SiragadikkaAasai Serial Episode Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சத்யாவிற்காக பூஜை ரூமில் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து வாசலில் கொரியர் பாய் வந்து விடுகிறார்.ஸ்ருதி யாரு என்று கேட்க, என்னோட தங்கச்சி தான் என்று மீனா சொல்ல, அவங்கள கூப்பிடுங்க அவங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கு என்று சொல்லுகிறார் அவங்க வீட்டில இல்லை என்று சொன்னவுடன் சரி நீங்க கையெழுத்து போடுங்க என்று சொல்ல மீனா கையெழுத்து போட போக அந்த நேரம் பார்த்து விஜயா வருகிறார். யாரு கிட்ட பேசிகிட்டு இருக்க என்று கேட்க கொரியர் பாய் ஸ்ருதி என்ற பெயரில் பார்சல் வந்திருப்பதை கொடுக்க நீ எதுக்கு வாங்குற அவ என் மருமக நான் தான் வாங்குவேன் என்று பார்சலை வாங்கிவிட்டு மீனாவை கையெழுத்து போட சொல்லுகிறார். மீனாவை கையெழுத்து போட்ட பிறகு போய் உன் வேலையை பாரு என்று அனுப்பி வைத்த மீனா துணிகளை மடித்து வைத்துக் கொண்டு இருக்கிறார்.
விஜயா பார்சல் பிரிக்க மீனா எதுக்கு ஓபன் பண்றீங்க என்று கேட்கிறார். உனக்கென்ன என்னோட மருமகளோட பார்சல் நான் ஓபன் பண்றேன் என்று சொல்லிவிட்டு உள்ளே இருந்து ஒரு ஹெட் போன் எடுக்கிறார். என்ன இது என்று சொல்லியிருக்கிறார் கேட்க, அது ஹெட் போன் அத்தை அதுல பாட்டு கேட்கலாம் என்று சொல்லுகிறார். தலையில் மாட்டிக்கொண்ட விஜயா என்ன பாட்டு கேட்கல ஒருவேளை ரிப்பேர் ஆனது கொடுத்துட்டானோ என்று பேசிக் கொண்டிருக்க அது போன்ல கனெக்ட் பண்ணும் அத்தை என்று சொல்லுகிறார் மீனா. அதெல்லாம் எனக்கு தெரியும் போய் உன் வேலையை பாரு என்று சொல்லி கண்ணாடி முன் நின்று ஹெட் போனை மாட்டி விதவிதமாக போஸ் கொடுத்து பார்க்கிறார். இதனை மீனா பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரம் பார்த்து ரவியும் ஸ்ருதியும் வீட்டுக்கு வர, விஜயா ஹெட் போன் மாட்டியிருப்பதை பார்த்து விட்டு என்ன ஆன்டி பாட்டு கேக்குறீங்களா என்று கேட்க இல்லம்மா இது உனக்கு வந்த பார்சல் தான் என்று சொன்னவுடன் சுருதி கோபப்படுகிறார். எனக்கு வந்து பார்சல் நீங்க எப்படி இருக்கீங்க என்று விஜயாவிடம் கோபமாக பேசுகிறார். ரவி எவ்வளவு சொல்லியும் என்னோட பர்சனல் ஓபன் பண்ணி பார்த்தது தப்பு என்று ஸ்ருதி கோபப்படுகிறார். விஜயா மீனாவின் முன் அசிங்கப்பட்டு நிற்கிறார்.
