தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவை சந்தித்து டெக்கரேஷன் செய்ய உதவிய மீனாவின் பிரண்ட்ஸ் வந்து மீனாவிடம் இத்தனை நாளா நாங்க கேட்காம நீ காசு கொடுத்துடுவ மீனா ஆனா இப்போ என் பொண்ணுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாம இருக்கு டெஸ்ட் எடுக்கணும் என்று சொல்லுகிறார் மற்றொரு பெண் வடிகட்டணும் மீனா என்று சொல்ல அதற்கு மீனா மண்டபம் காரன் காசு கொடுக்கல என்று சொல்ல சரி நாங்க வெளியே ரெடி பண்ணிக்கிறோம் மீனா என்று அவர்கள் செல்ல போக நான் அவர்களை மீனா தடுத்து நிறுத்துகிறார்.
அம்மா கிட்ட வாங்கி தரேன் வாங்க என்று அழைத்துச் சென்று மீனா அம்மா வீட்டுக்கு போக அங்கு ரூ.3,000 இருக்குமா என்று கேட்க மீனாவின் அம்மாவிடம் 1800 ரூபாய் இருக்கிறது. உடனே சத்யா 500 ரூபாய் கொடுக்கிறார் சீதா 700 ரூபாய் கொடுக்க 3 ஆயிரம் ரூபாயை அவர்களிடம் கொடுத்து அனுப்பி வைக்கிறார். மீனாவின் அம்மா என்னம்மா ஆச்சு பணம் கிடைச்சுதா என்று கேட்க இரண்டு மூன்று தடவை பேசிட்டேன் ஒத்து வர மாட்டேங்குறான் என்று சொல்ல இதுக்கு என்ன பண்ண போற என்று கேட்டவுடன் வைரத்தை வைரத்தால் தான் எடுக்கனும் என்று சொல்லி மீனா ஒரு திட்டம் போட்டு சீதாவிடம் சிந்தாமணியில் நம்பரை கொடுத்து ஒரு பெரிய ஆர்டர் கிடைச்சிருக்கு அதை நீங்கதான் பண்ணி தரணும் என்று சொல்லி போன் போட்டு பேசுகிறார். உடனே அவரும் மேனேஜரை கவனிக்கணும் அதுக்கு எல்லாம் தனியா இருக்கு சரி நான் பாத்துக்கிறேன் உங்களுக்கு தெரிஞ்சவங்க கல்யாணமா என்று கேட்டுவிட்டு இதே மாதிரி நிறைய ஆர்டர் புடிச்சு கொடுத்தீங்கன்னா உங்களுக்கும் கமிஷன் தரேன் என்று சீதாவிடம் சொல்லுகிறார்.
மீனா அதனை ரெக்கார்ட் செய்து விட்டு சீதாவை அழைத்துக் கொண்டு ஸ்ருதியிடம் நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்ல சுருதி நம்ப வச்சு ஏமாற்றி இருக்காங்க முதல்ல உங்களை போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கணும் என்று சொல்ல அதெல்லாம் வேண்டாம் சுருதி நான் தெரிஞ்ச போலீஸ் கிட்ட கேட்டுட்டேன் நான் சைன் பண்ணி கொடுத்து அதனால அவங்க பக்கம் தான் கேஸ் ஜெயிக்கும்னு சொல்லிட்டாங்க என்று சொல்லுகிறார் இப்போ இதுக்கு என்ன பண்றது என்று சொல்ல நீங்கதான் எனக்கு ஒரு உதவி பண்ணனும் என்று கேட்கிறார்.
உதவியா என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லுங்க என்று சொல்ல போனில் சிந்தாமணி வாய்ஸ் ரெக்கார்ட் செய்து இருந்ததை ஸ்ருதியிடம் போட்டுக்காட்டி இவங்க வாய்ஸ்ல நீங்க மண்டபம் மேனேஜர் கிட்ட பேசணும் என்று சொல்ல அதல ஈஸியா பேசிடுவேன் என்று சொல்லுகிறார். உடனே சுருதி மேனேஜருக்கு போன் போட்டு சிந்தாமணி போல் பேசி பணம் கொடுத்துட்டியா மீனாக்கு என்று கேட்க ஆர்டர் குடுத்தவங்க கிட்ட இருந்து பணம் வந்துடுச்சு ஆனா நீங்க சொன்னதுனால தான் இன்னும் மீனாவுக்கு கொடுக்காம இருக்கேன் என்று சொல்ல உங்களுக்கு சேர வேண்டிய பணத்தை வீட்டுக்கு எடுத்துட்டு வந்துருவா என்று கேட்கிறார் வேண்டாம் பொன்னியம்மன் கோவிலுக்கு எடுத்துட்டு வர சொல்லி சிந்தாமணி வாய்ஸில் சுருதி சொல்லுகிறார். உடனே சிந்தாமணியை வர வைக்க சீதா பொண்ணு வீட்ல பேசிட்டேன் அவங்க அட்வான்ஸ் கொடுக்க பொன்னியம்மன் கோவிலுக்கு வர சொல்றாங்க என்று சொல்லி சிந்தாமணியையும் அதே கோவிலுக்கு வர வைக்கின்றனர். உடனே மீனா இன்னொரு முக்கியமான ஆளு கிட்ட பேசணும் என்று வெளியில் வந்து யாரிடமோ போனில் பேசுகிறார் உடனே சீதா மற்றும் சுருதி இருவரும் வெளியில் வர மீனாவிடம் சுருதி நீங்க ரொம்ப ஃக்ளவரா யோசிக்கிறீங்க எந்த ஹெல்ப் வேணாலும் என்கிட்ட கேளுங்க என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கம் இவர்களின் வருகைக்காக மீனாவும் சீதாவும் கோவிலில் காத்துக் கொண்டிருக்க மேனேஜர் வந்து விட உடனே சிந்தாமணியும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுகிறார். மீனாவலையில் சிந்தாமணி சிக்கினாரா? மீனா போன் பண்ணி வர சொன்ன நபர் யார்? அவர் என்ன சொல்லுகிறார்?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.