Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரோகினியை திட்டிய விஜயா, மனோஜ் சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

SiragadikkaAasai Serial Episode Update 22-04-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் உடம்பு சரியில்லாமல் இருப்பதால் ரோகினி அவருக்கு மாத்திரை கொடுத்து ஒத்தடம் கொடுக்கிறார் இப்ப பரவாயில்லையா மனோஜ் என்று கேட்க பரவால்ல ரோகினி நீ படுத்துக்கொள் என்று சொல்ல ரோகிணி கொஞ்ச நேரத்தில் அழுகிறார். என்னாச்சு ரோகினி என்றும் மனோஜ் கேட்க நீ என்கிட்ட பேச மாட்டேன்னு நினைச்ச மனோஜ் நீ பேசிட்ட எனக்கு ரொம்ப சந்தோஷம் என்று சொல்லுகிறார். மறுநாள் காலையில் ஸ்ருதி கோவமாக இருக்க ரவியிடம் பேச வேண்டும் என சொல்லுகிறார்.

என்ன விஷயம் என்று கேக்க ரெஸ்டாரன்ட்ல என்ன கிண்டல் பண்ணாங்க அவங்கள பழிவாங்கத்தான் அப்படி செஞ்சேனு சொல்ல அங்கே தானே நான் இருப்பேன் என்கிட்ட வந்து சொல்லலாமே என்று ரவி கேட்கிறார்.இப்போ என்ன ஹராஸ்ட் பண்ண வந்தா நான் என்ன பண்ணனும் நீ எங்க இருக்கன்னு தேடி வந்து உன் பின்னாடி நிக்கணுமா பொண்ணுங்களுக்கு எதுவுமே யோசிக்க கூடாதா என்று கோபப்படுகிறார். என்னை இருந்தாலும் நீ செஞ்சது தப்புதான் சுத்தி என்று ரவி சொல்லிவிடுகிறார்.

அந்த நேரம் பார்த்து நீத்து போன் போட சுருதி இருக்காங்களா என்று கேட்க ரவி இருக்காங்க என்று சொல்ல ஸ்பீக்கரில் போடுங்க என்று சொல்லுகிறார் உடனே ரவி ஸ்பீக்கரில் போட நீத்து சாரி ஸ்ருதி அன்னைக்கு நான் ஒரு ஹோட்டல் ஓனரா பிஹே பண்ணிட்டேன் ஆனா சாதாரண பொண்ணா யோசிச்சு பார்க்கும்போது நீங்க பண்ணது தான் சரி நான் உங்ககிட்ட அப்படி பேசி இருக்கக் கூடாது அது மாதிரியான கஷ்டமர் எங்களுக்கு தேவை கிடையாது மன்னிச்சிடுங்க என்று சொன்ன ஸ்ருதி நீங்களாவது எனக்கு புரிஞ்சுக்கிட்டீங்களே என சொல்ல நீத்து போனை வைக்கிறார் உடனே ரவி அமைதியாக சென்று ஸ்ருதியின் கையில் தலையணையை எடுத்துக் கொடுக்க அவர் ரவியை அடிக்கிறார். பிறகு ஸ்ருதியிடம் மன்னிப்பு கேட்க இப்போ உன்னோட ஓனர் கேட்டவுடனே மன்னிப்பு கேக்குறியா என்று சொல்லிவிட்டு அப்படி எல்லாம் இல்லை சுருதி என்று சொல்லுகிறார் உடனே ஸ்ருதி இனிமேல் ஹோட்டலில் ஒரு மணி வைக்கப் போறேன் ஏதாவது பெண்களுக்கு பிரச்சனை என்றால் அந்த மணி அடிச்ச உடனே எல்லாரும் எந்த டேபிளில் பிரச்சனையோ அந்த டேபிளுக்கு வரணும் என்று சொல்ல ரவி சூப்பர் ஐடியா என்று சொல்லுகிறார் உடனே ஸ்ருதியை சமாதானப்படுத்த வேண்டிய ஐஸ்கிரீம் சாப்பிட போகலாம் என கூப்பிடுகிறார் அவரும் சமாதானம் ஆகி செல்கிறார்.

