Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சத்யாவிற்காக முத்து செய்த வேலை, மீனா எடுக்கப் போகும் முடிவு என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

SiragadikkaAasai Serial Episode Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜிடம் லாட்டரி டிக்கெட் வாங்கின ஆள் வந்து எனக்கு 25 கோடி லாட்டரி டிக்கெட் கிடைச்சிருக்கு. டேக்ஸ் எல்லாம் போக இருபது கோடி கைல வந்து இருக்கு என்று சொன்னவுடன் அப்போ பொருள பாக்கலாமா என்று மனோஜ் கேட்க ஆனா உங்க கடையில பொருள் எடுக்க மாட்டேன் உனக்கு நம்பிக்கையே இல்ல முதல்ல ஒரு ஆளை நம்பணும் என்றெல்லாம் டயலாக் பேசுகிறார். நான் வேற ஒரு கடையில் எடுக்கிறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன் சொல்ல அப்ப எதுக்கு என் கடைக்கு வந்த என்று மனோஜ் சண்டை போட, இது மாதிரி வியாபாரம் பண்ணா உன் கடை இழுத்துதான் மூடுவ என்று சொல்லிவிட்டு அவர் கிளம்புகிறார். அந்த நேரம் பார்த்து ஒரு நபர் வந்து என் பிரண்டு அமெரிக்கால இருக்கா அவனுக்கு நிறைய பிராஞ்சஸ் தேவைப்படுது அது ஜாயின் பண்ணிட்டா நல்ல வரவேற்பு கிடைக்கோ என்று சொல்ல மனோஜ் நல்ல ஐடியா என்று யோசிக்கிறார்.

மறுபக்கம் முத்து நைட்டு அனைவரும் தூங்கிய பிறகு வீட்டுக்கு வர மீனா சாப்பிட வாங்க என்று கூப்பிட அதெல்லாம் இருக்கட்டும் என்று கட்டிலில் உட்கார்ந்து சரக்கு பாட்டில் எடுத்து வைக்கிறார். அதனைப் பார்த்த மீனா கடுப்பாகி இத்தனை நாளா வெளிய குடிச்சிட்டு இருந்தீங்க இப்போ நடு வீட்டிலேயே குடிக்க உட்கார்ந்துட்டீங்களா நான் மாமாவ கூப்பிடுற என்று சத்தம் போட முத்து வாயை பொத்துகிறார்.

பிறகு உட்கார வைத்து நாளைக்கு சத்யா ஓட பிரின்ஸ்பல் மனச மாத்திரத்துக்கு நம்ம ஒரு டிராமா போட்டவனும் அதுக்கு தான் இந்த சரக்கு வாங்கிட்டு வந்தேன் ஆனா இது நிஜமான சரக்கும் கிடையாது என்று சொன்னவுடன் மீனா அமைதி ஆகிறார். என்ன பண்ணனும் என்று கேட்க நான் ஃபுல்லா குடிச்சிட்டு உங்க கிட்ட சண்டை போடறேன் என்ன அடிக்கிற மாதிரி நடிப்ப அந்த நேரம் பார்த்து சத்யா வந்து தடுக்கிற மாதிரி இருக்கணும் அது சத்யா கிட்டயே சொல்லிடலாமே என்று சொல்ல அவன் கிட்ட சொன்னா ஓவர் ஆக்டிங் பண்ணிடுவான் அதனால சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டு டயலாக்கை மீனாவிடம் சொல்லிக் கொடுக்கிறார்.

மறுநாள் அதே போல் முத்துவும் மீனாவும் பிரின்சிபல் வரும் நேரம் பார்த்து கரெக்ட்டா சண்டை போட்டுக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சத்யா வந்து அவரை தடுத்து கொஞ்ச நாளா திருந்தி விட்டீர்கள் என்று பார்த்தால் எங்க அக்காவை எதுக்கு அடிக்கிறீங்க என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அவரை தவிக்கிறார். அந்த நேரம் பார்த்து பிரின்ஸ்பல் நீ சத்யா தானே எதுக்கு உங்க அக்காவை இந்த மாதிரி ஒரு ஆளுக்கு கல்யாணம் பண்ணி தராங்க என்று சொல்ல சூழ்நிலை அந்த மாதிரி ஆயிடுச்சு சார் அப்பா இறந்துட்டாரு அதனால இவருக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க வேண்டிய நிலைமை ஆயிடுச்சு என்று சொல்ல அவர் உடனே போலீசுக்கு போன் போடுகிறார்.

வேண்டுமென்றே பிரின்ஸ்பால் இடம் வந்து முத்து வம்பு இழுக்க இது மாதிரி இருக்கிற குடும்பத்திலிருந்து வந்து நீ நல்லா படிக்கணும் நீ நாளிலிருந்து காலேஜுக்கு வா எக்ஸாம் எழுது என்று சொன்னவுடன் முத்துவும், மீனாவும் சந்தோஷப்படுகின்றன. ஆனால் சிறிது நேரம் கழித்து போலீஸ் வர இவனுக்காக தான் போன் பண்ணேன் நான் ஸ்டேஷனுக்கு வந்து கூட கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன் என்று சொல்ல மீனா அதிர்ச்சடைகிறார்.

நீ நான் எவ்வளவு சொல்லியும் அந்த போலீஸ் முத்துவை அரெஸ்ட் பண்ணி ஜிபில் செல்கின்றனர் உடனே சத்யா விடுகா போகட்டும் என்று சொல்ல உன்னால தாண்டா எல்லா பிரச்சனையும் உனக்காக தான் நாங்க அப்படி நடிச்சோம் என்று சொல்ல என்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்ல கா என்று சத்யா சொல்லுகிறார். சரி வாக்கா நம்ம போய் உண்மைய சொன்னா விட்டுடுவாங்க என்று இருவரும் போலீஸ் ஸ்டேஷன் கிளம்ப முத்துவை பார்த்து பேசுகின்றனர்.

பிறகு அங்கு இருக்கும் போலீஸ் இடம் அவர் எந்த தப்பும் பண்ணல நாங்க டிராமா தான் பண்ணனும் என்று சொல்ல அதுக்காக இப்படியா பப்ளிக் டிஸ்டர்ப் பண்ற மாதிரி பண்ணுவீங்க அப்ப கூட நான் வெளியே விட முடியாது அரெஸ்ட் பண்ணவங்க வந்தா தான் முடியும் என்று சொல்லியும் சத்தியா நான் இங்கே இருக்க அவர விட்டுருங்க என்று சொல்லுகிறார்.

ஆனால் போலீஸ் சம்மதிக்காததால் முத்துவை வெளியே கொண்டு வர மீனா என்ன செய்யப் போகிறார்? குடும்பத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்

SiragadikkaAasai Serial Episode Update