siragadikkaaasai serial episode update 13-11-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மகேஸ்வரி ரோகினிக்கு போன் போடுகிறார் கிளையண்ட் போன் பண்ணி இருக்காங்க பேசி விட்டு வருகிறேன் என மனோஜிடம் சொல்லிவிட்டு தனியாக வந்து ரோகினி பேசுகிறார். அப்போது ரோகிணியின் அம்மா போனை வாங்கி நம்ம ஊரு கோவில் பக்கத்துல ஒரு டெத் ஆனதுனால ரெண்டு கிலோமீட்டர் தள்ளி ஒரு கோவிலில் வந்து தான் ஏற்பாடு பண்ணி இருக்கோம் குளக்கரை பக்கத்துல ஆலமரம் இருக்குற கோவிலில் தான் என்று சொல்லுகிறார் உடனே ரோகினையும் நாங்களும் அந்த கோவில்ல தான் இருக்கும் என்னம்மா இப்படி பண்ணிக்கிட்டு இருக்க என்று டென்ஷன் ஆகிறார்.
மொத்த குடும்பமும் இங்கே இருக்கும்போது நான் எப்படி வர முடியும் என்று கேட்க கொஞ்ச நேரத்துல வந்துட்டு போயிடு கல்யாணி நான் ஏற்பாடெல்லாம் பண்ணிட்டு உனக்கு சொல்றேன் பத்து நிமிஷத்துல முடிச்சுட்டு போயிடு என்று சொல்ல ரோகினியும் வேறு வழி இல்லாமல் சரி என சொல்லி போனை வைக்கிறார் மறுபக்கம் பூஜை ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க மனோஜ் ரோகிணியை கூப்பிடுகிறார் உடனே எனக்கு கொஞ்சம் வயிறு சரியில்லை உனக்கு போயிட்டு வந்துட்டேன் என சொல்லி வந்து விடுகிறார் மறுபக்கம் பூஜையை ஏற்பாடு செய்து கொண்டிருந்த ஐயர் தண்ணீர் எடுத்துக்கொண்டு வர சொல்லுகிறார் முத்து நான் எடுத்துட்டு வரேன் என்று சொல்ல மருமகள் தான் போகணும் என்று சொன்னவுடன் மீனா நான் போகிறேன் என்று சொல்லி குடத்தை வாங்கிக்கொண்டு குளக்கரைக்கு வருகிறார்.
பிறகு ரோகிணி குடும்பத்தினருடன் உட்கார்ந்த அவருடைய அப்பாவுக்கு தெவசம் கொடுத்துக்கொண்டு இருக்க மீனா பார்த்து அதிர்ச்சியாக நிற்கிறார் அப்போது ரோகிணியின் அம்மா என்னோட பொண்ணு கல்யாணி இது அவ பையன் கிரிஷ் ஒரே பொண்ணு தான் என்று சொல்வதைக் கேட்டு மீனா அதிர்ச்சியாகி நிற்கிறார். உண்மையை தெரிந்து கொண்ட மீனா எதுவும் பேசாமல் நிற்க பிறகு தெவசம் முடிந்தவுடன் ஐயர் சென்றுவிட இவர்கள் அனைவரும் மீனாவை கவனித்து விடுகின்றனர் பிறகு ரோகிணி மீனாவின் எதிரில் வந்து கொஞ்ச நேரம் அமைதியாக நிற்க மீனா ரோகினி சொன்ன பொய்களை நினைத்துப் பார்க்கிறார். நீங்க எப்ப வந்தீங்க மீனா இவங்க இங்க இருந்தாங்க என்று பேச ஆரம்பிக்க இன்னும் எவ்வளவு பொய் சொல்லுவ என்று கன்னத்தில் அறைய ரோகினி கீழே விழுந்து விடுகிறார். மீண்டும் ரோகினி பேச வர மீனா கையை ஓங்கி கொண்டு போக அவரது அம்மா வேண்டாம் என தடுத்து நிறுத்துகிறார் உடனே இவளை விட நீங்க ரொம்ப அழகா பொய் சொன்னீங்க இவ தான் ஃபாரின்ல இருக்குற உங்க பொண்ணா என்று கேட்க ரோகினி அம்மா அமைதியாகி விடுகிறார்.
உடனே ரோகினி மீனாவிடம் கெஞ்சி பேசியும் உன்னை மாதிரி ஒரு ஆள் நான் பார்த்ததே கிடையாது முட்டாள் ஆக்கி இருக்க எவ்வளவு பொய் சொல்லி இருக்க என்று சொல்லுகிறார் நான் இந்த விஷயத்தை வீட்ல சொல்லாம விடமாட்டேன் நீ வேணா இந்த குடும்பத்துக்கு உண்மையா இல்லாம இருக்கலாம் ஆனா நான் இந்த குடும்பத்துக்கு உண்மையான மருமகளா இருக்கணும்னு நினைக்கிறேன் என்று சொல்லுகிறார். உடனே ரோகிணி என்ன சொல்லுகிறார்?அதற்கு மீனாவின் முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஜெயிலர் 2 படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
பெண் வீட்டாரிடம் மனோஜ் குறித்த உண்மையை கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…