மறுபக்கம் மீனா முத்து வராததை யோசித்து கொண்டு இருக்க , அண்ணாமலை வருகிறார் என்னாச்சுமா இன்னும் முத்து வரலையா என்று கேட்க சவாரி போயிருப்பார் மாமா நானே போன் பண்றேன்னு சொல்ல நான் பண்றேம்மா எனக் சொல்லுகிறார்.இல்ல மாமா நீங்க போய் படுங்க நான் பாத்துக்குறேன்னு சொல்லி முத்துவிற்கு ஃபோன் போட்டு முத்து எடுத்து நான் நைட் சவாரிக்கு போறேன் என சொல்லி கட் பண்ண போக மாமா கேட்டார் என்று சொல்லுகிறார் சொல்லிடு என்று சொல்லி விட்டு மீனா சாப்டீங்களா என கேட்பதற்குள் முத்து போனை கட் பண்ணி விடுகிறார். மறுநாள் காலையில் ரோகினி கிச்சனில் இருக்கும் மீனா வருகிறார். என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க ரோகிணி என்று கேட்டேன் மனோஜ்க்கு உடம்பு சரியில்லை அதனால கஞ்சி வச்சிருக்கேன்னு சொல்லுகிறார். அத்தை காபி போட சொன்னாங்க அதுக்கு தான் வந்த என்று சொல்லி விட்டு மீனா வெளியே வந்து விடுகிறார் உடனே விஜயா பார்த்து விட உன்ன காபி போட சொன்னா இங்க என்ன பண்ற என்று கேட்க ரோகிணி கஞ்சி வச்சுட்டு இருக்காங்க என்று சொல்ல இவர் யாருக்கு கஞ்சி காச்சிட்டு இருக்கா என்று கேட்டு கிச்சனுக்கு வருகிறார்.

பிறகு மனோஜ்க்கு உடம்பு சரியில்லை என்ற விஷயத்தை சொல்ல அவனுக்கு உடம்பு சரியில்லை செஞ்சு கொடுக்குறதுக்கு நீ யாரு என்று கேட்கிறார். அவனுக்கு அம்மா நான் இருக்கேன் என்ன எழுப்ப வேண்டியதானே என்று சொல்ல நீங்க தூங்கிகிட்டு இருந்தீங்க என்று ரோகினி சொல்லுகிறார். தூங்கிட்டு தானே இருந்தேன் அப்படியே உன்னையே போயிடலையே என்று திட்டிவிட்டு மனோஜை பார்க்க ரூமுக்கு வருகிறார். உடனே மீனா வந்து இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து அத்தை என்ன மட்டும் தான் திட்டிக்கொண்டு இருந்தாங்க என்று சொல்லி ஆரம்பிக்க என்னை திட்டுவதினால் உங்களுக்கு சந்தோஷமா இருக்கா என்று கேட்க மத்தவங்க கஷ்டத்துல சந்தோஷப்படுற ஆள் நான் இல்லை என்று சொல்லிவிட்டு இதுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு என்று சொல்லுகிறார் பார்வதி அத்தை கிட்ட பேசி அவங்க அத்தை கிட்ட பேச சொன்னா அத்தை புரிஞ்சுப்பாங்க என்று சொல்ல ரோகினி அமைதியாக இருக்கிறார். இப்ப என்ன உங்க விஷயத்துல தலையிடக்கூடாதுன்னு எனக்கு சொல்லிடுவீங்க அதுக்கு தானே என்று சொல்லிவிட்டு மீனா சென்று விடுகிறார். பிறகு விஜயா மனோஜிடம் என்ன பேசுகிறார்? அதற்கு மனோஜின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update 22-04-25
SiragadikkaAasai Serial Episode Update 22-04-25