பிறகு ரூமுக்குள் ஸ்ருதி சென்ற விட விஜயா ரவியை திட்டுகிறார். விஜயா உட்கார்ந்து கொண்டிருக்க ரூமுக்கு வந்த மீனாவிடம், இப்போ உனக்கு சந்தோஷமா என்று அதற்கும் மீனாவை திட்டுகிறார். முத்து சத்யா விஷயமாக காலேஜுக்கு வர வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். ரொம்ப நல்லா இருக்கு இதெல்லாம் நான் மிஸ் பண்ணிட்டேன் என்ன தான் இருந்தாலும் டிகிரி வாங்குற மாதிரி ஒரு சந்தோஷம் இருக்காது என்று மீனாவிடம் சொல்லிக் கொண்டிருக்க மீனாவும் நானும் படிக்கலன்னு ரொம்ப யோசிச்சு இருக்க, படிச்சிருந்தா நம்மளுக்கு மரியாதை கிடைச்சிருக்கும் என்று நினைப்பேன். என்ற பேசிவிட்டு பிரின்சிபல் பேச வருகின்றன. வெளியில் பியே உட்கார்ந்து இவர்கள் இருவரும் உள்ளே போக முயற்சி செய்ய தடுத்து நிறுத்துகிறார். உள்ளே போக கூடாது ஏன் என்று கேட்க முதல்ல நீங்க யாரு என்று கேட்கின்றார் அதற்கு மீனா பிகாம் படிக்கிற சத்யாவோட அக்கா, அவனுக்கு எக்ஸாம் எழுத கூடாதுன்னு சொல்லிட்டாங்க அதுக்காக பேச வந்திருக்கோம் என்று சொல்ல அதுக்கு இன்னைக்கு வரக்கூடாது சனிக்கிழமை வாங்க என்று சொல்லி அனுப்ப ,அடுத்த வாரம் எக்ஸாம் இருக்கு இன்னைக்கு தான் பேசணும் என்று கேட்கிறர். சரி நான் போய் பர்மிஷன் கேட்டு பார்க்கிறேன் என்று உள்ளே போயிட்டு வந்தவர் இன்னைக்கு பார்க்க முடியாது என்று சொல்லிவிட்டார் என்று சொன்னவுடன் முத்துவும் மீனாவும் என்ன செய்வது என்று புரியாமல் இருக்க உடனே PA வை டீ சாப்பிட போலாமா என்று கூப்பிடுகிறார். நான் எதுக்கு உங்க கூட வந்து டீ சாப்பிடணும் என்று கேட்க 200 ரூபாய் தரேன் என்று சொன்னவுடன் மூவரும் டீக்கடையில் டீ குடிக்கின்றன.
முத்து டீ குடித்துக்கொண்டே பிரின்ஸ்பல் குறித்து விசாரிக்க ஏன் இவ்வளவு கல் மனசா இருக்காரு என்று கேட்க முன்னால அப்படி கிடையாது ரொம்ப சந்தோசமா இருப்பார் ரொம்ப ஹெல்ப் பண்ணுவாரு ஆனால் அவரோட ஒரே பொண்ணு ஒரு பணக்கார இடத்துல கல்யாணம் பண்ணி கொடுத்து அவன் ரொம்ப குடிகாரனா இருந்திருக்கா டெய்லியும் அந்த பொண்ண போட்டு அடிச்சிருக்கா மூணு மாசத்திலேயே அந்த பொண்ணு இவரோட வீட்டுக்கு வந்துடுச்சு இப்போ இங்கதான் இருக்கு,ஒரு அப்பாவா அவரோட மனக்கஷ்டத்தை கோபத்தை இருக்கிறவங்க மேல காட்டிக்கிட்டு இருக்கார். என்று சொல்லிக் கொண்டிருக்க காலையில் அவருடைய பொண்ணு டிராப் பண்ணிட்டு போகும் சாயங்காலம் நடந்து போயிடுவாரு, பக்கத்துல ரெண்டு கிலோமீட்டர்ல தான் வீடு என்று சொல்ல முத்துவிற்கு ஒரு ஐடியா கிடைக்கிறது.
முத்து என்ன செய்யப் போகிறார்? மீண்டும் மனோஜை சந்தித்த ஒரு நபர் யார்? என்ன சொன்னார் என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
Dont Trouble The Trouble Tamil Trailer | Fahadh Fassil, Ssara | Bhairava | SS Rajamouli…
Ooroda Oththa Don Lyric Video | Baththa | Vijay Sethupathi | Sai Abhyankkar| Balaji Tharaneetharan
Yedhayya Saami Full Song | Ranabaali | Vijay Deverakonda, Rashmika | Rahul Sankrityan | Ajay–Atul
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…