனாவும் ஒரு கதை சொல்லட்டுமா என சொல்லுகிறார்.
உடனே விஜயா ஒண்ணும் வேணாம் என சொல்லிக் கொண்டே உள்ளே வருகிறார். பிறகு பார்வதி சிவன் கதை எதிர்க்க விஷயத்தையும் அதை படித்த விஷயத்தையும் மீனா கொடுத்த ஐடியாவையும் சொல்ல வழக்கம் போல் மீனாவை விஜயா திட்டுகிறார் உடனே மீனா சென்றுவிட பார்வதியிடம் விஜயா எதுக்கு இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்கிறார் உனக்கு வேலை இருக்கு அன்பா பார்த்துக்கோ பசங்க இருக்காங்க அதுக்கு மேல அன்ன உன் மேல பாசத்தை கொட்டி இருக்காரு ஆனா எனக்குன்னு யாரு இருக்காங்க நான் ஏதாவது இது மாதிரி பண்ணிக்கிட்டு என் வாழ்க்கை ஒரு நிம்மதியா சந்தோஷத்தையும் தேடிப்பேன் என்று கண் கலங்குகிறார். மறுபக்கம் மீனாவின் அம்மா சீதா மீனா போட்ட சண்டையை நினைத்துக் கொண்டு வருத்தப்பட்டு உட்கார அக்கம் பக்கத்தினர் வந்து மீனவ சீதாவும் சண்டை போட்டுக்கிட்டாங்கலாமே கல்யாணத்துக்கு முன்னாடி நகமும் சதையுமா இருந்தாங்க இப்போ எப்படி சண்டை போட்டுக்கிறாங்க இதை இப்படியே விட்டுறாதீங்க அப்புறம் பேசாமயே போயிடுவாங்க ஏதாவது பண்ணுங்க என்று சொல்லி சந்திராவை பயமுறுத்த சந்திராவும் மீனா சொல்லியதையும் சீதா சொல்லியதையும் நினைத்து பார்த்து மயங்கி விழுந்து விடுகிறார் உடனே சத்யா மீனாவுக்கு போன் போட்டு அம்மா மயங்கி விழுந்துட்டாங்க நான் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிருக்கேனு சொல்ல மீனாவும் முத்துவும் பதற்றத்துடன் ஹாஸ்பிடலுக்கு கிளம்புகின்றனர்.
கொஞ்ச நேரத்தில் சத்யா சீதாவுக்கும் போன் போட அவரும் ஹாஸ்பிடலுக்கு வந்து விடுகின்றனர் பிறகு ஹாஸ்பிடலில் என்ன நடக்கிறது ?முத்து மீனா என்ன சொல்லுகின்றனர்? அதற்கு அருண் சீதா என்ன சொல்லுகின்றனர்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.


