தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிந்தாமணி விஜயாவிடம் நீங்க விதவிதமா யோகா போஸ் கொடுத்து போட்டோ எடுத்து அதை நோட்டிஸ் போட்டு மூணு பேரும் சேர்ந்து வீடு வீடா போய் கொடுத்தோம்னா நிறைய பேர் வந்து சேருவாங்க என்று சொல்ல விஜயாவும் சந்தோஷப்படுகிறார் நான் வேணும்னா போட்டோ கார் ரெடி பண்ணி அனுப்பவா என்று கேட்க வேண்டாம் அது தான் என்னோட லாஸ்ட் மருமக இருக்கா இல்ல அவ இந்த வேலைய தானே பண்ணுவா இத தவிர அவளுக்கு வேற என்ன தெரியும் அவகிட்டையே சொல்லி நான் எடுத்துக்கிறேன் என சொல்லுகிறார். மறுபக்கம் செல்வம் அவருடைய மச்சான் குவைத் நாட்டில் இருந்து வேலை செய்துவிட்டு வந்திருப்பதாக சொல்லி கார் செட்டில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.முத்து வந்தவுடன் என்னோட மச்சான் ஊர்ல இருந்து வந்திருக்கான் எல்லாரும் சொந்தங்களையும் நேரில் போய் பாக்கணும்னு சொல்றான் அதனால ஒரு வாரத்துக்கு கார் யார்காவது கொடுக்கிறது என்றால் கொடு என்று சொல்லிவிட்டு அவரை அழைத்துச் சென்று விடுகிறார். கொஞ்ச நேரத்தில் மீனா பூக்கட்டும் இரண்டு பெண்களுடன் வந்து முத்துவை சந்திக்கிறார் என்ன விஷயம் என்று கேட்க எல்லாம் உங்க அண்ணன் மேல தான் கம்ப்ளைன்ட் என சொல்லுகிறார்.
அவ மேல என்ன கம்ப்ளைன்ட் என்று கேட்க அவங்களோட கடையில இவங்க சீட்டு போட்டு இருக்காங்க ஆனா இப்போ இவங்க பையனுக்கு அடிபட்டு இருக்கு அதுக்காக ஹாஸ்பிடல் செலவுக்கு அந்த பணத்தை போய் கேட்டதுக்கு ராஜா என்ற ஒரு ஆளு பணம் கட்ட கூட துப்பில்லனா எதுக்கு காசு கட்றீங்க முழுசா கட்டிகிட்டு அதனால் பொருள் வாங்கிட்டு போங்க என்று சொல்லியதாக வந்து சொல்லுகிறார் அது எப்படி அவங்க சொல்ல முடியும் கட்டின காசை தேவை இல்லைனா கொடுக்க வேண்டியதுதானே சரி வா என்று அழைத்துச் செல்கிறார். மறுபக்கம் விஜய்யா பேண்ட் மற்றும் டி-ஷர்ட் போட்டுக் கொண்டு வந்து அண்ணாமலை எதிரில் நிற்க என்னாச்சு என்று கேட்கிறார். இதுவரைக்கும் விஜயா தான் உங்களோட பொண்டாட்டின்னு சொல்லி இருக்காங்க ஆனா இதுக்கு அப்புறம் விஜயாவோட புருஷனா நீங்க என்ற மாதிரி நான் மாற்ற போறேன் என்று சொல்லுகிறார்.
உடனே சுருதி வர சூப்பரா இருக்கீங்க ஆன்ட்டி இந்த டிரஸ் எல்லாம் என்று சொல்லுகிறார் உடனே ஸ்ருதியை தனியாக அழைத்துச் சென்று யோகா கிளாஸ் ஆரம்பிக்க போகும் விஷயத்தை சொல்லி அதற்காக சில போஸ்களை கொடுக்கிறேன் நீ போட்டோ எடுத்து கொடு என்று சொல்லி அழைத்து வந்து விஜயா ஒவ்வொரு போஸாக கொடுக்க சுருதி வளைத்து வளைத்து போட்டோ எடுக்கிறார். உடனே ரவி வந்து என்னாச்சுப்பா அம்மா சாமியாராக போறாங்களா என்று கேட்க போட்டோ சூட் எடுத்துக்கிட்டு இருக்காங்க என்று சொல்லுகிறார் எதற்காக என்று கேட்க அதெல்லாம் இப்ப யாருக்கும் சொல்ல முடியாது நீங்களே தெரிஞ்சிப்பீங்க என்று சொல்லுகிறார். மறுபக்கம் முத்து ஷோரூமுக்கு வந்து ராஜா என்பவரை அடிக்கப் போக மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் இப்போதைக்கு ஸ்டாப் மேல கை வைக்கிறீங்க என்று கேட்க முத்து நடந்த விஷயங்களை சொல்லுகிறார் ஆமா பணத்தை எப்படி திருப்பி கொடுக்க முடியும் பொருள் தான் வாங்க முடியும் என்று சொல்லி இப்ப அவங்க பையனுக்கு அடிபட்டு இருக்கு வேற என்ன பண்ண முடியும் என்று கேட்கிறார்.
அதெல்லாம் கொடுக்க முடியாது என மனோஜ் ரோகிணி சொல்ல ஒரு கட்டத்திற்கு மேல் முத்து நான் அப்பாகிட்ட பேசுகிறேன் என சொல்ல உடனே மனோஜ் அப்பா கிட்டயா அதெல்லாம் வேணாம் எவ்வளவு காசு தரவேண்டும் என்று கேட்க 25 ஆயிரம் என்று சொல்ல ஆஃப்டர் அவ்வளவு காசு தானே என்று சொல்லிவிட்டு மனோஜ் எடுக்கப் போக அங்கு பணம் இல்லாததால் சரி நீ போய் லாக்கர்ல இருக்குற பணத்தை எடுத்துட்டு வா என்று ரோகினிடம் சொல்ல ஆயுத பணம் இல்ல நம்ம அப்புறமா கொடுத்துக்கலாம் என சொல்லி மீண்டும் முத்துவிடம் பேச வர மனோஜ் வேண்டாம் நான் போய் லாக்கர் ல இருந்து எடுத்துட்டு வரேன் என சொல்லுகிறார். லாக்கரை போய் திறந்து பார்க்க அதில் பணம் இல்லாததால் மனோஜ் அதிர்ச்சி அடைந்து வந்து ரோகிணியிடம் பணம் இல்லை என்று சொல்ல ரோகினி என்ன செய்வது என தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறார்.
உடனே முத்து என்னடா கத விட்டுக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க நிஜமாவே அதுல வச்சு பணத்தை காணோம் என்று சொல்லுகிறார். லாக்கரை உடைத்த மாதிரியும் தெரியல என்று சொல்ல அப்ப பணம் எங்க போயிருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்க உடனே ரோகினி ராஜா ராணி மீது பழியை தூக்கி போட்டு விடுகிறார். இதுக்கு தான் நீங்க நைட்டு எல்லாம் தங்கறன்னு சொன்னீங்களா என்று சொன்ன ஐயோ நாங்க திருடல அக்கா என்று அவர்கள் எவ்வளவு சொல்லியும் ரோகினி பழி போடுகிறார். பிறகு என்ன நடக்கிறது? மனோஜ் என்ன சொல்லுகிறார்?முத்துவின் பதில் என்ன?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.