தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் லட்சுமி மற்றும் கிரிஷ் இருந்த வீட்டுக்கு வந்து பார்க்க அவர்கள் காலி பண்ணிவிட்டு சென்றுவிட்டதாக ஹவுஸ் ஓனர் சொல்லுகிறார் உடனே எப்போ கிளம்பினார்கள் என்று கேட்க இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கிளம்புனாங்க என்று சொன்னவுடன் எங்க போனாங்க ஏதாவது சொன்னாங்களா என்று கேட்கிறார் அந்த பையன் பசிக்குதுன்னு சொன்னா அதனால மெயின் ரோட்டில் இருக்கிற ஒரு ஹோட்டல் சொல்லி இருக்கேன் உடனே அங்கு கிளம்புகின்றனர். ரோகினி கிருஷ் உட்கார்ந்து ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டு இருக்க இவர்கள் இருவரும் அந்த ஓட்டலுக்கு வருகின்றனர் ரோகினி வேகமாக சாப்பிடு போகலாம் என்று சொல்லிக் கொண்டிருக்க மறுப்பக்கம் முத்துவிடம் மீனா ஆரம்பத்தில் இருந்தே கிரிஷ் விஷயத்தில் நடந்த விஷயங்களை சொல்ல நீ எதுக்கு என்கிட்ட புதுசா சொல்லிக்கிட்டு இருக்க எல்லாத்தையும் நான் பார்த்துக்கிட்டு தானே இருக்கேன்னு சொல்லுகிறார்
பிறகு இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும் என்று கேட்க கொஞ்சம் தூரம் தான் போயிடலாம் என்று சொல்லுகின்றனர் ஆனால் வழியில் ஒரு ஆட்டோக்காரரும் டூவீலர் காரர் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்க முத்து போக முடியாமல் இருக்கிறது ஒரு வழியாக முத்து இறங்கி அவர்களை சமாதானப்படுத்தி செய்து அனுப்பி வைக்க அதற்குள் ரோகினி கிருஷ்யை சாப்பிட வைத்து ஆட்டோவின் ஏரி கிளம்ப முத்து எதிரில் வந்து ஹோட்டலில் தேடுகிறார். பிறகு அவர்கள் இல்லாததால் இப்ப என்னங்க பண்றது என்று கேட்க அந்த ஆட்டோக்கார பிரச்சனை இல்லைன்னா எல்லாரும் வந்திருக்கலாம் சரி ஹோட்டலுக்கு வந்தாச்சு சாப்பிட்டு போயிடலாம் என சொல்லிவிட்டு முடிவெடுக்கின்றனர். பிறகு ஸ்ருதி அண்ணாமலை மற்றும் விஜயாவிடம் ரெஸ்டாரன்ட் ஓபன் பண்ண போகும் விஷயத்தை அதற்கான பத்திரிக்கையையும் கொடுக்க இருவரும் சந்தோஷப்படுகின்றனர்.
நீ சின்ன வயதிலேயே பிசினஸ் ஸ்டார்ட் பண்ணி இருக்க ரவி இதுக்காக படிச்சிருக்கறதுனால உனக்கு ரொம்ப உதவியா இருக்கும் என்று சொல்ல ஸ்ருதியின் முகம் மாறுகிறது. உடனே ரோகிணி மனோஜ் வர அவர்களுக்கு இன்விடேஷன் கொடுக்கிறார். இது மட்டும் இல்லாம என்னோட ஹோட்டலுக்கு ஏசி பிரிட்ஜ் எல்லாம் தேவைப்படுது நீங்க பிராஃபிட் வைக்காம உங்க டீலர் கிட்ட இருந்து வாங்குற அமௌன்ட்ல பண்ணி கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும் என்று சொல்ல மனோஜ் அது எப்படி முடியும் என கேட்கிறார் நீங்க ரெஸ்டாரன்ட் வந்தீங்கன்னா உங்களுக்கு நான் ஆஃபர் பண்ணி கொடுக்கிறேன் என்று சொல்ல அதற்கு மனோஜ் இட்லிக்கு ஆஃபர் போட்டு என்ன ஆகப்போகுது என்று கேட்க விஜயா அதெல்லாம் பண்ணிக்கலாமா நம்ம ஸ்ருதிக்கு ஏன்டா இப்படி பேசுற பண்ணி குடுடா என்று சொல்லிவிடுகிறார். கொஞ்ச நேரத்தில் முத்து மீனாவும் வந்து விடுகின்றனர்.
உடனே ஸ்ருதி அவர்களுக்கு இன்விடேஷன் கொடுத்து கண்டிப்பாக வந்துடனும் என்று சொல்ல பிறகு மீனா விடம் நீங்க தான் டெக்கரேஷன் எல்லாத்தையும் பாத்துக்கணும் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று சொல்லுகிறார் உடனே இதனை கவனித்த மனோஜ் நம்ம கிட்ட மட்டும் பிராபிட் இல்லாம குடுன்னு கேக்குறாங்க அவகிட்ட மட்டும் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று சொல்றாங்க என்று சொல்ல உடனே ரோகினி நமக்கு மீனா மாதிரி நடிக்க தெரியாது என்று சொல்லிவிட்டு கதவை சாத்தி விடுகிறார். ரவி ஒத்துக்கிட்டானா என்று முத்து கேட்க இன்னும் இல்ல ஆனா கண்டிப்பா அவனை எப்படியாவது நான் வரவெச்சிடுவேன் என்று சொல்லுகிறார் பிறகு அனைவரும் சென்று விட முத்துவிடம் மீனா ஸ்ருதிக்கு ஏதாவது கிஃப்ட் வாங்கணும் என்று சொல்லுகிறார் சரி யோசிச்சு சொல்லு என்ன வாங்கலாம் என்று என சொல்லிவிட்டு முத்து சென்று விட மீனாவிற்கு சீதா போன் பண்ணுகிறார்.
நீ நாளைக்கு எப்ப அக்கா வர கும்பகோணம் கிளம்புவதற்கு என்று கேட்க என்ன சீதா எனக்கு எங்க ரெண்டு மூணு ஆர்டர் இருக்கு நான் வேணா உங்களை அனுப்பி வைக்க வரேன்னு சொல்லுகிறார் நான் வேணா மாமா கிட்ட பேசவா என்று கேட்க அதெல்லாம் வேணாம் சீதா நீங்க போயிட்டு வாங்க என்று சொல்லிவிட்டு போனை வைக்க முத்துவிடம் சீதா போன் பண்ண விஷயத்தையும் சொல்லுகிறார். நீ போயிட்டு வா மீனா என்று சொல்ல அதெல்லாம் வேண்டாமா ஸ்ருதி வேற ஆர்டர் கொடுத்து இருக்காங்க நாளைக்கு போய் ஹோட்டலை பார்க்காமல் நின்று சொல்லுகிறார். உடனே முத்து சரி 2000 ரூபாய் பணம் இருக்கு நீ அத்தை கிட்ட கொடுத்துடு என்று சொல்ல இதுக்கு நான் அவங்க தானே கூட்டிட்டு போறாங்க என்று கேட்க அவங்க தான் கூட்டிட்டு போறாங்க இருந்தாலும் புது மாப்பிள்ளை கிட்ட அவங்களுக்கு ஏதாவது செலவு வேணும்னா கேட்க முடியாது இல்ல என்று சொல்ல மீனா சந்தோஷப்படுகிறார்.
மறுநாள் காலையில் மீனா சீதா வீட்டுக்கு வர அங்கு என்ன பேசுகின்றனர்? மீனா பணத்தை கொடுக்க அருண் என்ன சொல்லுகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
